சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிராமணர்கள் இருமுறை பிறக்கிறார்கள்- கேடு விளைவிக்காதவர்கள்.. கேரள நீதிபதி பேச்சால் சர்ச்சை

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு ஜாதிசங்க மாநாட்டில் பங்கேற்று கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் பேசிய பேச்சுகள் சர்ச்சையாகி உள்ளன. ஜாதிசங்க மாநாட்டில் பங்கேற்ற கேரளா நீதிபதி சிதம்பரேஷ், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

கேரளாவின் கொச்சியில் தமிழ் பிராமணர்கள் சர்வதேச மாநாடு கடந்த 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் நீதிபதிபகள் சிதம்பரேஷும் அனிதா சுமந்தும் பங்கேற்றுள்ளனர்.

இம்மாநாட்டில் நீதிபதி சிதம்பரேஷ் பேசியதாவது:

பிராமணர்கள் பூர்வ ஜென்ம சுக்ருதத்தால் இருமுறை முறை பிறக்கின்றனர். பிராமணர்களுக்கு சிறப்பு அம்சங்களாக உயர்ந்த சிந்தனை, நல்ல குணம், சுத்தமான சைவ உணவுப் பழக்கம், கர்நாடக சங்கீதம் மீதான ஈர்ப்பு ஆகியவற்றை கொண்டவர்கள்.

நல்ல குணம் உடைய பிராமணர்கள் பிரிவினையை ஆதரிக்க மாட்டார்கள். பிராமணர்கள் எப்போதும் மதவாதிகளாகவும் இருந்ததில்லை, மக்களை நேசிப்பவர்கள், பிறருக்கு கேடு விளைவிக்காதவர்கள், அகிம்சையை கடைபிடிப்பவர்கள்.

பிராமணர்களுக்கே உயர் பொறுப்பு

பிராமணர்களுக்கே உயர் பொறுப்பு

நல்ல காரியங்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யும் பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும், அரசமைப்புச் சட்டப் பொறுப்பில் இருப்பதால் நான் இட ஒதுக்கீடு பற்றி கருத்துக்கூற முடியாது.

ஜாதிய இடஒதுக்கீடு

ஜாதிய இடஒதுக்கீடு

ஆனால், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரவேண்டுமா? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பதை இந்த சமூகம்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஒரு பிராமண சமையகாரரின் மகன் பொருளாதாரத்தில் பின் தங்கியவராக இருந்தாலும் இடஒதுக்கீட்டு கிடைக்காது,

இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

ஆனால் பிற்படுத்தப்பட்ட ஏழை வியாபாரி மகனுக்கு இடஒதுக்கீடு கிடைக்கிறது. குரல் உயர்த்திப் பேசவேண்டும். கேரளா பிராமணர்கள் சங்கத்தின் தலைவர் கரிம்புலா ராமன் கூறியதன் அடிப்படையில் பார்த்தால் அழுகிற குழந்தைதான் பால்குடிக்கும்.

இணைய வேண்டும்

இணைய வேண்டும்

நாம் தொடர்ந்து மைய நீராட்டத்தில் இருக்க வேண்டும்; தனி ஆவர்த்தனமாக பாடாமல் சேர்ந்து பாட வேண்டிய காலம் வந்துவிட்டது. இவ்வாறு சிதம்பரேஷ் பேசினார்.

டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை

சிதம்பரேஷின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜாதி சங்க மாநாட்டில் பங்கேற்ற சிதம்பேஷ், அனிதா சுமந்த் இருவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

English summary
Kerala HC judge V Chidambaresh at Tamil Brahmins' Global Meet on 19July told that Who is a Brahmin? Brahmin is twice born due to Poorva Janma Sukrutham.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X