சிவி சண்முகம் மாஸ்டர் பிளான் போட்டுட்டாராமே.. டெல்லியில் மூவ்! பகீர் கிளப்பும் ஓபிஎஸ் டீம் Exclusive
சென்னை: எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை இடையே கடுமையான வார்த்தைப் போர் நடந்த நிலையில், பாஜக - அதிமுக மோதல் உக்கிரமடைந்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ஒரு மாஸ்டர் பிளானை போட்டுவிட்டார் எனக் கூறி பகீர் கிளப்புகிறது ஓபிஎஸ் தரப்பு.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி இங்கே..

கேள்வி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தற்குறி, கிணற்றுத் தவளை, கொலை வழக்கில் பதுங்கி இருந்தவர் என பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோதும் ஓபிஎஸ் தரப்பு அமைதியாக இருப்பது ஏன்?
நாஞ்சில் கோலப்பன்: குடும்பம் ஒன்றாக ஒருக்கும்போது வேறு யாரும் வந்து இப்படி பேச முடியுமா? கட்சி அழிய வேண்டும் என நினைத்து செயல்பட்டால் இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டி இருக்கும். இரட்டை இலை சின்னம் பெறவும், கட்சியை கையில் எடுக்கவும் அண்ணாமலை காலில் விழுந்தார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அவர் எட்டி உதைக்கிறார்.
Exclusive திமுகவுடன் நெருங்கும் பாஜக.. உக்கிரமடையும் அண்ணாமலை - எடப்பாடி சண்டை.. என்ன நடக்கிறது?
இங்கே மாநிலத்தில் ஆட்சியிலும் இல்லை. மத்தியில் ஆளும் பாஜகவை கையில் வைத்திருக்க வேண்டும். அதையும் விட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் பதவியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் மோடிக்கு போய் மாலை போட்டு மரியாதை கொடுப்பார். இப்போது மட்டும் சித்தாந்த பிரச்சனையா?
எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் ஒரு மாவட்ட செயலாளர் கூட இல்லை. அடிமட்டத் தொண்டர்கள், கட்சி கொடிக்காகவே அங்கு இருக்கிறார்கள். கொடி எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்றால் அடுத்த நிமிடமே அவரை தூக்கி எறிந்து விடுவார்கள்.
சி.வி.சண்முகம் தெளிவான பிளானில் இருக்கிறார். சி.வி.சண்முகம் இல்லை என்றால் இந்த வழக்குகளில் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி கிடைத்திருக்காது. கட்சி கொடி, சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்ததில் மாஸ்டர் பிளான் சி.வி.சண்முகம் தான். இப்போதும் அவர் ஒரு பிளானை போட்டுவிட்டார்.
எடப்பாடி பழனிசாமியை நம்பி வண்டி ஓட்ட முடியாது என்பது சி.வி.சண்முகத்துக்கு தெரியும். சி.வி.சண்முகம் கையில் ட்ரம்ப் கார்டு இருக்கிறது. சி.வி.சண்முகம் கையில் 20 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர் நினைத்தால் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து மத்திய அமைச்சர் ஆகலாம். ஸ்கெட்ச் போட நினைத்துவிட்டால், சி.வி.சண்முகம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சர்.
சி.வி.சண்முகம், பழைய விஷயங்களை மறந்து ஓ.பி.எஸ் உடன் இணைந்தால் அவர் மத்திய அமைச்சர் ஆகிவிடுவார். எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டால் திரும்பவும் அதிமுக வலிமையடைந்து விடும். அப்படி நடந்தால் அண்ணாமலை வாய் திறப்பாரா? எனக் கேட்கிறார் நாஞ்சில் கோலப்பன்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம்












Click it and Unblock the Notifications