500000 ரூபாய் அபராதம்.. கட்டிடம், கட்டுமான கழிவு விதிகளை மீறினால் அவ்ளோதான்: சென்னை மாநகராட்சி செம
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கட்டுமானக் கழிவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, விதிகளை மீறுவோருக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. புதிய தீர்மானத்தின்படி, 20,000 சதுர மீட்டர் வரையிலான கட்டுமான தளங்களில் விதிமீறல் இருந்தால் ரூ.25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கட்டுமானக் கழிவுகளை முறையாக அகற்றாதவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கட்டுமானக் கழிவுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய மற்றும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

10,000 வரை அபராதம்
புதிய தீர்மானத்தின்படி, 20 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான கட்டுமான தளங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் ரூ. 25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும். சிறிய அளவிலான, அதாவது 500 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலான கட்டிடங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
குறைந்த மற்றும் நடுத்தர மதிப்புள்ள கட்டிடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அவற்றை சரிசெய்வதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த கால அவகாசத்திற்குள் விதிமீறல்கள் சரி செய்யப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
அதிகரித்து வரும் கட்டுமானக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும், நகரை தூய்மையாக பராமரிக்கவும் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்த புதிய அபராத விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
27 தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில் மொத்தம் 237 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கிய தீர்மானங்கள் வருமாறு: "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை திறமையாக கையாளுபவர்களுக்காக சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானங்கள் மேற்கொள்வதற்காக வரைவு வழிகாட்டுதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிக்காட்டுதலை டெல்லி மும்பை போன்ற பெருநகரங்கள் பின்பற்றி வருகின்றன.
குறிப்பாக மும்பையில் இந்த வழிக்காட்டுதலை மீறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழிகாட்டுதல்களை சென்னையிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நடைபெறும் அனைத்து கட்டிட கட்டுமானங்கள் ரெடிமீட்ஸ் கான்கிரீட் ஆலைகள் மற்றும் பிற கட்டுமான பணிகளால் ஏற்படும் சுற்றுசூழல் மாசு ஏற்படுவதை தடுக்க முடியும்.
காற்று மாசுபாடு
மேலும், கட்டுமான பணிகளால் ஏற்படகூடிய காற்று மாசுபாட்டை இந்த வழிக்காட்டுதல் மூலம் தடுக்க முடியும். எனவே தான் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு கட்டிட வழிகாட்டு நெறிமுறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
இதே போன்று, மழை காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விருகம்பாக்கம், ஓட்டேரி போன்ற பகுதிகளில் மழை நீரானது வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது. அதனால் நல்லா கால்வாய், விருகம்பாக்கம் நீர் வழி கால்வாய் ஆகியவற்றை புனரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வந்தது.
2 கால்வாய்கள்
அதனடிப்படையில், இந்த கால்வாயை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்க தமிழக அரசு ஆணையிட்டது. அதன்படி நீர்வள ஆதார துறையினர் இந்த 2 கால்வாய்களை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர். இந்த 2 கால்வாய்களிலும் மழை நீர் சீராக செல்ல ஒரு நீர்நிலை வல்லுநரை நியமித்து, புணரமைக்க முடிவு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இதற்காக ரூ. 95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தி.நகரில் அமைக்கப்பட்டு வரும் புதிய பாலத்திற்கு ஜெ.அன்பழகன் பெயர் சூட்ட மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications