Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாஸ்ட்ல.. மண்ட மேல இருக்கிற கொண்டைய மறந்துட்டாரே "தலைவர்".. கெத்து திமுக.. அப்ப சிக்கலில் எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவினரின் ஊழல் லிஸ்ட்டை அதாவது சொத்து பட்டியலை இன்று அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.. இதனால், திமுக, அதிமுக தரப்பில் என்ன மாதிரியான அதிர்வலைகளை உண்டுபண்ணி உள்ளது?

பல நாட்களாகவே ஊழல் பட்டியலை வெளியிட போவதாக சொல்லி கொண்டிருந்தவர் இன்றைய தினம் வெளியிட்டுவிட்டார்.. திமுகவை குறை சொல்வதாக கூறி, சொந்த கட்சியையே அண்ணாமலை சாடியிருப்பதாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது.

இணையதளத்தில் சில கேள்விகளையும் இது எழுப்பி வருகிறது.. திமுக மீது இத்தனை ஊழல்கள் என்றால், இத்தனை வருட ஆட்சி காலத்தில், பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கண்டுகொள்ளவில்லையா? திமுக மீது நடவடிக்கையை அவர்கள் எடுக்கவில்லையா? அப்படியானால் திமுகவை பாஜக மேலிட தரப்பு காப்பாற்றி வந்துள்ளதா? என்பன போன்ற சந்தேகங்கள் அண்ணாமலையால் இன்று எழுந்துள்ளதாகவே பார்க்கப்பட்டு வருகிறது..

Can BJP form an alliance with Edappadi Palaniswami and What is TN BJPs response to DMK

நிர்மலா சீதாராமன்: அயல்நாட்டு பணம் உள்ளே வருகிறது, வெளியே செல்கிறது என்றால், மத்திய பாஜகவின் கையில் உள்ள அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை கொண்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மத்திய அரசு ஏன் அவைகளை தடுக்காமல் இருந்திருக்கிறது? திடீரென திமுகமீது இத்தனை ஊழல் புகார்கள் என்றால், கிட்டத்தட்ட 10 வருடம் நாட்டை ஆண்டவர்கள், இது சம்பந்தமான நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை என்றுதானே அர்த்தம்? என்ற கேள்விகளை ஒருசாரார் எழுப்பி வருகிறார்கள்.

4 மாதங்களுக்கு முன்பு, இதே ரபேல் விவகாரம் வெடித்தபோது, மொத்தம் 500 வாட்ச்கள்தான் உள்ளன.. இது 149வது என்று கூறியிருந்தார் அண்ணாமலை.. இன்றைய தினம் 147வது வாட்ச் என்கிறார்.. அப்படியானால், அண்ணாமலையிடம் மொத்தம் 2வாட்ச்கள் இருக்கிறதா? தான் ஒரு தேசியவாதி என்கிறாரே, அப்படியானால் 2 கைகளிலும் 2 வாட்ச்களை கட்டிக்கொள்வாரா? என்றெல்லாம் இணையத்தில் சந்தேகங்கள் உலா வர துவங்கி உள்ளன.. "முன்பு - பின்பு" என்று குறிப்பிட்டு, லிஸ்ட் வெளியிட்டதை அண்ணாமலை தவிர்த்திருக்கலாமே? என்றும் கருத்துக்கள் எழுகின்றன.

ரெடி பட்டியல்: ஆனால், திமுகவின் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி தெளிவாக சொல்லிவிட்டார்.. "வழக்கு போட்டால் ரெடி.. அவைகளை சந்திக்க தயார்" என்று அறிவித்துள்ளார்.. ஆனால், பட்டியல்களை மட்டுமே வெளியிட்டு கொண்டிருந்தால், எப்போது அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு பாஜக தரப்புதான் பதிலளிக்க வேண்டி உள்ளது.. இன்றைய தினம் அண்ணாமலை வெளியிட்டுள்ள லிஸ்ட்டில், திமுகவைவிட கதிகலங்கி போயுள்ளது அதிமுகதான்.. காரணம், ஊழல் செய்த அனைத்து கட்சிகள் குறித்தும் லிஸ்ட் வெளியிடப்படும் என்று பஞ்ச் வைத்துள்ளதால், அதிமுக பக்கம் பாஜகவின் குறி திரும்பி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

இன்னொன்றையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. மேலிட பாஜகவின் ஒப்புதல் இல்லாமல் அண்ணாமலை, தன்னிச்சையாக எதுவுமே பேசமாட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அப்படியானால், இன்றைய தினம் அண்ணாமலை பேசியதைம் டெல்லி தலைவர்கள் அறியாமல் இருக்க வாய்ப்பேல்லை என்பதால், இது அதிமுகவுக்கு மறைமுகமான அடியாகவே பார்க்கப்படுகிறதாம்.. அதற்கேற்றவாறு, அதிமுக தரப்பில் அண்ணாமலை வெளியிட்ட லிஸ்ட் மீது பெரிதாக யாரும் கருத்துக்களை சொல்லவில்லை..

அதிமுக என்றில்லை, பாஜகவுக்குள்ளேயே மூத்த தலைவர்கள் யாரும் கருத்து சொல்லாமல் உள்ளதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. அதேசமயம், இன்றைய தினம் ஏன் அதிமுக ஊழல் பற்றி வெளியிடப்படவில்லை? ஒருவேளை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான ஒருவழிமுறையா? எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது ஏற்கனவே நிறைய கேஸ்கள் உள்ள நிலையில், அண்ணாமலை வெளியிட போவதாக சொன்ன அந்த ஊழல் பட்டியலை, அதிமுக மேலிடம் எப்படி அணுகும்? அவைகளை எப்படி எதிர்நோக்கும்? என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன..
சரக்கு இல்லையே..: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சொல்வதுபோல, "எதிர்க்கட்சியின் ஊழல் பட்டியலை மக்களுக்கு காட்டி என்ன பயன்? அதை தடுப்பதற்கான வழிமுறைகளை அவர் சொல்லவில்லையே.. இப்படி வெறும் அவதூறாக குற்றச்சாட்டை சொல்வதால் எந்த பலனையும் அது தராது. இன்று வெளியிட்ட இந்த பட்டியலில் ஆதாரமும் இல்லை.. பரபரப்பு தந்த அளவுக்கு "சரக்கு" இல்லை. இதன்மூலம், திமுகவுக்கு மாற்று, தான் மட்டுமே என்பதை காட்ட அண்ணாமலை முயற்சிக்கிறார்.. இதில் உள்ள ஆபத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ செல்வமும் புரிந்து கொள்ள வேணடும்" என்று எச்சரிக்கிறார் ஷ்யாம்.

ஆக, உண்மையான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் டெல்லி தலைமையிடம் அவைகளை தந்து, நடவடிக்கை எடுக்க இனியாவது சொல்வாரா அண்ணாமலை? அதிமுகவின் ஊழல் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என்று மறைமுகமாக சொல்லும், அதிமுகவுடன் கூட்டணி என்பதையும் சொல்வதன் காரணம் என்ன? ஒருவேளை அண்ணாமலையின் தனிப்பட்ட அரசியலா இது? என்பதும் தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும், திமுகவை டேமேஜ் செய்வதாக சொல்லிவிட்டு, அதிமுகவுடனான, இடைவெளியை இன்று அதிகமாக்கி உள்ளார் அண்ணாமலை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Can BJP form an alliance with Edappadi Palaniswami and What is TN BJPs response to DMK

போலீஸ் ஆபீசர்: 2 மாதங்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும், திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன், நம்முடைய "ஒன் இந்தியா" தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அப்போது, திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை சொல்லும், ஊழல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினோம்.. அதற்கு மனுஷ்யபுத்திரன், "இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதே.. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக, பேசாமல் போய் அண்ணாமலை அந்த போலீஸ் ஆபீசர் வேலையை பார்க்கலாம் இல்ல? எதுக்கு எப்ப பார்த்தாலும் பேட்டி தந்துட்டே இருக்கார்? அதாவது திமுக அரசு மீது குறை சொல்வதற்கு ஒன்னுமே இல்லை. பாஜக தரப்பில் சொல்லக்கூடிய விமர்சனங்களிலும் உடனுக்குடன் குட்டு வெளிப்பட்டு விடுகிறது.. இதுதான் அவங்களுக்கு பிரச்சனையே...

அண்ணாமலை சொல்லக்கூடிய குற்றச்சாட்டுக்கு இதுவரைக்கும் ஏதாவது ஒன்றிற்காவது ஆதாரம் இருக்கா? அவர் சொன்ன எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.. அப்படி விளக்கம் சொன்னபிறகும், திமுக தந்த விளக்கம் தவறு என்று என்னைக்காவது வந்து அவர் நிரூபித்திருக்கிறாரா? அண்ணாமலை என்பவர் வதந்தியை பரப்பும் ஒரு நபர்.. அவ்வளவுதான்" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார் மனுஷ்யபுத்ரன்.. இன்றைய தினமும், ஆர்எஸ் பாரதி நிறைய கேள்விகளை கேட்டுள்ளார்.. இதற்கான பதிலடியை அண்ணாமலை தருவாரா? அல்லது மறுபடியும் ஊழல் லிஸ்ட்கள் மட்டும் வெளியாகி கொண்டிருக்குமா? தெரியவில்லை.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!

Can BJP form an alliance with Edappadi Palaniswami and What is TN BJPs response to DMK

இதனிடையே, சீமான் கேட்டுள்ள கேள்வி புதுவித சிக்கலை பாஜகவுக்கு உண்டுபண்ணி உள்ளது.. செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இந்த பட்டியல் புகார்கள் புதிது இல்லை.. திமுக பற்றி பட்டியல் வெளியிட்டதால், அதிமுகவில் உள்ளவர்கள் புனிதர்கள் ஆகிவிட முடியுமா? அதனால் அதையும் வெளியிட வேண்டும்.. இரண்டு பக்கமும் நடவடிக்கை எடுக்கணும்.. அப்படியானால், ஊழல் செய்த கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்கிற பேரறிவிப்பையும் செய்ய வேண்டும்.. போன ஆட்சியில் எவ்வளவு சொத்து சேர்த்திருக்காங்க? ஊழல் செய்திருக்காங்க? அதையும் வெளியிடுங்க..

அப்பதான் நடுநிலைமையாக இருக்கும்.. அங்கே கூட்டணி வைத்து கொண்டிருப்பதால், வாய்மூடிட்டு அமைதியாக இருக்க கூடாது.. அப்படி நீங்கள் அமைதியாக இருந்தால், ஊழல் செய்தி கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வியை கேட்போம்.. நீங்க நேர்மையானவர்களாக இருந்தால், அதிமுக மாஜி அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை தயவுசெய்து வெளியிடுங்க.. ஊழல்களை வெளியிடுங்க.. நடவடிக்கையும் எடுங்க" என்று தெரிவித்துள்ளது, மேலும் தர்மசங்கடத்தை பாஜகவுக்கு உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+