பாஜகவை புட்டு புட்டு வைத்த நிர்மல்குமார்.. கடைசியாக என்ன இப்படி சொல்லிட்டாரே.. அதிர்ந்த நிர்வாகிகள்
பாஜகவிலிருந்து விலகிய சி.டி.நிர்மல் குமார் அக்கட்சி குறித்து பேட்டியளித்துள்ளார்
சென்னை: பாஜகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் விலகி அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின் தமிழ்நாட்டுக்கான தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.நிர்மல் குமாரும் விலகி அதிமுகவில் இணைந்திருக்கிறார். இந்நிலையில் பாஜகவின் எதிர்காலம், ஐடி பிரிவு தலைவர்களின் அதிருப்தி குறித்து பேட்டியளித்துள்ளார்.
பாஜகவின் தமிழ் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து ஏராளமான அதிருப்தி குரல்கள் மேலெழ தொடங்கியுள்ளன. இதற்கு முன்னர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் பாஜக தலைவராக இருந்த காலத்தில் ஒவ்வொரு நபராக தேடி பிடித்து கட்சிக்குள் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் இப்படி சேர்த்த ஆட்கள் அண்ணாமலை காலத்தில் வெளியேறியிருப்பது தமிழ்நாட்டில் பாஜகவின் பலம் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறது.
இந்த அதிருப்தியின் தொடக்கமாக இருந்தவர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணன். திமுக எம்எல்ஏவான இவர் இக்கட்சியிலிருந்து விலகி கடந்த 2021ம் ஆண்டு இதே தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். ஆனால் தோல்வியடைந்தார். இவ்வாறு இருந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கட்சியின் மாநில தலைமையை விமர்சித்துவிட்டு அனைத்து பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

டாக்டர் சரவணன்
அதேபோல திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யாவுக்கும்-பாஜக சிறுபான்மையினர் தலைவர் டெய்சிக்கும் இடையேயான ஆடியோ உரையாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கட்சியின் மாநில தலைமையை விமர்சித்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். இவரைத் தொடர்ந்து காயத்ரி ரகுராம் ஆகியோர் விலகினர். தற்போது இந்த வரிசையில் புதியதாக இணைந்திருப்பவர்தான் சி.டி.நிர்மல் குமார். இவரும் கட்சியின் மாநில தலைமை விமர்சித்துவிட்டுதான் விலகியுள்ளார்.

சி.டி.நிர்மல் குமார்
"கடந்த 15 ஆண்டுகளாக கட்சிக்காக உண்மையாக உழைத்துள்ளேன். ஆனால் வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது. சொந்த நிர்வாகிகளையே வேறு பார்த்து அதன் மூலம் ஆனந்தமடைவதை போன்ற அல்பத்தனம் ஏதும் கிடையாது" என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மேலும் மாநில தலைவர் அண்ணாமலையை 420 மலை என்றும் விமர்சித்திருந்தார். பின்னர் கையோடு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துவிட்டார். இதனையடுத்து அவரை தொடர்பு கொண்டு பேசியபோது சில விஷயங்களை போட்டு உடைத்துள்ளார்.

பாஜக எதிர்காலம்
அதாவது, "தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்காலம் கிடையாது. அவர்களுடைய நடவடிக்கையிலிருந்து இது தெளிவாகிறது. இந்த முடிவு நீண்ட நாட்கள் சிந்தித்து யோசித்து எடுத்திருக்கிறேன். எங்களுடன் பணியாற்றிய 90% பேரும் கட்சியின் மாநில தலைமை மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். பலரும் என்னிடம் ஃபோன் செய்து இதைதான் கூறுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கடும் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு அதிமுக+பாஜக கூட்டணிதான் காரணம் என்று அதிமுகவினர் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர்.

தேர்தல்
மறுபுறம் அதிமுக, கொங்கு மண்டலம் தனது கோட்டை என்று கூறிக்கொண்டு இப்படி தோல்வியடைந்திருப்பது அக்கட்சியின் பலவீனத்தை காட்டியிருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த கட்சிகளின் செயல்பாடுகள் பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications