சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்துக்களே உஷார்.. இஸ்லாமிய சதி துவங்கி விட்டது... பிரிவினையை அனுமதியோம்.. இது எச்.ராஜா!

வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு எச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu

    சென்னை: "தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவர சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். இந்துகளே உஷார்" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை ட்வீட்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.

    சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்தது.. தள்ளுமுள்ளு, போலீஸ் தடியடி.. மறியல்.. கைது.. விடுவிப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தபடியே உள்ளன.

    caa chennai vannarapettai protest issue: H raja tweet

    இதில் போராடிய பெண்களை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது.. அதேபோல ஒரு முதியவர் உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால் இதனை போலீஸ் தரப்பு மறுத்து விளக்கம் அளித்துவிட்டது.

    பெண்களை தாக்கியதாக கூறப்படும் போலீசாருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இந்த கலவரம் தொடர்பாக அடுத்தடுத்த ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. அவைகளில்:

    "சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநிலம் முழுவதும் கலவரக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்" என்று ஒரு பதிவு போட்டுள்ளார்.

    "1998ல் கோவையில் தொடர் குண்டு வைத்த கும்பல் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கலவரம்" என்று ஒரு பதிவும், "அதர்மம் தலைவிரித்தாடுகிறது. சீனாவின் அணுகுமுறை இங்கும் வரவேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளார்.

    மேலும் "தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். இந்துகளே உஷார்", என்று எச்சரிக்கை விடுத்து அடுத்தடுத்த மொத்தமாக 4 ட்வீட்கள் பதிவிட்டுள்ளார். இந்த 4 பதிவிற்கும் காரசாரமான பதிலடிகள், கமெண்ட்கள் விழுந்தபடியே உள்ளன.. இதனால் எச்.ராஜாவின் ட்விட்டரே அதகளமாக காணப்படுகிறது.

    English summary
    caa chennai vannarapettai protest issue and bjp senior leader H raja condemns
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X