அதிமுகவை உடைக்க சிவி சண்முகம் திட்டம்? தவெகவுக்கு தாவும் 32 எம்எல்ஏக்கள் ? பிரபலம் சொல்வது நிஜமா
சென்னை: அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. குறிப்பாக சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி ஆகியோர் 32 எம்எல்ஏக்களை திரட்டி விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவளிக்க ரகசியமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுவது பரபரப்பை தந்து வருகிறது. பாஜகவின் அதிருப்தி மற்றும் சசிகலாவை இணைக்காததால் ஏற்பட்ட பின்னடைவு என அதிமுக உடைப்புக்கான பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதர் பிரகாஷ் தந்துள்ள பகீர் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 36 எம்.எல்.ஏ-க்கள் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளனர்..

இன்று காலை நடந்த கூட்டத்தில் கூட்டணி தோல்வி மற்றும் தேர்தல் நிதி தொடர்பாக எடப்பாடிக்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.. இதனைத் தொடர்ந்து மதியம் நடந்த ரகசிய ஆலோசனையில், எடப்பாடிக்கு மாற்றாக எஸ்.பி. வேலுமணியை முன்னிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக உடைக்க திட்டம்?
குறிப்பாக கொங்கு மண்டல எம்.எல்.ஏ-க்களே எடப்பாடிக்கு எதிராகத் திரும்பியுள்ளதால் அதிமுக மீண்டும் பிளவுபடும் சூழல் உருவாகியுள்ளது.. எடப்பாடி பழனிசாமி பக்கம் மிகக் குறைந்த எம்.எல்.ஏ-க்களே இருப்பதால் அவரது தலைமைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, தமிழக அரசியலில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. விரைவில் அதிமுகவில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் தாமோதர் பிரகாஷ் ஒரு சேனலுக்கு பரபரப்பு தகவல்களை கூறியிருக்கிறார். அதில், "எடப்பாடி பழனிசாமியை அதிமுகவுக்குள் சுத்தமா பிடிக்கல.. அதனால் எடப்பாடியை மாற்ற வேண்டும் என்கிற கண்டிஷன் உள்ளது..
சிவி சண்முகம் பிளான்
அதற்கு சரியான சந்தர்ப்பம் வந்து தவெகவுக்கு குறைவாக இருந்ததால், அதிமுகவை உடைத்து, 47 எம்எல்ஏக்களில் இருந்து 32 எம்எல்ஏக்களை கொண்டு வருவதுடன், எடப்பாடி அதிமுகவுக்கு தலைவர் கிடையாது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று , சிவி சண்முகம் ரொம்ப நாட்களாகவே முயற்சி செய்கிறார்.
சிவி சண்முகம் மட்டுமல்ல, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி என்று 5 பேர், எடப்பாடியை பார்த்து பேசி, அதனால் எடப்பாடியை டென்ஷன் ஆகிட்டார்.. எடப்பாடிக்கும் சிவி சண்முகத்துக்கும் சண்டையே வந்துள்ளது.. வேலுமணியை பொறுத்தவரை, எடப்பாடிக்கு பதிலா தான் தான் கட்சியின் பொதுச்செயலாளராக வரப்போகிறோம் என்று தொடர்ந்து முயற்சி செய்தபடி உள்ளார்,
கொங்கு வேலுமணி
தன் உறவினரின் கல்யாணம் பத்திரிக்கையை தமிழ்நாடு முழுக்க எல்லாருக்கும் கொடுத்து எல்லாரையும் வர வச்சாரு வேலுமணி. உடனே எடப்பாடி வேலுமணியிடம், "நீங்க பத்திரிக்கை கொடுக்க போகும்போதே எனக்கு தெரியும் நீங்க இந்த வேலைகளில் ஈடுபடுவீர்கள் என்று" என்று சொன்னதுடன், வேலுமணி செய்த அனைத்து வேலைகளையும் எடப்பாடி கண்டுபிடித்துவிட்டார்.
ஆனால், வேலுமணியும், சிவி சண்முகமும், ஒன்றுசேர்ந்து செய்யும் வேலை இன்றுவரை தொடர்கிறது.. சிவி சண்முகமும் வேலுமணியும் 32 பேரை திரட்டி விஜய் ஆபீஸ் பக்கத்திலயே கூட்டம் போட்டு விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிற நிலையில் இருக்கிறார்.. நாளைய செய்தி என்பது "அதிமுக உடைப்பு, புதிய நிர்வாகிகள்" அப்படின்ற மாதிரிதான் தற்போது நிலைமை உள்ளது.
பாஜக தலையிடாது
இதில் பாஜக தலையிடுமா என்றால், பாஜகவுக்கு எடப்பாடி மீதே நிறைய கோபம் உள்ளது.. ஏனென்றால் தங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகள் எல்லாமே ஜெயிக்காத தொகுதிகளாக தந்துவிட்டார் என்ற கோபம் உள்ளது.. கிட்டத்தட்ட 25 தொகுதிகளுக்கு மேல போட்டி போட்டும், ஒரு தொகுதிதான் வெற்றி பெற்றிருக்கிறது பாஜக.. போஜராஜன் எப்பவும் வாங்குற ஓட்டுதான் வாங்கியிருக்கிறாரே தவிர, புதுசா ஒன்னும் அவர் ஓட்டு வாங்கல.. இந்த அளவுக்கு அசிங்கப்படுத்திட்டாரு எடப்பாடி என்ற கோபம் பாஜகவுக்கு உள்ளது..
ஒற்றுமையா இருந்து, சசிகலா எல்லாரையும் சேர்த்து வச்சு ஏற்பாடுகளோடு அவர் போயிருந்தார் என்றால், இன்றைக்கு அதிமுகதான் தவெக நிலைமைக்கு வந்திருக்கும்.. அதிமுக ஆட்சிதான் அமைந்திருக்கும் என்பதும் ஓரு நிலையாக இருந்தது.. இப்படி எல்லாமே ஓடிக்கிட்டு இருக்கும்போது, விஜய் என்கிற ஒரு பெரிய பொலிட்டிக்கல் சேஞ்ச் வந்துள்ளது" என்றெல்லாம் தெரிவித்தள்ளார












Click it and Unblock the Notifications