சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிலிண்டர் விலை உயர்வு.. அண்ணாமலை போராட்டம் நடத்துவாரா.. வைகோ கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வரும் மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் செய்வாரா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்படுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், பெட்ரோல், டீசல் விலையை பன்னாட்டு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவதைப் போல, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

விலையை ஏற்றி அன்பை பொழிகிறார் மோடி.. சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! விளாசிய திரிணாமுல் காங்கிரஸ்! விலையை ஏற்றி அன்பை பொழிகிறார் மோடி.. சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! விளாசிய திரிணாமுல் காங்கிரஸ்!

18 மாதங்களில் 50.44% உயர்வு

18 மாதங்களில் 50.44% உயர்வு

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது. தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த மே மாதம் ரூ. 1018.50க இருந்தது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.1068.50 ஆக மத்திய பாஜக அரசு உயர்த்தி இருக்கிறது. 19 மாதங்களில் சமையல் எரிவாயு உருளை ரூ.358.50 என, 50.44 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளில் ரூ.658 உயர்வு

8 ஆண்டுகளில் ரூ.658 உயர்வு

இந்த விலை உயர்வுக்கு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவும் காரணம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. 2014 மே மாதம், மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றபோது, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.410.50க இருந்தது. பாஜக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 658 அதிகரித்து, தற்போது சமையல் எரிவாயு விலை ரூ.1068.50க உள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

2014 ஆம் ஆண்டு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலர். தற்போது கச்சா எண்ணெய் விலை 113.50 டாலரிலிருந்து 102 டாலராக வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் இருந்த அளவுக்குத்தான், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2022 ஜூலை மாதமும் இருக்கிறது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.410க நிர்ணயம் செய்ய வேண்டும்.

Recommended Video

    Annamalai எச்சரிக்கை |DMK-வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் | *Politics
    அண்ணாமலைக்கு கேள்வி

    அண்ணாமலைக்கு கேள்வி

    சமையல் எரிவாயு மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறோம் என்ற திட்டத்தைச் செயல்படுத்திய மத்திய அரசு, மானியத்தை ரூ. 300ல் இருந்து தற்போது வெறும் ரூ.24க குறைத்துள்ளது. தாங்க முடியாத விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் தொடர்ந்து உயர்த்துவதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வரும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    The price of a 14.2 kg cylinder for household use has been increased by Rs.50. While various parties are condemning this, MDMK General Secretary Vaiko has expressed his condemnation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X