தீவிரவாதிகள் உடனான சண்டையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் சக்திவேல்.. இன்று திருத்தணியில் உடல் அடக்கம்!
சென்னை: திருத்தணியைச் சேர்ந்த சக்திவேல், பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த திருத்தணி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் சக்திவேலின் உடல் இன்று சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தாய்நாட்டைக் காக்கும் பணியில் பயங்கரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர் சக்தி வேலுக்கு ராணுவத்தினர், பொதுமக்கள் வீர வணக்கம் செலுத்துகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சத்திரம் ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிவேல் என்பவரின் மகன் சக்திவேல் (30). இவர், இந்திய ராணுவத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து ஜம்மு- காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில், சக்திவேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இந்தச் சண்டையின்போது தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர் சக்திவேல், தீவிரவாதிகளின் எதிர் தாக்குதலில் குண்டடிபட்டு வீர மரணம் அடைந்தார்.
இந்த தகவல், இந்திய ராணுவம் சார்பில், சக்திவேல் குடும்பத்தினருக்கும், திருத்தணி காவல் நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடல் ஜம்மு, காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்து, விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
சொந்த ஊரான சத்திரம் ஜெயபுரத்தில் இன்று (டிசம்பர் 6) குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வீரமரணம் அடைந்த சக்திவேலுக்கு தேவி (26) என்ற மனைவியும், ஆஷிகா செர்லின் (4), லெனின் அக்ரன் (2) என இரு குழந்தைகளும் உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications