Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடிய தொடங்கிய வெள்ளம்.. பேருந்து சேவையின் நிலை என்ன? போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில், சென்னையில் சில இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் சென்னை முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் வெள்ளம் தேங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகமாக தீர்வு காணப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னையை ஒட்டி ஆந்திரா பகுதியில் கரையை கடந்த மிக்ஜாம் புயல், சென்னைக்கு வழக்கத்தை விட 29 சதவிகிதம் கூடுதலாக மழை பொழிவை கொடுத்திருக்கிறது. எனவே சென்னை முழுவதும் வெள்ள காடாக மாறியது.

Buses have started running on all routes in Chennai from today

மழை நின்ற சில மணி நேரங்களில் பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பின்னரும், இன்னும் இடுப்பளவுக்கு பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டு முகாம்களுக்குள் மீட்பு படையினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். அதேபோல உணவு தேவைப்படுவோருக்கு படகில் சென்று உணவு விநியோகிக்கப்படுகிறது.

வெள்ளம் காரணமாக தடைப்பட்டிருந்த மாநகர பேருந்து போக்குவரத்து சேவை நேற்று 80 சதவிகிதம் வரை இயக்கப்பட்டது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் கூறுகையில், "சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் 80% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மழைநீர் அதிகம் தேங்கியுள்ள மீட்புப்பணிக்காக மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படவில்லை" என தெரிவித்திருந்தது.

சென்னையில், விமான நிலையம் முதல் அண்ணா சாலை வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் தடையற்ற போக்குவரத்து உள்ளது. புழல் ஏரி நீர் திறப்பால் மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாம்பாக்கம் இடையே போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டிருக்கிறது. கணேசபுரம் சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை, சி.பி. சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, சூளைமேடு லயோலா சுரங்கப்பாதை, கதிர்வேடு சுரங்கப்பாதை என சென்னை முழுவதும் 11 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியிருந்ததால் நேற்று இந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இன்று ஒரு சில சுரங்கப்பாதைகள் தவிர மற்ற அனைத்திலும் மழைநீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. எனவே அந்த பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. புறநகர் ரயில் சேவையை பொறுத்த அளவில், நேற்று வரை சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னையில் எழும்பூரில் இருந்து மட்டுமே புறப்பட்டு, மீண்டும் எழும்பூர் வந்தடைந்தது.

பேசின் பாலத்தில் தண்டவாளத்தில் தண்ணீர் சூழ்ந்திருந்ததால் சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று முதல் பேசின் பாலம் வழியாக சென்ட்ரலுக்கும், சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+