சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பேருந்து சேவை மும்முரம்.. இனிமேல் எல்லாம் இப்படித்தான்.. இந்த போட்டோவை பாருங்க புரியும்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கி உள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள், முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிலும் பேருந்துக்கு உள்ளே எப்படி மக்கள் அமர வைக்கப்படுகிறார்கள் என்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா உடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்.. இதுதான் தற்போது இந்தியாவிற்கான தாரக மந்திரமாக மாறியுள்ளது. சராசரியாக இந்தியாவில் தினமும் 80 ஆயிரம் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.

ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வந்தாலும் இன்னொரு பக்கம் தளர்வுகள் அதிக அளவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுக்க அன்லாக் 4.0 தளர்வுகள் அமலுக்கு வந்து இருக்கிறது.

எல்லாம் திறந்தாச்சு.. ஆனா அரைகுறையா இருக்கே.. மிச்சமிருக்கிற 5 மாசத்துக்கு வழி? குழப்பத்தில் மக்கள்!எல்லாம் திறந்தாச்சு.. ஆனா அரைகுறையா இருக்கே.. மிச்சமிருக்கிற 5 மாசத்துக்கு வழி? குழப்பத்தில் மக்கள்!

தமிழகம் எப்படி

தமிழகம் எப்படி

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்து இருக்கிறது. இ பாஸ் தளர்வு, பேருந்து போக்குவரத்து, வழிபாட்டு தலங்கள் திறப்பு என்று நிறைய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பேருந்து போக்குவரத்து தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. மாவட்டங்களுக்கு உள்ளே மட்டுமே பேருந்து போக்குவரத்து நடந்து வருகிறது.

சரியாக இயங்குகிறது

சரியாக இயங்குகிறது

5 மாதங்கள் கழித்து தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கி உள்ளது. ஆனாலும் பேருந்துகள் நல்ல நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். இத்தனை நாட்கள் கழித்து பேருந்துகளை இயக்கினாலும், பெரிய அளவில் எங்கும் பேருந்துகள் பிரேக் டவுன் ஆகவில்லை. ஒரு சில பேருந்துகள் மட்டுமே சில இடங்களில் பழுதாகி நின்றது .முக்கியமான நல்ல நிலையில் இருக்கும் பேருந்துகளை மட்டுமே போக்குவரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர்.

மிக மோசம்

மிக மோசம்

ஆனால் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயங்குகிறது. இதனால் உள் மாவட்டங்களில் பேருந்துகள் தாமதமாக இயக்கப்படுவதாக புகார் உள்ளது. பயணிகள் பெரிய அளவில் பேருந்துகளில் செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் பயணிகள் ஏறும் வரை பேருந்துகள் காத்திருந்து இயக்கப்படுகிறது. இதனால் ஒரே பேருந்து நிலையத்தில் 2-2.30 மணி நேரம் கூட பேருந்துகள் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இனி விதிகள்

இனி விதிகள்

இந்த பேருந்து போக்குவரத்தில் மிகவும் கடுமையான விதிகள் பின்பற்றப்படுகிறது. பயணிகளுக்கு சானிடைசர் பயன்படுத்தவும்,முகக்கவசம் அணியுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாஸ்க் இல்லாதவர்களை பேருந்துக்கு உள்ளேயே விடவில்லை . முக்கியமாக நடத்துனர், ஓட்டுநர் மாஸ்க் அணிந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

வேறு விதிகள்

வேறு விதிகள்

ஒவ்வொரு நடையிலும் பேருந்துகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. 55 இருக்கைகள் கொண்ட புறநகர் பேருந்துகளில் 32 பயணிகளும், 40 இருக்கைகள் கொண்ட நகர பேருந்துகளில் 24 பயணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டுநர்,நடத்துனர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது. பணிக்கு முன் இவர்களின் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. வெப்பநிலை அதிகம் இருக்கும் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது.

கேஸ்லெஸ் எப்படி

கேஸ்லெஸ் எப்படி

ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் மட்டுமே மக்கள் அமர அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னையில் சில பேருந்துகளில் ஆன்லைன் பேமெண்ட் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. நடத்துனர் கழுத்தில் இதற்காக க்யூ ஆர் கோட் ஒன்று உள்ளது. இந்த அட்டையை ஸ்கேன் செய்து கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்தலாம். பணம் கொடுத்து, சில்லரை வாங்க அச்சப்படும் மக்கள் இதை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மாற்றம்

கொரோனா மாற்றம்

கொரோனா காரணமாக மக்களின் வாழ்க்கை முறை அப்படியே மாறியுள்ளது. சமூக இடைவெளி மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது.தற்போது மக்களின் பேருந்து பயணமும் மாறியுள்ளது. இந்த பழக்க வழக்கங்கள் மாற இன்னும் பல மாதங்கள் ஆகலாம். முழுமையாக கொரோனா தடுப்பு மருந்து வரும் வரை மக்கள் சமூக இடைவெளியை இது போல கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளனர்.

English summary
Bus transport will be like this hereafter in Tamilnadu amid rise in coronvirus cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X