"பிரதமர் ஸ்டாலின்?".. வலையை வடக்கே வீசி "முதல் விதை".. ஆதாயம் தருமா சமூக நீதி கூட்டமைப்பின் கூட்டம்?
சென்னை: டெல்லியில் திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.. இன்று மாலை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடக்கும் இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. மேலும், பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை அமைப்பதிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த சில வருடங்களாகவே, பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா பானர்ஜி களமிறங்கினார்.. ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவும் இதற்கான முயற்சியை கையில் எடுத்து தோற்றுவிட்ட நிலையில், மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கியுள்ளனர்..

பாஜக எதிர்ப்பு
எனினும் இதில் இதுவரை பெரிய பலன் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.. ஆனால், இவர்கள் அனைவரையும்விட, "பாஜக எதிர்ப்பு" விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது..

தயவுதாட்சண்யம்
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணி மட்டும்தான், இப்போதைக்கு உறுதியாகவும், வலுவாகவும் உள்ளதாக தெரிகிறது.. கடந்த முறை கைகோர்த்த கூட்டணியே, இந்த முறையும் தொடரும் என்றே நம்பப்பட்டு வருகிறது.. மற்றொருபுறம் தேசிய அரசியலும் முதல்வர் ஸ்டாலினின் கவனம் குவிந்து வருகிறது.. குறிப்பாக, பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியை அமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.. பலம்பொருந்திய பாஜகவை எதிர்க்க வேண்டுமானால் திமுக போன்ற கட்சியின் தயவு தேவை என்பதை காங்கிரஸ் கட்சியும் நன்கு உணர்ந்துள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி நெருங்கியே காணப்படுகிறது..

யாத்திரை
இரு கட்சிகளுக்குள்ளும் நல்ல புரிதலும் நிலவி வருகிறது.. அதனால்தான், ராகுல்காந்தி பாதயாத்திரை நேரில் வாழ்த்து என்பன போன்ற நடவடிக்கைகளில் ஸ்டாலின் நேடியாகவே ஸ்பாட்டுக்கு சென்று வாழ்த்து சொல்லிவிட்டு போனார்... ஆக, ஒருபக்கம் தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான களத்தை அமைத்துக் கொண்டே மறுபுறம், தமிழகத்தில் வலுவான கூட்டணியையும் ஸ்டாலின் கட்டமைக்க துவங்கி உள்ளார்.. தேசிய அளவிலான பாஜகவுக்கு எதிரான கூட்டணியில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்கனவே பலமுறை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்..

ஞாபகம் வருதே
அதேபோல 2 மாதங்களுக்கு முன்பு பிடிஐ-க்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "வருங்காலத்தில், நீங்கள் ஒரு தேசிய தலைவராக வருவதற்கான வாய்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின், "கலைஞர் ஒருமுறை சொன்னதையே, நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், "என் உயரத்தை நான் அறிவேன்".. அதுபோல, என்னுடைய பலம் என்ன? வரம்புகள் என்ன? என்று இரண்டுமே எனக்கு என்ன என்று தெரியும்.. தேசிய அளவில் சமூக நீதிக்கான முயற்சியை திமுக ஏற்கனவே எடுத்திருக்கிறது.. அதற்கான முயற்சிகளுக்கு பங்களித்தும் வருகிறது என்று கூறியிருந்தார்..

தூண்டில் வலை
சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் விழா கூட்டத்தின்போதும், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, யார் பிரதமராக வேண்டும் என்பது முக்கியமல்ல; யார்...வரக்கூடாது என்பது தான் முக்கியம். எதிர்கட்சிகள் விட்டுக்கொடுத்து, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.. கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைத்தான் இழந்தோம்... ஆனால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அந்த ஒரு இடத்தையும் இழக்கக்கூடாது. 40க்கு 40 கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாடும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி மட்டுமல்ல இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கு பக்கபலமாக அமையும்" என்று பேசியிருந்ததும் பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.

நகரும் அரசியல்
'ஆமா, ஸ்டாலின் ஏன் பிரதமராகக் கூடாது.. அவர் பிரதமராவதில் என்ன தவறு? என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அப்போது கேட்டிருந்தார்... இந்நிலையில், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது முயற்சியானது, அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.. சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதையில் நம்பிக்கை கொண்ட அனைவரும், சமூக நீதிக்கருத்தியலில் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என்று பாஜக அல்லாத தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்..

சுழலும் அச்சாணி
அந்தவகையில், சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, இன்று மாலை 4:30 மணிக்கு துவங்கி, 7:00 மணி வரை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கும் இந்த மாநாட்டில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி உட்பட, 18 தலைவர்கள் பங்கேற்கின்றனர்.. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்குமா? ஸ்டாலினுக்கு தேசிய அரசியலில் ஆதாயம் அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலுமே நிலவி வருகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்?












Click it and Unblock the Notifications