குடியுரிமை சட்ட திருத்தம்: அரசியல் கட்சிகளைக் கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதைக் கண்டித்து சென்னையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல்லி, உ.பி. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன.

கர்நாடகாவின் மங்களூருவிவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்தார்.
இன்றும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் டிசம்பர் 23-ந் தேதி அனைத்து எதிர்கட்சிகளின் பிரமாண்ட பேரணி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் போராட்டத்தைக் கண்டித்து சென்னையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications