தூள்தூளா போகுதே.. வினோத் பி.செல்வம் எங்கே நிக்கறாரு பாருங்க? பாஜக முதல் பந்து.. விழிக்கும் திராவிடம்
சென்னை: தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியில், முக்கிய கட்சிகள் இறங்கி உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில், அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கின் சில நிகழ்வுகளில், திமுகவின் நடவடிக்கைகளின்மீது பிரேமலதா வருத்தம் கொண்டுள்ளார்.. இதனை வெளிப்படையாகவே சொல்லி, திமுகவுடன் கூட்டணி போக விரும்பவில்லை என்பதையும் கூறிவிட்டார். எனவே, அதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுகவும், பாஜகவும் தயாராகி வருகின்றன.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவில் கூட்டணி முடிவாகவில்லை.. எனவே, பாமகவை போலவே, தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு முயல்வதாக தெரிகிறது.
விஜயகாந்த்: இதில் பாஜகவே முதலில் முந்திக் கொண்டுவிட்டதாக தெரிகிறது. திருச்சி விழாவுக்கு வந்திருந்த மோடி, விஜய்காந்தை புகழ்ந்து பெருமைப்படுத்தியதுடன், பத்மபூஷன் விருதையும் மத்திய அரசு அறிவித்து கௌரவித்துள்ளது.
பாஜக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. வலுவான கூட்டணி அமையாத பட்சத்தில் பாஜக தனித்துப் போட்டியிட விரும்புகிறது. பாஜக கூட்டணிக்குள் தேமுதிக இருந்தாலும், இல்லாது போனாலும் விஜய்காந்தின் ஆதரவு வாக்குகளை பாஜக பக்கம் திருப்பவே இந்த திட்டம் என்கிறார்கள்.
பாஜக கூட்டணி: அதாவது, பாஜக கூட்டணியில் தேமுதிக இருந்தால் அக்கட்சியின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துவிடும். அதுவே, பாஜக தனித்துப் போட்டியிட்டால், விஜய்காந்தின் மீது பாசம் கொண்ட நடுநிலை வாக்காளர்களை பாஜக பக்கம் கொண்டு வர வேண்டும். எம்பி தேர்தல் என்பதால், தேமுதிகவுக்கு வாக்களித்தாலும் அக்கட்சியில் ஜெயிக்க முடியாது.. அதனால் மோடிக்கு வாக்களிப்போம் என்கிற கான்செப்டில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று யோசித்துத்தான் விஜயகாந்த் ஓட்டுப்பக்கம் பாஜக திரும்பியிருப்பதாக தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான்தான், தமிழக பாஜக மாநில இளைஞரணித் தலைவர் வினோத் பி.செல்வம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.. அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பிறகு, பிரேமலதா விஜயகாந்தையும் சந்தித்து பேசியிருக்கிறார்.
பேச்சுவார்த்தை: அப்போது, எம்பி தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மும்முரமாகி வருவது தெரிகிறது... அத்துடன், விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள அனுதாபத்தையும் தங்களுக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்ள முயன்றுவருவதாகவும் தெரிகிறது.
எனினும், எத்தனை சீட்கள், எத்தனை தொகுதிகள் தேமுகவுக்கு ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை.. எப்படியும் டெல்லி செல்வது என்ற முடிவில் உள்ளதால், அதிமுக, பாஜக இவைகளில் ஏதாவது ஒன்றில் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது..
இதெல்லாம் நடக்குமா? : ஒருவேளை, பாஜகவிடம் கூட்டணி வைக்கும் பட்சத்தில், ஒரு ராஜ்ய சபா சீட்டும், ஒரு மத்திய அமைச்சர் பதவியும் கேட்க வேண்டும் என்ற முடிவில் உள்ளதாகவும் தேமுதிக தகவல்கள் கூறுகின்றன. எனினும், பாஜக என்ன முடிவெடுக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications