அண்ணாமலை ஜெயிக்க போறாரா? கோவையை வட்டமிடும் "மேலிட" தலைகள்.. திமுகவில் பரபரப்பு
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரங்கள் அனலடித்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு பிரத்யேகமான செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.

பிரியங்கா காந்தி: அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார்கள்.
அந்தவகையில், ராகுல் காந்தி 12-ம் தேதி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது... முக்கியமாக, கோவை, நெல்லையில் பிரச்சாரம் செய்ய போகிறாராம். நெல்லையில், முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரச்சாரம்: அதேபோல, முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் கோவையிலும் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள போவதாக, நேற்றைய தினம் திமுக தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. ஏப்ரல் 12ம் தேதி கோவை செட்டிபாளையம் எல்&டி பைபாஸ் ரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இவர்கள் பங்கேற்று இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில், நெல்லையில் மட்டுமே ராகுல் பிரச்சாரம் செய்வதாக இருந்த நிலையில், கோவையிலும் பிரச்சாரம் செய்ய போவதாக கூறப்படுவது அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை திருப்பி வருகிறது.
நிலவரம்: இப்படிப்பட்ட சூழலில், நமக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி கிடைத்துள்ளது. அதாவது, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்களின் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை சோனியாவும் ராகுலும் விசாரித்து வருகிறார்கள்.
ஏற்கனவே தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலும் இந்த விசாரணை நடக்கிறதாம். அந்த அடிப்படையில், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தலைவரான ஸ்டாலினையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சோனியா காந்தி. அப்போது பல விசயங்கள் விவாதிக்கப்பட்டதாக திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின்: இதுகுறித்து திமுக தரப்பில் நாம் விசாரித்தபோது, "தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்து சோனியா கேட்டறிந்துள்ளார். அப்போது, 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி ஜெயிக்கும். "டோண்ட் வொர்ரி மேடம்" என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு சோனியாவும், "மூன்று வருட திமுக ஆட்சியின் சாதனைகளும் நிறைவேறிய வாக்குறுதிகளுமே அதற்கு சாட்சியாக இருக்கு. ஆனாலும், ஒரு இடத்தில் பாஜக ஜெயிக்கும். அந்த ஒரு இடம் அண்ணாமலைன்னு ஒரு தகவல் எனக்கு சொல்றாங்க. பாஜக ஒரு இடத்துல கூட ஜெயித்துவிடக்கூடாது" என்றாராம்.
மேடம்: அதற்கு ஸ்டாலின், அவர் (அண்ணாமலை) டெபாசிட் இழப்பார். 40 இடங்களும் திமுக ஜெயிக்கும்" என நம்பிக்கை கொடுத்துள்ளார். உடனே சோனியா, "தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் வரலாம்னு இருக்கிறேன்னு சொல்லவும், "மேடம், உங்க உடல் நிலையை பார்த்துக்குங்க. கஷ்டப்படுத்திக்க வேணாம். அதான், ராகுல் வர்றார் இல்லை... அதுவே போதும்" என ஸ்டாலின் சொன்னதை ஏற்றுக் கொண்டார் சோனியா " என்கிறார்கள் திமுக தரப்பில்.
இதனிடையே, ராகுல் மட்டும் போதாது சோனியா, பிரியங்காவும் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகத்துக்கு வரவேண்டும் என்று மேலிடத்தில், கோரிக்கை வைத்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
ஆக..... தமிழக பாஜகவின் பிரச்சாரம் டெல்லி வரை எதிரொலித்திருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.. தனித்து கூட்டணி வைத்து போட்டியிட்டு, சற்று அதிகமாகவே இந்த முறை ரிஸ்க் எடுத்துள்ளது தமிழக பாஜக..
மும்முனை: அதிலும், மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் போட்டியிடுவதாலேயே, இந்த தொகுதி தேசிய அளவிலும் கவனத்தை பெற துவங்கிவிட்டது. தமிழகத்தில் பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது என்றாலும், கோவையில் நிலவும் போட்டி, தமிழக அரசியல் கட்சிகளுக்கே ஒரு சவாலாகவும் அமைந்து வருகிறது.
அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக, மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பணமழைக்கும், பரிசு பொருட்களுக்கும் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
அண்ணாமலை: "நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன். பாஜக எதுவும் செலவு செய்யாது.. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த கோவை தொகுதி இருக்கும். தமிழகத்தின் அரசியல் மாற்றமும் கோவையில் இருந்துதான் தொடங்க போகிறது" என்று அன்று அண்ணாமலை கூறியிருந்ததை திமுகவும் கவனிக்காமல் இல்லை.
இப்படிப்பட்ட சூழலில், கோவையில் அண்ணாமலையின் பிரச்சார எழுச்சியானது, டெல்லி வரை எதிரொலித்திருக்கிறது.. இந்த எழுச்சியை ராகுலும், ஸ்டாலினும் ஒன்றுசேர்ந்து பலமிழக்க செய்வார்களா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
கோவை ஷாக்! அண்ணாமலை - வானதி மோதலில் அந்த 1 மணி நேரத்தில் நடந்தது என்ன? வெளியே வராத திருப்பம் -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்?












Click it and Unblock the Notifications