2 அமைச்சர்களுக்கு கல்தா.. சீட்டுகளை கலைத்து போடும் ஸ்டாலின்! தமிழக அமைச்சரவையில் மாற்றம்?
சென்னை: செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு, சர்ச்சை பேச்சு தொடர்பாக பொன்முடிக்கு நெருக்கடி, அடுத்தடுத்து விசாரணைக்கு உள்ளாகும் அமைச்சர்கள் என திமுக அமைச்சரவையில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லை. இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் எனவும், பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு பதிலாக அவர்களது துறைகள் அமைச்சர்கள் சக்கரபாணி, சாமிநாதன், விழுப்புரம் லட்சுமனன் உள்ளிட்டோரிகளுக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதையிலிருந்து திமுக தயாராகி வருகிறது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ஆகியவையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் இருக்க திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு ஆகியவற்றை முன்வைத்து அதிமுக போர் கொடி தூக்கி வருகிறது. பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராக பலத்த தாக்குதலை அதிமுகவும் பாஜகவும் தொடுத்து வருகிறது.

இதற்கிடையே ஏற்கனவே ஒரு முறை பதவி இழந்த பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக சட்ட விரோதமாக பணம் பெற்ற வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பிறகு செப்டம்பர் மாதம் திமுக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட போது செந்தில் பாலாஜி தான் ஏற்கனவே கவனித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறையை பெற்றுக் கொண்டார்.
இதே போல திமுக சீனியர் அமைச்சரான பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி இழந்தார். பிறகு உச்ச நீதிமன்ற தண்டனையை நிறுத்தி வைத்ததால் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும் சைவம் வைணவம் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கனிமொழி நேரடியாக கண்டிக்க அவரது துணை பொது செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென பாஜகவும் அதிமுகவும் கூறி உள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் காவல் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது உச்சநீதிமன்ற ஜாமீனில் இருக்கும் அவர் சாட்சிகளை கலைப்பதாக வருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் பதவி வேண்டுமா ஜாமீன் வேண்டுமா என்பதை 28ஆம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால் பொன்முடி, செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் துரைமுருகன், பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த நீதிமன்றம் 6 மாதத்துக்குள் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இப்படி அடுத்தடுத்த சிக்கல்களால் திமுக அமைச்சர்கள் கடும் நெருக்கடிகள் உள்ளாகியுள்ளனர். உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து தமிழக அமைச்சர்களையும் தமிழக அரசையும் விமர்சித்து வருகிறது.
இதனால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஏற்கனவே அவர்கள் வகித்து வரும் துறைகளை சில சீனியர் அமைச்சர்கள் பகிர்ந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றபோது மின்சார துறை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வசமும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி இடமும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முறை சக்கரபாணி, சாமிநாதன் ஆகிய இருவரில் ஒருவருக்கு மின்சாரம், மதுவிலக்குத் துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொன்முடி வகித்து வரும் வனத்துறை அமைச்சர் பதவி விழுப்புரம் லட்சுமணனுக்கு ஒதுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர். இதனால் இரு அமைச்சர்களின் ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுப்பு! திமுகவின் சாமிநாதன் வேட்பாளரானது எப்படி?












Click it and Unblock the Notifications