கூட்டணியில் திடுக் திடுக்.. குழம்பிப்போன பாஜக.. திக்கி திணறிய அதிமுக.. 2 பக்கமும் மொத்தமா போச்சே!
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக தேசிய பாஜக தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பது தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
சமீபத்தில் பாஜக உடன் கூட்டணி உடைந்தது. பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று அதிமுக அறிவித்தது. அதன்பின் மறுநாளே அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அதிமுகவினர் பேச கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக செய்திகள் வந்தன.

இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணி குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் நேற்று மழுப்பலாக பேசினார். நேற்று அவர் பேச்சில், அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா ? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது! கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான்.
இபிஎஸ்ஸை அடுத்த முதல்வராக்குவோம் என நான் கூற முடியாது. நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை. என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக தேசிய பாஜக தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பது தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
என்ன குழப்பம்: அதன்படி எடப்பாடி பழனிசாமியை கூட்டணி மீட்டிங்கிற்கு பாஜக அழைக்கிறது. டெல்லியில் பிரதமர் மோடிக்கு அருகில் கூட இடம் கொடுக்கிறது. அமித் ஷா மீண்டும் அழைத்து ஆலோசனை செய்கிறார். ஆனால் இங்கே அண்ணாமலை அதிமுக தலைவர்களுடன் மோதலில் ஈடுபடுகிறார்.
இதனால் அண்ணாமலையை பின்பற்றி அதிமுகவை விமர்சனம் செய்வதா? அல்லது மோடி, அமித் ஷாவை பின்பற்றி அதிமுகவுடன் நட்பாக செல்வதா என்று தெரியாமல் பாஜகவினர் குழம்பிப்போய் இருக்கிறார்களாம். தமிழ்நாட்டில் பாஜகவால் அதிமுக இல்லாமல் போட்டியிட முடியாது. அப்படி இருக்க அதிமுகவை எதிர்ப்பது சரியா? அல்லது அண்ணாமலை பாணியில் பாஜகவை தனியாக வளர்த்து எடுப்பதா? என்ற குழப்பத்தில் பாஜக தமிழ்நாட்டு தலைவர்கள் இருக்கிறார்களாம்.
அதிமுகவினர் குழப்பம்: இன்னொரு பக்கம் அதிமுகவினரும் குழம்பிப் போய் இருக்கிறார்களாம். ஒருநாள் ஜெயக்குமார் தோன்றி.. கூட்டணி இல்லை. இது கட்சியின் நிலைப்பாடு என்கிறார். மறுநாளே செல்லூர் ராஜு மோடிதான் பிரதமர் ஆக வேண்டும். பாஜகவுடன் நாங்கள் சுமுகமாகவே இருக்கிறோம் என்று இருக்கிறார்.
இப்போ கூட்டணி இருக்கா.. இல்லையா? பாஜகவுடன் நட்பாக செல்ல வேண்டுமா? கூடாதா என்று தெரியாமல் அதிமுக தொண்டர்கள் குழம்பிப்போய் உள்ளனர். இரண்டு கட்சியிலும் தொண்டர்கள் இதனால் கடுமையான குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது?: முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திடீர் திருப்பம்: இந்த நிலையில் திடீர் திருப்பமாக கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications