Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தூண்டிலை" வடக்கில் வீசும் ஸ்டாலின்.. பாஜக கண்ணை உறுத்தும் திமுக.. அப்ப சு.சாமி சொல்வது நடந்துருமோ?

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று சுப்பிரமணிய சாமி பேசியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி என்று சுப்பிரமணிசாமி ஆரூடம் சொல்லி உள்ளார்.. அப்படியானால், அதற்கான சாத்தியக்கூறுகள் இங்கே அரசியல் களத்தில் உள்ளனவா?
நேற்றைய தினம் பாஜகவின் சுப்பிரமணியசாமி மதுரையில் பேசிய பேச்சு, மிகப்பெரிய அதிர்வலையை தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகிறது.

சு.சாமி பேசும்போது, "கருணாநிதி தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தவர் தமிழில் பெயரை வைக்கவில்லையே எங்கிருந்து வைத்தார். ரஷ்யன் பெயரை வைத்துள்ளார். தமிழ் தாய்மொழி. இந்தி கற்றுக் கொண்டால் என்ன தவறு? கட்டாயம் என்று நான் கூறவில்லை இந்தியை கற்றுக் கொள்ள விரும்புபவர்களை ஏன் தடை போடுகிறீர்கள் என்று தான் கேள்வி எழுப்புகிறேன்.

வீரமணி

வீரமணி

பெரியார், பெரியார் என்று கூறுபவர்கள் இன்று பெரியார் இருந்திருந்தால் திமுக இருந்திருக்காது. பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில் கட்டி கொடுத்து கோயிலை தனது மகன் ராமசாமி நாயக்கர் பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி கோயிலை முறையாக பராமரித்ததற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றுள்ளார். இது வீரமணிக்கு தெரியுமா? அவர் எங்கே இருக்கிறார் ஓடிப் போய்விட்டார்.. திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது அடுத்த சட்ட சபையில் ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும் என்ற முக்கிய கருத்தையும் தன் உரையில் சு.சாமி கூறியிருந்தார்.

 டவுட் + தாமரைகள்

டவுட் + தாமரைகள்

பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை ஸ்டாலின் தேசிய அளவில் கட்டமைத்து வரும்போது, சு.சாமி சொல்வது போல் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலருமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.. திமுகவை பொறுத்தவரை 2 விதமான கடமைகளில் உறுதியாக உள்ளது.. ஒன்று வரப்போகும் எம்பி தேர்தலை வென்றெடுப்பதுடன், மத்திய பாஜக அரசுக்கான மாற்றையும் உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

 நிதிஷ் & தேஜஸ்வி

நிதிஷ் & தேஜஸ்வி

பாஜகவை பொறுத்தவரை, தென்மாநிலங்களில் நினைத்த அளவுக்கு வெற்றிகளை பெற முடிவதில்லை.. இதற்கு முக்கிய காரணம், பாஜகவுக்கு சீட் ஒதுக்கீடுகள் அவ்வளவாக கிடைப்பதில்லை... ஆனால், இப்போது சிக்கல் என்னவென்றால், வடமாநிலங்களிலும் சில சறுக்கல்களை பாஜக சந்தித்து வருகிறது.. பீகாரில் நிதிஷ்குமாருடன் முட்டிக்கொண்டுவிட்டதால், நிதிஷ் + தேஜஸ்வி ஒன்று சேர்ந்துவிட்டதால் பாஜகவுக்கான முக்கியத்துவம் அங்கு குறைந்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.

 அகிலேஷ்

அகிலேஷ்

அதேபோல, மகாராஷ்டிராவை எடுத்துக் கொண்டாலும்சரி, உத்தவ் தாக்கரேவுடன் இவ்வளவு நடந்தும், சிவசேனா + பாஜக கைகோர்க்குமா? என்பது பெருத்த சந்தேகமாகவே உள்ளது.. உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை, கிட்டத்தட்ட பீகார் போலவே பாணியை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. காரணம், நிதிஷ்குமார் + அகிலேஷ் யாதவ் போட்டோக்களை இணைத்து வைத்து போஸ்டர்கள் அங்கு பரபரத்து வருகின்றன.. ஆக, பாஜக இத்தனை காலமும் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த இந்த 3 பிரதான மாநிலங்களிலும் ஆட்டம் காண துவங்கி விட்டது..

டேமேஜ்

டேமேஜ்

அதனால்தான், தன்னுடைய கவனத்தை இந்த முறை தென்மாநிலங்கள் பக்கம் திருப்பி வருவதாகவே தெரிகிறது.. கர்நாடகம் தவிர, எந்த மாநிலத்திலும் பாஜக நுழைவது எளிதான காரியம் இல்லை.. இது தெரிந்தும்கூட, திராவிட கட்சிகளுக்கு எதிரான வியூகங்களை பாஜக விடாமல் அமைத்து வருகிறது.. மற்றொருபக்கம், சாதீய ரீதியான விவகாரத்தையும், குடும்ப அரசியலையும் பெரிதுபடுத்தி, அதையே அரசியலாக்க திராவிட கட்சிகளை டேமேஜ் செய்வதே முக்கிய அஜெண்டாவாக உள்ளதாக கூறப்படுகிறது.

 கண்ணை உறுத்தும்

கண்ணை உறுத்தும்

ஏற்கனவே வடக்கில் அர்விந்த் கெஜ்ரிவால், காங்கிரஸை டம்மி செய்து கொண்டே, பாஜகவை திணறடித்து வருகிறார்.. மம்தாவும் அரசியல் கணக்குகளை கரெக்ட்டாக நகர்த்தி வருகிறார்.. இப்படி கெஜ்ரிவால், மம்தா போலவே, தெற்கில் பாஜகவுக்கு கலக்கத்தை தந்து கொண்டிருப்பது ஸ்டாலினும், சந்திரசேகர் ராவும் என்பதால், தமிழகம், தெலுங்கானாவில் பாஜக கூடுதலாக கவனம் செலுத்த துவங்கி உள்ளதாம். எனினும், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வகுத்து செல்வதில் கடந்த 6 மாத காலமாகவே முனைப்பு காட்டி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

 பக்கா பிளான்

பக்கா பிளான்

அதனால்தான், அவரது சமீப காலமாகவே தேசிய அளவில் செயல்பாடுகளும் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன.. அதற்கேற்றவாறு, பாஜக அல்லாத மாநில முதல்வர்களிடம், ஸ்டாலினுக்கும் பெருத்த ஆதரவுகள் கிடைத்து வருகின்றன.. "பிரதமர் வேட்பாளர்" பிரச்சனையை இப்போதைக்கு பேசாமல், ஒதுக்கி தூரவைத்துவிட்டு, அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை விடுத்து வருவதால், ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சி பலன் தர துவங்கி உள்ளதாம்..

 அலை அலை

அலை அலை

எப்போதுமே ஒவ்வொரு தேர்தலின்போதும், 3வது அணி குறித்த பேச்சு அடிபடும்.. ஆனால், தேர்தல் நெருக்கத்தில் அது கலைந்து காணாமல் போய்விடும்.. இந்தமுறை 3வது அணிக்கான அலை எங்கும் வீசவில்லை, காங்கிரஸுடன் இருந்துகொண்டு பாஜகவை எதிர்ப்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று ஸ்டாலின் நினைப்பதாக தெரிகிறது.. அதாவது, காங்கிரஸ் அணியில் ஒவ்வொரு மாநிலக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்தால்தான் அசுரபலம்கொண்ட பாஜகவை வீழ்த்த முடியும் என்று இறங்கி உள்ளதால், இதுவும் பாஜகவுக்கு உறுத்தலை தந்து வருகிறது..

உறுத்தல்

உறுத்தல்

எப்படியாவது, இந்த முறை தேர்தலிலாவது, காங்கிரஸை திமுக கழட்டிவிடுமா என்று பாஜக எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், அதற்கும் இடம் கொடுக்காமல், ராகுலின் யாத்திரைக்கு நேரடியாகவே சென்று ஆதரவு தந்து, தன் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளார் ஸ்டாலின்.. இதுவும் பாஜகவுக்கு கடுப்பை தந்துள்ளது.. அதனாலேயே தமிழகத்தை குறி வைத்து பாஜக வலையை வீசியுள்ளது.. யானை பலம் பொருந்திய வடக்கில், அதுவும் பிரதான 3 மாநிலங்களில் தன்னுடைய செல்வாக்கை பாஜக சரிய விட்டு வரும் நிலையில், ஸ்டாலினும் வடக்கில் வலையை வீசியுள்ளார்.. இதில் யாருக்கு லாபம் கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று சு.சாமி சொல்வதும் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

உறுத்தல்

உறுத்தல்

எப்படியாவது, இந்த முறை தேர்தலிலாவது, காங்கிரஸை திமுக கழட்டிவிடுமா என்று பாஜக எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், அதற்கும் இடம் கொடுக்காமல், ராகுலின் யாத்திரைக்கு நேரடியாகவே சென்று ஆதரவு தந்து, தன் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளார் ஸ்டாலின்.. இதுவும் பாஜகவுக்கு கடுப்பை தந்துள்ளது.. அதனாலேயே தமிழகத்தை குறி வைத்து பாஜக வலையை வீசியுள்ளது.. ஒருவேளை காங்கிரசுடன் இணக்கம் ஏற்படாவிட்டாலோ, அல்லது கூட்டணியில் இடம்பெற முடியாதி சூழல் ஏற்பட்டாலோ, ஆம் ஆத்மியுடன் இணையவும் திமுக தயாராக உள்ளது..

யானை பலம்

யானை பலம்


அந்தவகையில் அரவிந்த் கெஜ்ரிவாலுடனும் நெருக்கமாகவும், நல்ல பிணைப்புடனும் உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. இதுவும் பாஜகவுக்கு கடுப்புதான்.. யானை பலம் பொருந்திய வடக்கில், அதுவும் பிரதான 3 மாநிலங்களில் தன்னுடைய செல்வாக்கை பாஜக சரிய விட்டு வரும் நிலையில், ஸ்டாலினும் வடக்கில் வலையை வீசியுள்ளார்.. இதில் யாருக்கு லாபம் கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று சு.சாமி சொல்வதும் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+