Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100% அட்டென்டன்ஸ்; வெளியானது புள்ளிவிவரம் - இதுதான் சமூகநீதி என்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து புதிய வரலாறு படைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்போது இத்திட்டம் திட்டமானது தமிழகம் முழுவதும் 1,543 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு 1,14,095 மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 நீதிக்கட்சி செய்த மாற்றம்:

நீதிக்கட்சி செய்த மாற்றம்:

திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில்தான், அதாவது 1921 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு முதன்முதலாகச் சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது செயல்படுத்தப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை முதன்முதலாகத் தொடங்கிவைத்தார்.

பல குழந்தைகள் பள்ளிக்குக் காலை உணவை உட்கொள்ளாமலே வருவதால், அவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. அதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் இதனைச் செயல்படுத்தினார். தற்போது ஸ்டாலின் கொண்டுவந்துள்ள இந்தக் காலை உணவுத் திட்டத்தால், பள்ளிக்கு வருகைதரும் குழந்தைகளின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள 'முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் மாணவர் வருகைப் பதிவில் ஏற்பட்டுள்ள மாற்றம்' என்ற அறிக்கையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்துள்ள காலை உணவுத்திட்டத்தால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களின் வருகைப் பதிவானது அதிகரித்துள்ளதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

 மு.க.ஸ்டாலின் செய்த மாற்றம்:

மு.க.ஸ்டாலின் செய்த மாற்றம்:

இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 அரசுப் பள்ளிகளில், 1,319 பள்ளிகளில் கடந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரையான வருகைப் பதிவுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையான மாதங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் வருகை முன்பைக் காட்டிலும் அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் சுமார் 217 பள்ளிகளின் வருகைப் பதிவேட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அக்குழு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகத் திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவாரூர் ஆகிய ஊர்களில், இத்திட்டமான செயல்படுத்தப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலும் 100% வருகைப்பதிவு கிடைத்துள்ளது. இந்த மாவட்டங்களைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் 98.5%, கரூரில் 97.4% , நீலகிரியில் 96.8% என்ற அளவிலும் மாணவர்களின் வருகைப்பதிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் 1,086 பள்ளிகளில், வருகைப்பதிவின் அதிகரிப்பு 20% வரையும் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 22 பள்ளிகள் 40% க்கும் அதிகமாக வருகைப் பதிவு உயர்ந்துள்ளது.

இது குறித்து மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "இந்தக் கணக்கெடுப்பு 1,543 பள்ளிகளில் படிக்கும் பயனாளர்கள் 1 முதல் 2 கிமீ வரை உள்ள சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பிள்ளைகளைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

 ஜெயரஞ்சன் தந்த புள்ளிவிவரங்கள்:

ஜெயரஞ்சன் தந்த புள்ளிவிவரங்கள்:

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் 25 மாணவர்கள் வரை சேர்க்கை அளவு உள்ள பள்ளிகளை எடுத்துக் கொண்டோம். அதில் 75%க்கும் மேலாக மாணவர்களின் வருகை பதிவாகி இருக்கவேண்டும் என்றும் அளவு நிர்ணயம் செய்திருந்தோம். அதனடிப்படையில் காலை உணவுத் திட்டத்தால் பலன்பெறும் 72 பள்ளிகளில் வருகைப் பதிவானது அதிகரித்துள்ளது என உணர்ந்தோம்.

அதாவது காலை உணவுத்திட்டம் செயல்படும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள, இத்திட்டம் செயல்படாத 412 பள்ளிகளோடு ஒப்பிட்டு தரவுகளைச் சேகரித்தோம். அதில் 72 பலன்பெறும் பள்ளிகளில் 77% பள்ளிகளில் வருகைப்பதிவு உயர்ந்துள்ளதைக் கண்டறிந்தோம்" என்கிறார்

இத்திட்டம் மூலம் முதல் கட்டமாக சுமார் 1.14 லட்சம் மாணவர்களும், இரண்டாம் கட்டமாக சுமார் 56,000 மாணவர்களும் பயனடைந்துள்ளனர்.

"சராசரியாக, சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இப்போது நாங்கள் செய்துள்ளது முதற்கட்ட ஆய்வுதான்; இந்தத் திட்டம் குறித்து வருங்காலங்களில் கணக்கெடுப்புகள் தொடரும்" எனச் சுட்டிக்காட்டுகிறார் ஜெயரஞ்சன்.

மேலும் அவர் ஒரு மாணவருக்கு ஒருவேளை உணவுக்காக ரூ 12.71 வரை செலவாகிறது என்றும் கூறுகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இத்திட்டம் மேலும் பல மையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனால் கூடுதலாகப் பல லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.

அதற்காகப் பல இடங்களில் மையப்படுத்தப்பட்ட சமையலறைகளைக் கட்டத் தேவையான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நகர்ப்புற மையங்களிலுள்ள மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதே கிராமப்புறங்களில் பள்ளி வளாகத்திலேயே உணவைச் சமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

 இது சமூகநீதிக்கான அடித்தளம்:

இது சமூகநீதிக்கான அடித்தளம்:

இத்திட்டம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஊரான மதுரையில்தான் தொடங்கப்பட்டது. ஆகவே அவர் இது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், "மதுரையில் முதன்முதலில் தொடங்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலினின் காலை உணவுத் திட்டம் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து தற்போது வெளியாகியுள்ள அறிக்கையைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அறிக்கையானது பள்ளிகளில் மாணவர்களின் வருகை 85% அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்மறையான தாக்கத்தைப் பதிவு செய்துள்ளது. குழந்தைகள்தான் நமது எதிர்காலம், அவர்களின் நல்வாழ்வுக்கும் சமூக நீதிக்கும் இதுவே அடித்தளம்" எனக் கூறியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின், "கல்வி, திராவிட வேட்கை!" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+