சென்னையிலிருந்து பெங்களூருக்கு சர்ர்ர்ன்னு பறக்கலாம்.. வருகிறது எக்ஸ்பிரஸ் சாலை.. நிர்மலா அறிவிப்பு
சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை புதிதாக அமைக்கப்படும், இந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதி அதிகமாக மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை புதிதாக அமைக்கப்படும், இந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதி அதிகமாக மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் விவசாயம் போலவே உள்கட்டமைப்பு வசதிக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் இளம் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.உள்நாட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம்.
சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்படும் இந்த சாலை வர்த்தக வழித்தடமாக இருக்கும். இந்த சாலை இருக்கும் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும், என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சென்னை - பெங்களூர் இடையே போக்குவரத்து மிகவும் எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications