மாலையும் கழுத்தில் ஏறியாச்சு.. மணமகனுக்கும் குஷி.. அப்ப வந்துச்சு பாருங்க மணமகளின் "அந்த" வீடியோ!
தன் திருமணத்தை தானே நிறுத்திவிட்டார் மணமகள்
Recommended Video
சென்னை: மாலையும் கழுத்துமாக, மணமேடையில் நின்று கொண்டிருந்த கல்யாண மாப்பிள்ளை.. மணமகளின் அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்தே போய்விட்டார்!
சென்னை எம்ஜிஆர் நகர் அடுத்த நெசப்பாக்கத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும், அயனாவரத்தை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. பெற்றோர் முன்னிலையில், கடந்த 10-ம் தேதி கல்யாணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது.
இதற்காக 9-ந் தேதி சாயங்காலம் ரிசப்ஷனுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு.. விழா களை கட்டியது.. கல்யாண ஏற்பாடுகள் அந்த பகுதி மக்களையே வியக்க வைக்கும்படி நடந்து கொண்டிருந்தது.

மணமக்கள்
மேடையில் ஆயிரம் கனவுகளுடன், முகம் முழுக்க மலர்ச்சியாக மணமக்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது மாப்பிள்ளைக்கு வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று வந்தது. அதில், கல்யாண பெண், இன்னொரு இளைஞருடன் இணைந்தபடி இருக்கும் ஒரு வீடியோ இருந்தது. அதனை தொடர்ந்து அந்த ஜோடியின் போட்டோக்களும் அடுத்தடுத்து வந்தன.

ஆவேசம்
அதை பார்த்து அதிர்ச்சியும் டென்ஷனும் அடைந்துவிட்டார் மாப்பிள்ளை.. உடனே போய் ரிசப்ஷனை நிறுத்தினார்.. கல்யாணத்தையும் நிறுத்தும்படி ஆவேசமாக கத்தினார்.. இதனால் மண்டபமே அதிர்ந்து விட, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விடிந்தால் கல்யாணம் என்பதால், ஊரே திரண்டு வந்திருந்தது.. அதனால் கல்யாணத்துக்கு வந்திருந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணுக்கு மறுநாள் குறித்த முகூர்த்ததில் தாலி கட்டினார் மாப்பிள்ளை.

வீடியோ
இப்படி வீடியோ, போட்டோக்களை அனுப்பி கல்யாணத்தை நிறுத்திய அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் எம்ஜிஆர் நகர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து விசாரணையும் ஆரம்பமானது. அப்போது, சம்பந்தப்பட்ட பெண், அவர் வீட்டு பக்கத்தில் வசித்து வந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பெண் வீட்டில் இவர்களின் காதலை ஏற்காமல், வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துவிட்டனர்.

காதல் ஜோடி
அதற்காகவே அவசரமாக கல்யாணத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. அதனால்தான் காதல் ஜோடி ரெண்டு பேருமே சேர்ந்து கல்யாணத்தை நிறுத்த பிளான் செய்துள்ளனர். மாப்பிள்ளையின் செல்போன் நம்பரை காதலனுக்கு தந்ததே இந்த பெண்தானாம்.. 2 பேரும் சேர்ந்து இருக்கும் வீடியோ, போட்டோவை அனுப்பும்படி சொன்னதும் இந்த பெண்ணே தானாம்!

சம்மதம்
இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் அந்த காதல் ஜோடிக்கு அறிவுரை செய்தனர்.. பின்னர் பெற்றோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு பிறகுதான் காதலனுடன் மகளை சேர்த்து வைக்க சம்மதம் சொல்லி உள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications