இதான்யா ரிவெஞ்சு..பும்ரானா ஃப்ளவர்னு நினைச்சீங்களா ஃபயர்டா! ஹாரிஸ் ரவூப் மூக்கையறுத்து செய்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கம் போலவே பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்றது இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி. பாக்., அமைச்சர் கையில் கோப்பையை வாங்க மறுத்து பல சம்பவங்களை இந்திய அணி நேற்று செய்திருந்தது. அதேபோல ஜஸ்ப்ரீத் பும்ரா பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுப்பை மைதானத்திலேயே வைத்து பதிலடி கொடுத்திருக்கிறார். கடந்த போட்டியில் இந்தியாவை கிண்டல் செய்ய நினைத்த ரவுப்பை பும்ரா மூக்கறுத்ததாக இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வரலாற்றை மீண்டும் எழுதி வைத்துள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற அதிரடியான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, 9வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான சாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் பஹர் ஸமான் திடக்கட்டான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர்.

Bumrah Mocks Pakistan Star Rauf

ஆசியக் கோப்பை 2025

ஆனால் அதன் பிறகு பாகிஸ்தானின் இன்னிங்ஸ் சரிந்தது. சயிம் அயூப் 14, முகமது ஹாரிஸ் 0, ஸமான் 46, ஹுசைன் தலாத் 1, கேப்டன் சல்மான் அலி ஆகா 8, ஷாஹீன் அப்ரிடி 0, பஹீம் அஷ்ரப் 0, ஹாரிஸ் ரவூஃப் 6, முகமது நவாஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்து பவிலியனுக்குத் திரும்பினர். இதனால், 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு பாகிஸ்தான் ஒழிந்தது. இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பான சம்பவம் செய்தார். வருண் சக்ரவர்த்தி, அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீதம் எடுத்தனர்.

திலக் வர்மா

இந்திய அணிக்கு வெற்றி பெற 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மா வெறும் 5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தாலும், திலக் வர்மா இந்திய இன்னிங்ஸை நிலைநாட்டினார். அவரது 69 ரன்கள் அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றது. இப்படியாக இந்தியா 19.5 ஓவர்களில் 150 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியுடன் 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. 1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023 மற்றும் இப்போது 2025 ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான்

இறுதிப்போட்டியை விட இறுதிப் போட்டிக்கு பிறகான பல நிகழ்வுகள் பாகிஸ்தானை, இந்திய வீரர்கள் பந்தாடுவது போலவே இருந்தது. போட்டி முடிந்ததும் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து பெற மறுத்த இந்திய வீரர்கள் வெறும் கையோடு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோப்பையை அவரே எடுத்துச் சென்ற காமெடியையும் பார்க்க முடிந்தது.

ஜஸ்ப்ரீத் பும்ரா

இது ஒரு புறம் இருக்க களத்திலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்கள் இடையே அனல் பறந்தது. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் பந்தை விட, அவரது அமைதியான ஆக்ரோஷம் பாகிஸ்தான் வீரர்களை கலங்கடிக்க செய்தது. அவரது பந்து வீச்சில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுப் வெறும் ஆறு ரன்களில் கிளீன் போல்ட் ஆனார். பும்ராவின் பந்து தாக்கிய வேகத்தில் ஸ்டெம் பறந்து சென்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து ரவூப் அவுட் ஆனதை கொண்டாடும் விதமாக பும்ரா விமானத்தை வீழ்த்தியது போல சைகை காட்டினார்.

Bumrah Mocks Pakistan Star Rauf

ஹாரிஸ் ரவுப்

உண்மையில் அது பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம். கடந்த போட்டியில் பௌண்டரி லைனில் பில்டிங் செய்து கொண்டிருந்த ஹாரிஸ் ரவூப் இந்திய ரசிகர்களை பார்த்து ஆறு என்ற எண்ணை காட்டி விமானங்களை சுட்டு வீழ்த்தியது போல சைகை காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் போட்டி கட்டணத்தில் அவருக்கு 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரவுப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பும்ரா விமான வீழ்ந்தது போல செலிப்ரேஷன் செய்துதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+