பேச முடியாது.. சோர்வாக நடந்து வந்த செந்தில் பாலாஜி.. வரும்போது லிஃப்ட்.. போகும்போது படிக்கட்டு!
சென்னை: இன்று அமலாக்கத்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி வரும் போது லிஃப்ட் ஏறி வந்தார். திரும்பிச் செல்லும்போது படிக்கட்டு வழியாக இறங்கி நடந்து சென்றார். அப்போது மிகுந்த சோர்வாக காணப்பட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு, புழல் சிறையில் இருந்து வந்த நிலையில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறது.

செந்தில் பாலாஜியிடம் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி சகோதரர் மனைவி நிர்மலாவின் பெயரில் உள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார், அவரது மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி ஆகியோர் ஆஜராகவில்லை என்பதால் சொத்து முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை இன்று நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத் துறையினர் துன்புறுத்தினார்களா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, இல்லை என செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. 120 பக்கங்களை கொண்ட அந்த குற்றப்பத்திரிகையுடன் 3000த்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றப் பத்திரிக்கையில் முழுக்க முழுக்க செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், அவரது சகோதரர் அசோக் குமார் உட்பட வேறு யாருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

பின்னர், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை அமலாக்கத்துறையினர் தங்கள் காரில் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.
முன்னதாக, நீதிமன்றத்திற்கு நீதிபதி முன்பாக ஆஜராக வரும்போது லிஃப்ட் ஏறி வந்தார் செந்தில் பாலாஜி. அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் லிஃப்ட்டிலேயே சென்றனர். வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு திரும்பிச் செல்லும்போது படிக்கட்டில் இறங்கி கீழே நடந்து சென்றார்.
அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கையை அசைத்தபடி சோர்வாக நடந்து சென்றார் செந்தில் பாலாஜி. நீதிமன்ற காவலில் இருப்பதால் எதுவும் பேச முடியாது என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் பரணிதரன் அப்போது விளக்கம் அளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications