ஒரே நாளில் நாடற்றவரான தமிழர்.. இந்தியாவிலேயே பிறந்தாலும் இதுதான் நிலமையா.. என்ன நடந்தது?
சென்னை: இந்தியாவிலேயே பிறந்த போதிலும் ஒரே நாள் இரவில் நாடற்றவராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் பகிர்சன் என்ற வாலிபர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரது பெற்றோர்கள் இலங்கை அகதிகளாக தமிழ்நாடு வந்தவர்கள். இவருக்கு இந்திய பாஸ்போர்ட் எல்லாம் கிடைத்த போதிலும் சமீபத்தில் தனது மனைவியின் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்கும் போது பாஸ்போர்ட் ரத்து ஆகியுள்ளது. பகிர்சன் நாடற்றவராக அறிவிக்கப்பட்டது ஏன்? இந்தியாவில் இலங்கை அகதிகளுக்கான விதி என்ன சொல்கிறது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக உயிர் பிழைக்கவும், வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழர்கள் பல ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்கள்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளித்து, சட்டப்பூர்வ இந்திய குடிமக்களாக கருதவேண்டும் என்பது நீண்ட காலமாக வைக்கப்பட்டும் வரும் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனினும், இது தொடர்பாக தெளிவான வரையறைகள் இல்லாததால், இந்தியாவிலேயே பிறந்தவர்களுக்கு கூட குடியுரிமை கிடைக்க முடியாத நிலையே உள்ளது.
இந்த நிலையில், இலங்கை அகதியாக தமிழ்நாட்டுக்கு பெற்றோர் வந்த நிலையில் இந்தியாவில் பிறந்த ஆர். பகிர்சன் (வயது 34) என்பவர் தற்போது நாடற்றவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் பிறந்தார்
சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பகிர்சன். இவருக்கு இந்திய குடிமகனுக்கு உள்ள பல ஆவணங்கள் உள்ளன. 1991 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட போது பகிர்சனின் பெற்றோர் முகாமிற்கு வந்துள்ளனர். அப்போது நிறைமாத கர்ப்பிணியாக தாய் இருந்த நிலையில், 1990 ஆம் ஆண்டு பகிர்சன் பிறந்தார்.
இந்தியாவிலேயே பிறந்த பகிர்சன், பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பை சென்னையில் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இவரிடம் பாஸ்போர்ட்டும் உள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு பகிர்சனுக்கு இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இலங்கையில் இந்த திருமணம் நடைபெற்றது.
பெற்றோர் இந்தியர் இல்லை என்பதால்
திருமணம் முடிந்த பிறகு பாஸ்போர்ட்டில் தனது மனைவியின் பெயரை சேர்க்க பகிர்சன் விண்ணப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பகிர்சனுக்கு மனைவியின் பெயரை சேர்த்து பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஸ்போர்ட் வழங்கிய பிறகு, பாஸ்போர்ட் பெற்று இருப்பது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே பிறந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கேயே வசித்தாலும், பெற்றோர் இந்தியர் இல்லை என்பதால், பகிர்சன் இந்திய குடிமகனாக கருதப்பட மாட்டார் என்று அவரை நாடற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமைக்காக பகிர்சன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இந்திய குடியுரிமையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை சட்டம்
ஏனெனில், இந்திய குடியுரிமை சட்டத்தின்படி, 1987 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு இந்தியாவில் பிறந்த ஒருவரது பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகனாக கருதப்படுவார். பெற்றோர் இருவரும் சட்டவிரோத குடியேறிகளாக இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான சட்டக் கொள்கை இல்லை என்பதால், இலங்கை தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்தாலும், அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுகிறார்கள். இந்திய குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 2(1)(பி) நாடற்றவர்களையும், அகதிகளையும் 'சட்டவிரோத குடியேறிகள்' என்று கூறுகிறது.
அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறேன்
தன்னை நாடற்றவர் என்று அறிவித்தது பற்றி பகிர்சன் கூறுகையில், "நான் என்னை இந்திய குடிமகனாகவே நினைக்கிறேன். இந்திய குடிமகன் இல்லை என்று நான் எங்கும் கூறவில்லை. அனைத்து ஆவணங்களும் முறையாகவே பெற்றுள்ளேன். எனது பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதை எங்கும் மறைக்கவில்லை.
அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் சென்னை காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறோம். வசிக்கும் இடத்தையும் மறைக்கவில்லை. ஆனால் முதல் முறையாக 'நாடற்றவன், இந்தியன் இல்லை' என்று கூறிய போது, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை." என்றார்.
இந்த விஷயம் தெரிந்ததுமே, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து இருந்தார். இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த பிறகு, சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது போன்ற காரணங்களுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தடை விதித்த நீதிமன்றம்
திருச்சி முகாமில் அவரை அடைக்க இருப்பதாக ஜாமீன் மனு விசாரணையில் அரசு கூறியுள்ளது. ஆனால், இப்படி செய்தால் தனது பெற்றோரை கவனித்துக்கொள்ள முடியாது, பணிக்கு செல்ல முடியாது என்று ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.
1987 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் எந்தவித கூடுதல் நிபந்தனைகள் இன்றி குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சட்டம் திருத்தப்பட்டதன் காரணமாக பகிர்சன் நாடற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். பகிர்சன் தற்போது குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 6ன் கீழ் இயல்புபடுத்துதல் அடிப்படையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.
வழக்கறிஞர்கள் சொல்வது என்ன
Naturalization என்ற இயல்புபடுத்துதல் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கான நிபந்தனைகளை அனைத்தையும் பகிர்சன் பூர்த்தி செய்கிறார். அதாவது, குடியுரிமை விண்ணப்பத்திற்கு முன்பாக ஒரு வருட காலம் தொடர்ந்து இந்தியாவில் வசிக்க வேண்டும். அதற்கு முன்பு 14 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ள நிலையில், பகிர்சன் இதன் கீழ் வருகிறார். இந்த விவகாரத்தில் இலங்கை அகதிகளுக்கு உரிமை இல்லாததால் அரசின் கருணையையே நம்பி இருக்க வேண்டியது உள்ளது என்று சொல்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications