புரட்டாசி போய் ஐப்பசி வரட்டும்.. உதயநிதிக்கு ஸ்வீட் நியூஸ்! கலைத்து ஆடும் ஸ்டாலின்.. மெகா மாற்றம்..!
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் தலைமைச் செயலர், முதல்வரின் தனிச் செயலாளர் என பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருந்தது. இந்நிலையில் விரைவில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் இருப்பதாக கூறப்படும் நிலையில், புரட்டாசி மாதம் நிறைவடைந்த பிறகே அதாவது அக்டோபர் 2வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும், அப்போது உதயநிதி துணை முதலமைச்சர் ஆவது குறித்த அறிவிப்பும் இருக்கும் என்கின்றனர் திமுகவினர்.
தொடர்ந்து பல மாதங்களாகவே அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு இன்னும் விடை கிடைக்காமல் இருக்கிறது.

இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்துவிட்ட நிலையில், இன்னும் அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.
இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,"உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என பேசினார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் திமுகவில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவாரா என்பது குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,” ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் இருக்கும்” என நான்கே வார்த்தையில் பதில் அளித்தார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது உறுதியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதும் உறுதியாகியுள்ளது. ஆனால் அந்த தேதி எப்போது என்பது தான் பலருக்கும் கேள்வியாக உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு அதிகாரிகளின் மாற்றம் நிகழ்ந்தது. உச்சபட்சமாக தமிழகத்தின் தலைமைச் செயலரும் மாற்றப்பட்டார். அதற்கு அடுத்ததாக முதல்வர் தனிச் செயலர்களும் அடுத்தடுத்து பதவி மற்றும் செய்யப்பட்டனர்.
இன்னும் சில நாட்களில் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கப் போகிறது. ஏற்கனவே நீண்ட காலமாக யூகமாகவே இருக்கும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக நியமனம் செய்யப்படுவதற்கான முன்னேட்டமே தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளின் மாற்றம் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர். இதற்கிடையே விரைவில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் இருப்பதாக கூறப்படும் நிலையில், புரட்டாசி மாதம் நிறைவடைந்த பிறகே அதாவது அக்டோபர் 2வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும், அப்போது உதயநிதி துணை முதலமைச்சர் ஆவது குறித்த அறிவிப்பும் இருக்கும் என்கின்றனர் திமுகவினர்.
இதேபோல் அமைச்சரவை மாற்றத்திலும் சில முக்கிய பாயிண்டுகள் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஒரு சில அமைச்சர்கள் மீது அதிருப்தி குரல்கள் வந்திருக்கிறது. மேலும் ஏற்கனவே பதவியில் இருக்கும் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளை கண்டு கொள்வதில்லை. ஒரு சில முறைகேடு புகார் என தலைமைக்கு புகார்கள் வந்திருக்கிறது. இதை அடுத்து அவர்கள் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
சிலருக்கு புதிதாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. சில அமைச்சர்கள் துறை ரீதியான மாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர். அது மட்டும் அல்லாமல் சில மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் அமைச்சர்களும் பொறுப்பு அமைச்சர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் திருவள்ளூர்,சேலம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications