சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓடும் பஸ்ஸிலிருந்து துப்பிய நடத்துநர்.. எச்சில் பட்டதால் முகத்தில் குத்து விட்ட காவலர்.. வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: எச்சில் துப்பியபோது நடந்து சென்ற காவலர் மீது பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாநகர போக்குவரத்து கழக நடத்துனரை காவலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Recommended Video

    ஓடும் பஸ்ஸிலிருந்து துப்பிய நடத்துநர்.. எச்சில் பட்டதால் முகத்தில் குத்து விட்ட காவலர் - வீடியோ

    சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் லூயிஸ். இந்நிலையில் லூயிஸ் இன்று காலை பணி முடிந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரேயுள்ள பூக்காரன் தெரு பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    சைதாப்பேட்டை அரசு பயிற்சி மையத்தில் 34 பேருக்கு கொரோனா.. மாணவர்கள் உடல்நிலை எப்படி உள்ளது?சைதாப்பேட்டை அரசு பயிற்சி மையத்தில் 34 பேருக்கு கொரோனா.. மாணவர்கள் உடல்நிலை எப்படி உள்ளது?

    மாநகர போக்குவரத்து கழகம்

    மாநகர போக்குவரத்து கழகம்

    அப்போது அவ்வழியாக நடந்து சென்ற மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துநர் பாலசந்திரன் என்பவர் கீழே எச்சில் துப்பியபோது, அது தன் மீது பட்டதாகக் கூறி காவலர் லூயிஸ், பாலச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆபாசமாக பேசிய நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கை கலப்பாகியுள்ளது.

    கடும் தாக்குதல்

    கடும் தாக்குதல்

    இதில் காவலர் லூயிஸ் நடத்துனர் பாலசந்திரனை தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. கண் பகுதியில் வீங்கியுள்ளது. அங்கு கூடிய மக்களும் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரத்த காயம்

    ரத்த காயம்

    இந்நிலையில் காவலர் லூயிஸ் மாநகர போக்குவரத்துக் கழக நடத்துனரான பாலசந்திரனை தாக்கியதால் ரத்தக் காயத்துடன் அவர் நிற்பது போலவும், அவர்களுக்குள் வாக்குவாதம் நடப்பது போலவும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் பரவி வருகிறது. ஓடும் பேருந்தில் எச்சில் துப்பினால் அடுத்தவர் மீது படும் என்ற யோசனையே இல்லாமல் நடத்துநர் நடந்து கொண்டது தவறுதான்.

    காவலர் மீது நடவடிக்கை

    காவலர் மீது நடவடிக்கை

    ஆனால் அதற்காக காவலர் என்பதால் நடத்துநர் மீது கை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்துள்ளார்கள். அது போல் கொரோனா காலத்தில் எச்சில் மூலமும் வியாதிகள் பரவும் என்பதால் நடத்துநர் மீதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    English summary
    Conductor and Police constable clashed each other in a road in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X