ஆதவ் vs புஸ்ஸி vs ஜான்.. மீன் முள் போல விஜயை குத்தும்.. தவெக உட்கட்சி மோதல்.. நொறுங்கிடுச்சே!
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) கடுமையான உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்குள் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகள் இப்போது பகிரங்கமான போட்டியாக மாறி, இரு தரப்பு ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் மோதிக்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஒருவரை நீக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும்.. இவரை நீக்க வேண்டும் என்று அவரின் தரப்பினரும் மாறி மாறி போஸ்ட் செய்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழக வட்டார தகவல்கள்
கட்சி வட்டாரங்களின்படி, ஆனந்த் மற்றும் அர்ஜுனா இடையேயான இந்த மோதல் பல வாரங்களாகவே புகைந்துகொண்டிருக்கிறது. இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு மற்றும் பரப்புரை வியூகங்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆனால், கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பான வேறுபாடுகளே இந்த மோதலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. முக்கியமாக கரூர் விவகாரத்திற்கு பின் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு உச்சம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
எக்ஸ் பக்கத்தில் மோதல் ஆதவ் அர்ஜுனா - விஜய்
இந்த மோதல் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) போன்ற சமூக வலைத்தளங்களுக்கும் பரவியுள்ளது கட்சியினரையும், ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் எதிர்த் தரப்பு ஆதரவாளர்களின் சமூக ஊடகப் பக்கங்களை குறிவைத்து report அடித்து புகார் அளிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதவ் அர்ஜுனாவின் குழு புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய கணக்குகளைக் ரிப்போர்ட் செய்ததாகவும், ஆனந்தின் ஆதரவாளர்கள் அதற்குப் பதிலடியாக அதேபோல ஆதவ் அர்ஜுனா ஆதரவு ஐடிக்களை ரிப்போர்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், விஜய்யின் அரசியல் பிம்பத்தையும் தீவிரமாகப் பரப்பி வந்த பல பிரபலமான பக்கங்கள், தொடர்ச்சியான புகார்களின் காரணமாக நீக்கப்பட்டுள்ளன அல்லது முடக்கப்பட்டுள்ளன. புஸ்ஸியை நீக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா ஆட்களும், ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்று புஸ்ஸி ஆட்களும் மாறி மாறி போஸ்ட் செய்து வருகின்றனர்.
புஸ்ஸிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளாதது, கட்சித் தலைமைக்குள் வளர்ந்து வரும் பிளவுகள் குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்தார். அதன்பின் கடந்த வாரம்தான் அவர் வெளியே வந்தார். ஆனால் அதற்கு பின்பும் கூட அவர் வீட்டிற்கு உள்ளேயே முடங்கினார்.
புஸ்ஸி ஆனந்த் வந்த பின்பும் கூட, ஜான் ஆரோக்கியசாமிதான் கட்சி மீட்டிங்குகளை நடத்துகிறார். பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நடத்த வேண்டிய மீட்டிங்குகளை.. ஜான் ஆரோக்கியசாமி பல மாவட்டங்களில் நடத்துகிறார். அமைப்பு ரீதியான கூட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறார். இதனால் அடிமட்டத் தொண்டர்களிடையே அவரது செல்வாக்கு அதிகரித்து உள்ளது.
ஜான் ஆரோக்கியசாமி எழுச்சி
சேரை எடுத்து போடுங்க.. ஜான் ஆரோக்கியசாமிக்கு நடு சீட் என்று சொல்லும் அளவிற்கு அவர்தான் மையத்தில் இருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டார். உள்ளூர் கூட்டங்கள் மற்றும் மாவட்ட கூட்டங்கள் உட்பட கட்சி நடவடிக்கைகளில் ஆரோக்கியசாமியின் சமீபத்திய கட்டுப்பாடு, மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.
புஸ்ஸி ஆனந்தின் அதிகாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதா என கட்சித் தொண்டர்கள் ஊகிக்கத் தொடங்கியுள்ளனர். அவரது தலைமறைவு தலைமை வெற்றிடத்தை ஏற்படுத்தியது. ஆரோக்கியசாமி, மாவட்ட அளவிலான தலைவர்களுடன் சுறுசுறுப்பாக இணைந்து செயல்பட்டு அந்த இடத்தை நிரப்பினார் என்று சிலர் கூறுகின்றனர்.
விஜய் கைக்கு போன மெசேஜ்
கட்சி நிர்வாகிகள் மாறி மாறி மோதிக்கொள்ளும் போஸ்டுகள் விஜய்க்கு அனுப்பப்பட்டதாகவும். அதை படித்த விஜய் ஆக்சன் எடுக்க போவதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக பெரிய அளவில் கலகக்குரல் வெடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்.. ஏன் புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியை அம்போ என்று விட்டுவிட்டு சென்ற அவர் மீது விஜய் ஏன் ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. விஜய் அவரிடம் சிக்கிக்கொண்டது போல செயல்படுகிறார். அவரை இனியும் ஏன் நம்புகிறார். ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் இப்படி விட்டு இருப்பார்களா? விஜய் அவர்களை போல ஆக ஆசைப்படுகிறார்.. ஆனால் அப்படி ஆக்சன் எடுக்கவில்லை என்று கட்சிக்கு உள்ளே புகார் எழுந்துள்ளதாம். இதை பற்றிய மெசேஜ்கள் விஜயின் கைக்கு சென்று உள்ளதாம்.
அமைதி காக்கும் விஜய்
ஆனால் விஜய் முழுக்க முழுக்க முடிவு எதையும் எடுக்காமல் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கட்சி ரீதியிலான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் அவர் ஒதுங்கியே இருப்பதாக கூறப்படுகிறது. உள் வட்டாரங்களின்படி, விஜய் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து விலகியிருக்கிறார். தனது நெருங்கிய ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல், தனது பெரும்பாலான நேரத்தை தனிப்பட்ட முறையில் செலவிடுகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த அதிகரித்து வரும் தனிமைப்படுத்தல், TVK அமைப்புக்குள் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜான் மட்டுமே விஜயிடம் பேசும் ஒரே நபர் என்றும், மற்ற மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு சக்தியற்றவர்களாகி விட்டனர் என்றும் கட்சியில் பலரும் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications