4 பேர் ஏற வேண்டிய காரில் லக்கேஜுடன் வந்த 6 பேர்.. ஏற்ற மறுத்த கால் டாக்சி டிரைவர் மீது தாக்குதல்
சென்னை: சென்னை அருகே ஓலா கால்டாக்சி ஓட்டுநர்க்கு ரத்தம் வரும் அளவிற்கு அடித்த வாடிக்கையாளர்கள் மூன்று பேர் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பொன்னேரியை சேர்ந்த ஞானபிரகாசம் (40) என்பவர் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் இன்று பணியில் இருக்கும்போது சென்னையை அடுத்த நாவலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள இராநந்தினி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிக்கப் போட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் 3 பெண்கள் 3 ஆண்கள் என 6 பேர் அதிக லக்கேஜுடன் வந்ததாகவும் அதற்கு ஓட்டுநர் ஞானபிரகாஷ் இந்த வாகனத்தில் 4 பேர் மட்டுமே செல்ல முடியும். 6 பேர் செல்ல முடியாது. அதுமட்டுமல்லாமல் லக்கேஜ் அதிகமாக உள்ளது என்று கூறியதாக கூறப்படுகிறது.

ஏற்க மறுப்பு
ஓலா கால்டாக்சி ஓட்டுநர் கூறியதை ஏற்க மறுத்த வாடிக்கையாளர்கள் ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் ஓட்டுநர் ஞானபிரகாஷை திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் இருதரப்பினரும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒரு கட்டத்தில் மூன்று ஆண்களும் சேர்ந்து ஓட்டுநர் ஞானபிரகாசத்தை கண்மூடித்தனமாக தாக்கியதில் மூக்கு தண்டு உடைந்து இரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளது.

காவல் துறை கட்டுப்பாடு
ரத்த வெள்ளத்தில் காவல் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்துள்ளார் ஞானப்பிரகாசம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீஸார் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். வாடிக்கையாளர்கள் மூன்று பேர் தன்னை தாக்கியது மட்டுமல்லாமல் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக ஓட்டுநர் ஞானபிரகாஷ் புகார் அளித்துள்ளார்.

புகார்
அதேபோல் ஓட்டுநர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மூவர் கார் அளித்துள்ளனர். இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கால் டாக்சி ஓட்டுநர் கூறுவதில் நியாயம் இருக்கா இல்லையா என்று கூட பார்க்காமல் இது போன்று அவரை போட்டு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய கார்
பொதுவாக இரு சக்கர வாகனம் என்றால் அதில் இருவர்தான் செல்ல வேண்டும். அது போல் சிறிய கார் என்றால் ஓட்டுநருடன் சேர்த்து 4 பேர், பெரிய ரக கார் என்றார் 6 பேர், 8 பேர் என செல்லலாம். அதற்கு மேல் என்றால் வேன்தான் சரிப்பட்டு வரும். சிறிய காரை புக் செய்துவிட்டு 6 பேர் ஏறுவோம் என அடம்பிடித்தால் எப்படி? கொரோனா காலத்தில் இன்னும் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இது போல் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றினால் அந்த கால் டாக்சி டிரைவர்தான் போலீஸ் நடவடிக்கைக்குள்ளாகிறார். இதை அறியாமல் அவரை காட்டுத்தனமாக தாக்கியுள்ளது கால் டாக்சி ஓட்டுநர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டிரைவர்களின் கோரிக்கை
மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே டிரைவர்களின் கோரிக்கையாகும். எண்ணிக்கைக்கேற்ப கார்களும் உள்ளன என்பதை மறந்திடாமல் கார்களை புக் செய்ய வேண்டும் என்பதே டிரைவர்கள் விரும்புகிறார்கள். இதுகுறித்து கால் டாக்சி டிரைவர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இப்போதுதான் நாங்கள் தலை தூக்கி வருகிறோம். இதை மக்கள் புரிந்து கொள்ளாமல் அடாவடி செய்கிறார்கள். 4 பேர் ஏற்ற வேண்டிய காரில் 6 பேர், லக்கேஜ்களை ஏற்றினால் பள்ளம் மேடுகளில் செல்லும் போது வாகனம் அடிபடும். இதற்கு டிரைவர்தான் செலவு செய்ய வேண்டும். மேலும் அளவுக்கு மீறி ஏற்றினால் போக்குவரத்து போலீஸார் மடக்கினால் டிரைவர்தான் சொந்த காசு போட்டு அபராதம் செலுத்த வேண்டியிருக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
-
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications