காரணமே வேற.. மோடி இப்படி செய்தாரா? "டாக்டரை" நழுவவிடும் பாஜக? கரெக்ட்டா வந்துநின்ற எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நகர்வு, ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது.. புதிய தமிழகம் கட்சியின் 25 வருட ஆண்டு விழா மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றதும் பெரிதும் கவனிக்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம்: செல்வாக்குமிக்க ஓட்டப்பிடாரம் தொகுதியில், தேவேந்திர குல வேளாளர் சமூகவாக்குகளும் மிக அதிகம்... ஆனாலும், ஓட்டப்பிடாரத்தில் போதுமான வெற்றியை சுவைக்க முடியாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியை குறிவைக்கவே, இப்படி ஒரு மாநாட்டை டாக்டர் கிருஷ்ணசாமி முன்னெடுப்பதாகவும், தென்காசியில் தன்னுடைய மகனை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் அப்போது சலசலக்கப்பட்டது.
ஒருபக்கம் திமுக அரசை கடுமையாக எதிர்த்து வந்தாலும், மற்றொருபக்கம் அதிமுக, பாஜக கூட்டணியுடன் நெருங்கியே இருந்தார் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி.. திமுகவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் ஏதாவது கருத்து சொன்னால், உடனே பாஜகவுக்கு ஆதரவாக கிருஷ்ணசாமியும் கருத்துக்களை சொல்வது வழக்கம். அதனால்தான், எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து, தென்காசி தொகுதியில் போட்டியிடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
கூட்டணி முறிவு: அதுமட்டுமல்ல, ஆனால், திடீரென அதிமுக, பாஜக கூட்டணி முறிவு அறிவிக்கப்பட்டது.. எனவே, ஐஜேகே பாரிவேந்தர், ஜிகே வாசன், ஜான்பாண்டியன், போன்றோருடன் டாக்டர் கிருஷ்ணசாமியும் பாஜக தரப்பை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதுமட்டுமல்ல, அதிமுகவும், பாஜகவும் மறுபடியும் கூட்டணி சேரும் என்று நீண்ட நாட்களாகவே சொல்லி வந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால், இப்போது மொத்த கணக்கும் நொறுங்கிவிட்டது.
கிருஷ்ணசாமி: புதிய தமிழகம் கட்சியின் மாநில செயற்குழுவை கடந்த 8-ந்தேதி கோவையில் நடத்தினார் டாக்டர் கிருஷ்ணசாமி. கூட்டணி தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் டாக்டருக்கு வழங்கியது செயற்குழு. பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு எதிரான தாக்குதல்களை செயற்குழுவில் வெளிப்படுத்தியிருக்கிறார் கிருஷ்ணசாமி.
குறிப்பாக, தமிழகம் உள்பட பாஜக ஆளாத மாநிலங்களு க்கு நிதிகள் ஒதுக்குவதில் அக்கறைக்காட்டாதது, வெள்ள நிவாரணம் கேட்டு பலமுறை தமிழக அரசு வைத்த கோரிக்கையை கண்டுக்கொள்ளாதது என பிரதமர் மோடியை விமர்சித்தாராம் கிருஷ்ணசாமி.
கோரிக்கை கடிதம்: "பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்க வேண்டும் என்கிற நம்முடைய நீண்ட கால கோரிக்கையை மோடியை நான் ஒருமுறை சந்தித்தபோது முன்வைத்தேன். மத்திய அரசுக்கு முறையாக கடிதமும் அனுப்பியிருக்கிறேன்.
ஆனால், இது குறித்து கொஞ்சம் கூட அக்கறைக் காட்டப்படவில்லை. நம் சமூகத்தை மோடி ஒரு பொருட்டாக பார்க்கவில்லை. நம்மை ஏமாற்றுகிறார். பாஜகவுடன் எந்த கான்செப்ட்டில் கூட்டணி சேர்வது?" என்றெல்லாம் பேசினாராம் டாக்டர் கிருஷ்ணசாமி. இதனால், பாஜகவுடன் கூட்டணி இருக்காது என்கிற மனநிலைக்கு வந்துள்ளனர் புதிய தமிழகம் கட்சியினர்.
முக்கியஸ்தர்கள்: இது குறித்து அக்கட்சியினர் சிலரிடம் பேசியபோது, "பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்குத்தான் விருப்பமாக இருந்தார் டாக்டர். அதற்காக பாஜகவில் முக்கியஸ்தர்கள் சிலருடன் நட்பாக இருந்து வந்தார். அதனால், தமிழ்நாட்டிற்கு அண்மையில் மோடி வந்தபோது அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்க கிருஷ்ணசாமி விரும்பி தனது பாஜக முக்கியஸ்தர்கள் மூலம் காய்களை நகர்த்தினார். ஆனால், தனி சந்திப்புக்கு வாய்ப்பே இல்லை என மோடி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
வரிசையில் நின்று வரவேற்கலாம் என சொன்னபோது அதையும் டாக்டர் ஏற்கவில்லை. அதனால், அதிருப்தி அடைந்தார் டாக்டர். மேலும் கடைசி முயற்சியாக டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தார். அதுக்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால்தான் பாஜக மீதும் மோடி மீதும் கோபமாக இருக்கிறார். அந்த கோபம் தான் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என முடிவு எடுக்கிறார்" என்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி: இந்த நிலையில், இந்த அதிருப்தியை கேட்டு அதிர்ந்த எடப்பாடி பழனிசாமி, "மணி"யான அந்த கொங்கு சீனியரை அழைத்து சில இன்ஸ்ட்ரக்ஷனை கொடுத்துள்ளார்.. அந்த மாஜியும், உடனே கிருஷ்ணசாமியிடம் போன் போட்டு பேசியுள்ளார்.
அப்போது, "திமுகவில் திருமாவளவனுக்கு எத்தனை சீட் கொடுக்கப்படுகிறதோ அத்தனை சீட் உங்களுக்கு நாங்கள் தருகிறோம், வாருங்கள் பேசுவோம்" என்று அழைத்திருக்கிறாராம்.
இனி டாக்டர் கிருஷ்ணசாமி என்ன முடிவெடுக்க போகிறார்? என்று தெரியவில்லை. ஆனால், தென் மாவட்டங்களில் காலூன்ற முடிவு கட்டியிருக்கும் தமிழக பாஜக, டாக்டரை நழுவ விடுகிறதோ?? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications