அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து? தவெகவுக்கு உங்கள் தலைமையில் ஆதரவா? சி.வி. சண்முகம் சொன்னது என்ன?
சென்னை: தவெகவுக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு நான் எதையும் சொல்ல முடியாது, கட்சிதான் முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெகவை ஆதரிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கவும் முடியவில்லை, எதிர்க்கட்சி தலைவர் பதவியும் போய்விட்டது.

அதாவது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்வியை (அவர் வென்றாலும் கட்சி எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை என்பது ஆதங்கம்) சந்தித்து வருகிறார். அதிமுகவில் 15 எம்எல்ஏக்கள் வரை வன்னியர் சமூகத்தினர் வென்றுள்ளனர். இதனால் தவெக விஜய்க்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம் பெற அதிமுகவின் ஒரு தரப்பினர் விரும்புகிறார்களாம்.
ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வாரா என தெரியவில்லை. இதனால் நேற்றே வன்னியர் சமூகத்தை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனராம்.
அவர் விலகி அந்த பதவிக்கு சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டால், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் எந்த தடையும் இல்லை என்பது அந்த மூத்த நிர்வாகிகளின் கணக்காக உள்ளது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட நடைபெறவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சி.வி.சண்முகத்தை செய்தியாளர்கள் சந்தித்த போது அவர் கூறுகையில், "எதையும் நாங்கள் மறைக்கவில்லை, தவெகவுக்கு ஆதரவா என நீங்கள் கேட்டது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது இதை கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
தவெகவுக்கு 11 பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில் சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஒரு பிரிவினர், விஜய்க்கு ஆதரவு கெரிவிக்கவுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே அதிமுகவே இரண்டாக பிரியும் நிலை உள்ளது.
அதிலும் தவெக ஆட்சி அமைப்பதால், செங்கோட்டையன், அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தர கோருவார் என சொல்லப்பட்டது. இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்றும் சொல்லப்பட்டது. எதிர்க்கட்சியாக கூட அதிமுக வெல்ல முடியாததால் அதிமுகவினர், எடப்பாடி மீது கடும் அதிருப்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என சி.வி.சண்மும், எஸ்பி.வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் செங்கோட்டையன் பிரஸ் மீட்டில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தவெகவுக்கு 12 எம்எல்ஏக்கள் தேவைப்படும் பட்சத்தில் அதிமுகவில் இருந்து 30 எம்எல்ஏக்கள் ஒரு பிரிவாக போய் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி பேச்சுகள் நடைபெறும் நிலையில் சி.வி. சண்முகத்தின் வீட்டிற்கு எஸ்.பி.வேலுமணி சென்றுள்ளார். அங்கு நீண்ட நேரமாக இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வென்றுள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வென்றது. தவெக 108 தொகுதிகளில் வென்றுள்ளது. தற்போது ஆட்சி அமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை! விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? முக்கிய அறிவிப்பு வெளியாகிறது -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications