Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலம் வாங்கும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு முக்கிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது.. ஒரே ஒரு சொல்லின் தவறான புரிதல் பலரின் வாழ்நாள் சேமிப்பையே கேள்விக்குறியாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.. "புறக்குடியார்" என்ற பதிவு உண்மையில் என்ன அர்த்தம் என்பது குறித்து பெரிய குழப்பம் நிலவி வருகிறது.. இதுகுறித்து பெயிரா அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு பொதுமக்களை அலர்ட் செய்துள்ளது.. இந்த தகவலை தெரிந்துகொள்ளாமல் நிலம் வாங்குவது எதிர்காலத்தில் பெரிய சிக்கலை உருவாக்கும் என்று அறிவுறுத்துகிறார் பெயிரா நிறுவனர் டாக்டர் ஹென்றி

தமிழகத்தில் நிலம் வாங்குதல் மற்றும் குடியிருப்பு தொடர்பான செயல்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன.. இந்த சூழலில் வருவாய் துறை பதிவுகளில் இடம்பெறும் தொழில்நுட்பச் சொற்கள் குறித்த புரிதல் பொதுமக்களுக்கு மிக அவசியமாகிறது.

real estate Tamil Nadu land buying tips property legal check

நிலம் வாங்குறீங்களா? டாக்டர் ஹென்றி அட்வைஸ்

குறிப்பாக "புறக்குடியார்" அல்லது "புறக்குடிகள்" என்ற சொல்லின் உண்மையான பொருளைத் தவறாகப் புரிந்து கொள்வதால் பலர் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.. இது குறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி பொதுமக்களின் நலன் கருதி மிக முக்கியமான விழிப்புணர்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்..

அவர் வெளியிட்டுள்ள அந்தச் செய்தியில் "புறக்குடியார்" என்பது ஒரு நிலத்தில் வசித்து வரும் நபரை அடையாளம் காட்டுவதற்காக செய்யப்படும் ஒரு நிர்வாகப் பதிவு மட்டுமே என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.. பலரும் இந்தப் பதிவைச் சொத்து உரிமையாகத் தவறாகக் கருதுகின்றனர்.. ஆனால் ஒரு நபருக்கு அந்த நிலத்தின் மீது சட்டபூர்வமான சொத்து உரிமை அதாவது Ownership இருப்பதை இந்தப் பதிவு உறுதி செய்யாது.

புறக்குடியார் - பொதுமக்கள் கவனம்

ஒரு நிலத்தின் உண்மையான உரிமையை உறுதிப்படுத்தும் ஒரே ஆவணம் "பட்டா" மட்டுமே ஆகும்.. நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்களில் பல தலைமுறைகளாக ஒரு நிலத்தில் வசித்து வருவதால் மட்டுமே தங்களுக்கு அந்த நிலத்தின் மீது முழு உரிமை இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.. ஆனால் வசிப்பு மற்றும் உரிமை ஆகிய இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை மக்கள் உணர வேண்டும்.

புறக்குடியார் என்று பதிவாகியுள்ள நிலங்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.. இத்தகைய நிலங்களை வாங்குவதால் எதிர்காலத்தில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் உருவாகக்கூடும்.. குறிப்பாக அந்த நிலத்தை வாங்குபவர் தனது பெயருக்குப் பட்டா மாற்றம் செய்ய முடியாமல் போகும் சூழல் ஏற்படும்.

முறையான பட்டா இல்லாத காரணத்தால் வங்கிகளில் கடன் பெற முடியாது.. மேலும் எதிர்காலத்தில் அந்த நிலம் தொடர்பாக பல்வேறு சிவில் வழக்குகள் அல்லது அரசின் நேரடி நடவடிக்கைகள் பாயும் அபாயமும் உள்ளது.. எனவே ஒரு நிலத்தில் முதலீடு செய்யும் முன்பு பட்டா சரிபார்ப்பு மற்றும் சிட்டா அடங்கல் பதிவுகளைத் தீர ஆய்வு செய்ய வேண்டும்.. நிலத்தின் உரிமையாளரை உறுதிப்படுத்துவதோடு அரசு அனுமதிகள் சரியாக இருக்கின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும்..

வட்டாட்சியர் அலுவலகத்திடல் விண்ணப்பிக்கலாம்

அதே நேரத்தில் நீண்டகாலமாக அரசு நிலங்களில் வசித்து வரும் புறக்குடியார்களுக்கு ஒரு வாய்ப்பும் உள்ளது.. அரசின் குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் அவர்களுக்குப் பட்டா வழங்கப்படுவதற்கான வழிமுறைகள் சட்டத்தில் உள்ளன.. இதற்காகச் சம்பந்தப்பட்ட நபர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு பட்டா பெற்ற பின்னரே அந்த நிலத்தைச் சட்டப்பூர்வமான சொத்தாகக் கருத முடியும்.. பொதுமக்கள் நிலம் வாங்கும் முன் அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் சரிபார்த்து பாதுகாப்பான முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதே டாக்டர் ஹென்றியின் அறிவுறுத்தலாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+