டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் ஐஏஎஸ் நியமனம்
டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக புதிய தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து,புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த 2020ம் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் வயது அடிப்படையில் கடந்த 9ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.
டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன் 2010 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர்,தொழிலாளர் நலத்துறை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications