சில மாதங்களுக்கு முன்பே விவாகரத்து.. சோயிப் மாலிக்-சானியா மிர்சா பிரிவுக்கு காரணமான கள்ளக்காதல்
சென்னை: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தான் சோயிப் மாலிக் தனது 2வது மனைவி சானியா மிர்சாவை விவாகரத்து செய்தாரா? இல்லையா? இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் டென்னிஸ் வீராங்கனையாக ஜொலித்தவர் சானியா மிர்சா. ஹைதரபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2010ம் ஆண்டில் திருமணம் செய்தார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை அவர் கரம் பிடித்தார். சோயிப் மாலிக் தனது முதல் மனைவி ஆயிஷா சித்திக்கை விவாகரத்து செய்த நிலையில் சானியா மிர்சாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதிக்கு இசான் மிர்சா மாலிக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தான் சானியா மிர்சா-சோயிப் மாலிக் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.
மேலும் சோயிப் மாலிக்குடன் இருக்கும் போட்டோக்களை சானியா மிர்சா இன்ஸ்டாவில் இருந்து நீக்கியது, பயோவில் அவரது பெயரை தூக்கியது, விவாகரத்து என்பது கடினமானது என சானியா மிர்சா பதிவிட்டது உள்ளிட்டவை விவாகரத்து தொடர்பான செய்திக்கு வலு சேர்த்தது. இதற்கிடையே தான் சோயிப் மாலிக் 3வது திருமணம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் சின்னத்திரை நடிகையான சனா ஜாவேத்தை அவர் கரம்பிடித்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை அவர்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு தங்களின் திருமணத்தை வெளியுலகிற்கு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தான் பலருக்கும் சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதி விவாகரத்து செய்து கொண்டார்களா? இல்லையா? என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு சானியா மிர்சாவின் குடும்பத்தினர் பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளனர். மிர்சா குடும்பம் மற்றும் சானியா குழு என்ற பெயரில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் "சானியா எப்போதுமே தனது தனிப்பட்ட வாழ்க்கையை மக்கள் பார்வையில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார். சோயிப்பும், அவரும் விவாகரத்து பெற்று கொண்டது தொடர்பான தகவலை இன்று பகிர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சோயிப்பின் புதிய பயணத்துக்கு சானியா வாழ்த்தியுள்ளார். சானியாவின் இந்த முக்கியமான காலக்கட்டத்தில் ரசிகர்கள், நலம் விரும்பிகள் யூகங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். அவரது பிரைவேசியை மதிக்கும்படி கேட்டு கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சோயிப் மாலிக்-சானியா மிர்சா ஆகியோர் சில விவாகரத்து பெற்று கொண்டது உறுதியாகி உள்ளது.
அதேபோல் சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் ஆகியோரின் பிரிவுக்கு என்ன காரணம் என்ன? என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது சோயிப் மாலிக்கு திருமணத்தை மீறிய உறவில் (கள்ளக்காதல்) இருந்துள்ளார். இதனை அவர் கைவிடவில்லை. இதில் சானியா மிர்சா நொந்துப்போனதாக சோயிப் மாலிக்கின் சகோதரி தெரிவித்துள்ளார். இதனால் கள்ளக்காதல் தான் இருவரின் பிரிவுக்கும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
மேலும் சோயிப் மாலிக்கின் இந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. இதனால் சோயிப் மாலிக்-சனா ஜாவேத் திருமணத்தில் குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே தான் சானியா மிர்சாவை பிரிந்த சோயிப் மாலிக்கை ரசிகர்கள் வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications