'அந்த செல்லத்தை தூக்கிட்டு வாங்க'.. காதலிக்காக.. எந்த காதலனும் செய்யாத சூப்பர் விஷயம்
சென்னை: காதலன் தனது காதலிக்காக ஒரு குறை தீர்க்கும் போர்ட்டலை உருவாக்கி உள்ளார். அதாவது காதலி புகார் தெரிவிப்பதற்காகவே ஒரு இணையதளத்தையே உருவாக்கி உள்ளார். அதில் பதிவிடப்பட்ட பல்வேறு தகவல்களை ஸ்கிரீன் ஷாட்களை அந்த இளம் பெண் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்.. இந்த உலகம் எதை நோக்கி போகுது.. என்ன மாதிரியான காதல் சார் இது.. என்று விவாதங்கள் நடந்து வருகிறது. பலரும் இணையதளத்தில் இது பற்றி விவாதித்து வருகிறார்கள்.
சேஹாஜ் என்ற பெண்ணும், இஷான் என்ற பையனும் காதலித்துள்ளனர். இதில் இஷான் தனது காதலி சேஹாஜ் தனது குறைகளை தெரிவிப்பதற்காகவே இரு இணையதளத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். அந்த இணையதளம் குறித்து பெருமையுடன் சேஹாஜ் பகிர்ந்துள்ளார்.

இதில் இளம் பெண் சேஹாஜ் கூறுகையில், "நண்பர்களே, என் காதலன் மிகவும் கியூட்டானவராக இருக்கிறார். அவர் எனக்காக ஒரு குறை தீர்க்கும் போர்ட்டலை உருவாக்கினார். அதில் நான் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்க முடியும்" என்று கூறினார்.
சேஹாஜ் பகிர்ந்து கொண்ட ஸ்கிரீன் ஷாட்களின்படி, "உங்களை நம்முடைய சொந்த குறை தீர்க்கும் போர்ட்டலுக்கு வரவேற்கிறோம், உங்கள் அன்புக் குறைகளை நீங்கள் சமர்ப்பிக்கலாம். உங்கள் கணக்கை லாக் இன் செய்யவும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த போர்ட்டலில் தலைப்பாக வேண்டியதை செலக்ட் செய்யலாம், உங்களுக்கு என்ன பிரச்சனை என்று காட்டுகிறது. மூன்றாவதாக என்ன மனநிலையில் உள்ளீர்கள். என்ன பிரச்சனை என்பதை குறிப்பிடும் படியாக படிவமும் உள்ளது. அடுத்து குறைகளை சமர்ப்பிக்கப்பட்டதும் நன்றி சேஹாஜ் என்று தோன்றும்.. உங்கள் குறை இஷானுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மெசேஜ் வரும். அவர் மிக விரைவில் உங்களிடம் பதில் அளிப்பார். இன்னொரு குறையை சமர்ப்பிக்கவும் என்று மெசேஜ் வரும்.
இந்தப் பதிவு மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன் ஒருவர் ஆச்சரியத்துடன் கூறுகையில், உண்மையிலேயே அவர் உங்களை நம்ப முடியாத அளவிற்கு நேசிக்கிறார் என்று தெரிவித்தார். இன்னொரு நெட்டிசன், "இந்த வகையான காதல் என்னைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று திகைப்புடன் தெரிவித்தார். இன்னொரு நெட்டிசன், உங்கள் முதல் குறை என்பது கற்பனையில் இருக்க வேண்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், எனது அப்பா தனது தொலைபேசியில் ஒரு பட்டனை அழுத்தினால் ஒரு கப் காபி குடிக்க வேண்டும் என விரும்பினார், அதனால் நான் அவருக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கினேன், அது என் அம்மாவுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியது. என் அப்பாவுக்கு ஒரு கப் காபி தர சொன்னது. அந்தப் படிவம் இப்போதும் செயல்படுகிறது என்று கூறினார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "அந்த செல்லத்தை தூக்கிட்டு வாங்க....அரசு அவருக்கு விரைவில் பணியமர்த்த வேண்டும்.. ரயில்வே, பள்ளங்கள், உடைந்த தெருவிளக்குகள் போன்றவற்றுக்கு இதேபோன்ற குறை தீர்க்கும் போர்ட்டல் நமக்குத் தேவை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications