தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி!
சென்னை: சென்னை வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று இரவு ஆதவ் அர்ஜுனா அங்கு பிரசாரம் செய்தார். தெருமுனை பொதுக்கூட்டம் நடந்தபோது பெண் தொண்டர்கள் மீது உடைந்த மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்கி உள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் இன்று தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தவெகவின் நாஞ்சில் சம்பத் மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது பலரும் அவரது பேச்சை கேட்டு கொண்டிருந்தனர்.
கண்ணாடி துண்டுகள் வீச்சு
இந்த சமயத்தில் திடீரென்று தவெக பெண் தொண்டர்கள் மீது உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டது. இதனால் பெண் தொண்டர்கள் பறிப்போயினர். இதுபற்றி அவர்கள் அங்கிருந்த பிற நிர்வாகிகளிடம் கூறினர். யார் கண்ணாடி துண்டுகளை பிரசார கூட்டத்தில் எறிந்தது? என்பது தெரியவில்லை. இதுபற்றி ஆதவ் அர்ஜுனாவிடம் புகார் சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் மேடையில் பேசினார்.
ஆதவ் அர்ஜுனா
அப்போது, ஆதவ் அர்ஜுனா, ''எங்கள் கூட்டத்தில் பெண்மணிகள் இருக்கக்கூடிய ஏரியாவில் கண்ணாடி பாட்டில் வைத்து அடித்து கொண்டு இருக்கிறார்கள். சோடா பாட்டில் கொண்டு அடித்துள்ளார்கள். பாட்டிலை உடைத்து துளாக்கி பெண்மணியின் தோளில் அடித்து உள்ளார்கள். காவல்துறை இதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இதே இடத்தில் உட்காருவோம். கிளம்ப மாட்டோம். அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது? கண்ணாடி பாட்டில் வைத்து அடிப்பது தான் ஜனநாயகமா?.
திமுக மீது குற்றச்சாட்டு
முக ஸ்டாலின் சார் அனைத்தையும் நிப்பாட்டுங்கள். எவ்வளவு தான் அடிப்பீர்கள்? திருப்பி அடித்தால் தாங்கமாட்டீர்கள். நாங்கள் பொறுமையாக இருந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பெண்கள் மீது கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். கண்ணாடி பாட்டில் வீசியவர்களை இன்று இரவே கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆதவ் அர்ஜுனா இங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பார்'' என்றார்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications