நெருங்கும் ஜல்லிக்கட்டு! ரெடியாக இருங்க மக்களே! காளைகளும் காளையர்களும் எப்படி தயாராவர்கள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். ஆயிரக்கணக்கானோர் மத்தியில் துள்ளி வரும் காளைகள் ஜல்லிக்கட்டுக்கு எப்படி தயார் செய்யப்படுகின்றன? காளையர்கள் எப்படி தயாராகின்றன என்பது குறித்து பார்க்கலாம்..

தமிழகத்தின் அடையாளமான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகளும் காளையர்களும் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வெகுவிமரிசையாக நடைபெறும். இதேபோல திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

உலகின் கவனத்தை ஈர்த்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு, பொங்கல் பண்டிகையின்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. நிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தற்போதே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காளை வளர்ப்போரும், காளையர்களும் ஜல்லிக்கட்டுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காளைகளுக்கு பயிற்சி

காளைகளுக்கு பயிற்சி

தாங்கள் வசிக்கும் கிராமங்களிலேயே வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, இளைஞர்கள் காளைகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். அதேநேரத்தில், மாடுபிடி வீரர்களாகக் களம் இறங்க உள்ளோரும், அந்த காளைகளை அடக்குவதற்கான பயிற்சியைப் பெறுகின்றனர். இந்த கிராமத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு, எப்போதும் சிறப்பு மரியாதை இருக்கும். அதிலும் ஜல்லிக்கட்டு நெருங்கிவிட்டால் அவற்றுக்கு உணவில் தொடங்கி அனைத்திலும் சிறப்பு கவனிப்பு இருக்கும்.

மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி

ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது எடுக்கும் வேகம் தான், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வருவதற்கு உதவும். இதற்கு மூச்சுப் பயிற்சி அவசியம். ஆகவே, 2 நாள்களுக்கு ஒருமுறை காளைகளுக்கு நீச்சல் பயிற்சியும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி அளிக்கப்படும். ஜல்லிக்கட்டில் வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் கும்பலாக இருப்பர். அவர்களை மிரட்டும் காளைகள் தான் பிடிபடாமல் செல்லும். அதற்காக, வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி ஆக்ரோஷமாக வெளியேறுவதற்கு காளைகளை பயிற்சியில் ஈடுபடுத்துகின்றனர்.

உணவுகள் முக்கியம்

உணவுகள் முக்கியம்

மாடுபிடி வீரர்களை மிரட்டி சீறிப் பாய்ந்து செல்வதற்கும், திமிலை அடக்க வரும்போது உடலை லாவகமாகத் திருப்பி பாய்வது போலச் செல்லவும் காளைகளுக்கு மண்ணைக் குத்தும் பயிற்சி தரப்படுகிறது. ஜல்லிக்கட்டு நேரத்தில் அவற்றுக்கு அளிக்கப்படும் உணவுகள் மிகவும் முக்கியமானவை. தவிடு, உளுந்து, சிவப்பு துவரை, பட்டாணி என ஊறவைத்து வழங்கப்படும். தினமும் இரவு நேரத்தில் பருத்தி விதையை ஊற வைத்து அதில் வெல்லம் கலந்து கொடுக்கப்படும்.

ஜல்லிகட்டு திருவிழா

ஜல்லிகட்டு திருவிழா

உடல் திடகாத்திரமாக இருக்கவும், கால்கள் நன்றாக வலுப்பெறவும் இந்த உணவு வகை அளிக்கப்படும்.

தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளுக்கு தினமும் பயிற்சி அளித்து வருகின்றனர். வாடி வாசலை எதிர்நோக்கி காளைகளும் காளையரும் உற்சாகமாக காத்துக் கொண்டிருப்பதாக மாடு வளர்ப்போர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் களத்தில் காளைகளை சந்திக்கும் காளையர்களுக்கும் பயிற்சி அவசியம். உடற்பயிற்சியை விட மனப் பயிற்சியே அவர்களுக்கு முக்கியம். கூடுதலாக கபடி, நீச்சல் ஆகியவையும் காளையர்களுக்கு கைகொடுக்கும். இன்னும் சில நாட்களில் ஜல்லிகட்டு திருவிழா தொடங்க இருக்கிறது, ரெடியா இருங்க மக்களே..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+