அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நஷ்டமடைந்த தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை - கமல் அதிர்ச்சி ட்வீட்
சென்னை எண்ணூரை சேர்ந்த விக்ரம், 40 லட்சம் ரூபாய் கடனாகி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை: அரசு அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லஞ்சம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை எண்ணூர் பகுதியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன் தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகள் தாங்கமுடியாமல் இளம் தொழில் முனைவர் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபரின் பெயர் விக்ரம், வயது 30 சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 1-வது தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகிறது. மணலி அருகே விச்சூர்பகுதியில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.60 லட்சம் முதலீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விக்ரம் தொடங்கினார்.
விக்ரமிடம் இருந்து அரசு துறை அதிகாரிகள் பலர் மாதந்தோறும் லஞ்சம் வாங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு அரசுத்துறை அதிகாரிகள் மீண்டும் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். உள்ளூர் அரசியல்வாதிகளும் லஞ்சம் கேட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் கூட லஞ்சம் கொடுத்துள்ளார். வருமானத்தில் இருந்து பெரும் பகுதி லஞ்சமாகவே போனதால் விக்ரம் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். 40 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டது.
கடந்த 12ஆம் தேதி தன்னிடம் லஞ்சம் பெற்றஅதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்களின் பட்டியலை முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார் விக்ரம். 15ஆம் தேதி எண்ணூர் தாழங்குப்பத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பொது கழிவறையில் விக்ரம் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விக்ரமின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
Recommended Video
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகள் தாங்கமுடியாமல் எண்ணூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர் விக்ரம் முதல்வருக்குக் கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் நெஞ்சம் பதறுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications