மாறுது ப்ளான்கள்.. பிரதமர் மோடி கிட்ட பேச "ரெடியா" இருந்த தலைகள்.. அப்ப "பச்சைக்கொடி" காட்டலயா.. ஏன்
சென்னை: பிரதமர் மோடி சென்னை வர உள்ளதால், பாஜக ஒருபக்கம், அதிமுக மறுபக்கம், இதற்கு நடுவில் திமுக, என 3 கட்சிகளும் நிறைய பிளான்களுடன் உள்ளதாக தெரிகிறது.. எனினும் அவையெல்லாம் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது என்று தெரியவில்லை.
பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியானது... சென்னை விமானநிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா, சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பதாக தெரிகிறது.
மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அதே நிகழ்ச்சியில் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைப்பதாகவும் கூறப்படுகிறது.

மைதானம்
இதற்காக ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் சென்னை வருவதையொட்டி விமான நிலையம், விழா மைதானம் என பிரதமர் செல்லும் வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.. பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் வெளியானதுமே, தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாகிவிட்டன.. குறிப்பாக, பாஜக - திமுக - அதிமுக என 3 தரப்புகளுமே மும்முரமாகிவிட்டன.. ஏப்ரல் 8-ந்தேதி இரு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி அன்றைய தினம் இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குவார் என்பதால், கவர்னர் ரவி மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேச முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

பனிப்போர்
அதேபோல, அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி பிரதமரை விமான நிலையத்தில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.. நேற்று முன்தினம், "கூட்டணி தொடரும்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்திவிட, எடப்பாடி பழனிசாமியும் அதையே வழிமொழிந்துள்ள நிலையில், இரு கட்சிகளிடையே நிலவிவந்த அதிருப்திகள் ஓரளவு சுமூகத்துக்கு வந்துள்ளன.. எனவே, சென்னை வரும் பிரதமரை, அதிமுகவின் "பொதுச்செயலாளராக" பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வரவேற்கவும், பேசவும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது..

அப்பாயிண்மெண்ட்
ஒருவேளை, எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திப்பதாக இருந்தால், கண்டிப்பாக, ஓபிஎஸ் தரப்பும் பிரதமரை சந்திக்க முயலும் என்கிறார்கள்.. ஆனால், சென்னை வரும் பிரதமர், ஏர்போர்ட்டில் இவர்கள் இருவரையுமே சந்திப்பாரா? அல்லது இருவரையுமே சந்திக்காமல் தவிர்த்துவிடுவாரா? என்று தெரியவில்லை.. எனினும், இது சம்பந்தமான அப்பாயிண்மென்ட் வாங்குவதில் இரு தரப்புமே முயன்று கொண்டிருக்கிறார்களாம்.. இதனிடையே, ராகுல் காந்தி விவகாரத்தில் அளவுக்கு அதிகமாக கொந்தளித்து போயுள்ள எதிர்க்கட்சிகள், பிரதமர் வருகையின்போது தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சமாளிப்பு
குறிப்பாக, காங்கிரஸ், விசிக, வேல்முருகன், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, இப்படி பலரும் திரண்டு, பிரதமர் வருகையின்போது எதிர்ப்புகளை தெரிவிக்கக்கூடும் என்றும், அப்படி எதிர்ப்புக்குரல்களை எழுப்பினால், இந்த கூட்டணி கட்சிகளை எல்லாம், ஆளும்கட்சியான திமுக எப்படி சமாளிக்குமோ என்றும் எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டிருக்கின்றன. இப்படி, பாஜக + அதிமுக + திமுக தரப்பில் மும்முரங்கள் வலம்வரும்நேரத்தில், புது தகவல் ஒன்று பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளது... அதாவது, வருகிற 8-ந்தேதி பிரதமர் சென்னை வருவது சந்தேகம்தானாம்..

கன்ஃபார்ம்டு
இந்த வந்தே பாரத் ரயிலை பச்சைக் கொடி காட்டி தொடக்கி வைப்பதுடன் அந்த ரயிலிலேயே கோவை வரை பயணிக்கவும் முடிவு செய்திருந்தாராம் பிரதமர் மோடி.. ரயில்வே அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் நிலையில், பிரதமரிடமிருந்து 8-ந்தேதியை உறுதிப்படுத்தவில்லையாம்.. காரணம், சென்னைக்கு வரும் போது, சென்னை விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிட முனையத்தையும் மோடி திறந்து வைப்பதாக திட்டமிடப்படுகிறது. ஆனால், கடந்த மாதம் 20-ந்தேதியே முடிய வேண்டிய பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. அதனால், மார்ச் 31-க்குள் முடிக்கப்பட்டு விடும் என சொல்லப்பட்டது. அதனையொட்டி இரண்டு நிகழ்வுகளையும் ஒரே சமயத்தில் வைத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கான விழாவை 8-ந்தேதி வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

முளைத்த டவுட்
ஆனால், விமான நிலையத்தின் புதிய கட்டிட முனையம் 31-ந்தேதி வரை முழுமையாக முடிக்கப்படவில்லையாம். அதனால், 8-ந்தேதி சென்னைக்கு வருவதில் சிக்கல் இருக்கிறது. வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு பயணிக்க தயாராக உள்ளது. ஆனால், சென்னை விமான நிலைய வேலைகள் முழுமையடையவில்லை. இந்த கட்டிட முனையத்தின் வேலை முழுமையாக முடிந்தால் தான் சென்னைக்கு மோடி வருவார். இல்லையெனில், 8-ந்தேதி வருவது தள்ளிப்போகலாம் என்கிறார்கள் தமிழக பாஜகவினர். ஆனால், தற்போது வரை 8-ந்தேதி வருவார் என்கிற முடிவிலேயே பிரதமர் மோடியை வரவேற்கும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார்களாம் பாஜகவினர்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications