பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிட்டால் உயிரே போகுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மா்மமான முறையில் உயிரிழந்தனர். பிரியாணி சாப்பிட்டுவிட்டு சிறிது நேரத்தில் தர்பூசணி சாப்பிட்டுள்ளதால் புட் பாய்சன் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
மும்பையை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு பொதுமக்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி சாப்பிட்டால் மரணம் வரை ஏற்படுமா? தர்பூசணியை எப்போது எல்லாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறிய தகவல்களை பார்க்கலாம்.

பிரியாணிக்கு பிறகு தர்பூசணி சாப்பிடலாமா?
மருத்துவர் ஐஸ்வர் கிலாடா இது குறித்து கூறியதாவது:- பிரியாணியையும் தர்ப்பூசணியையும் அடுத்தடுத்து சாப்பிடுவதாலோ அல்லது சிறிது இடைவெளி விட்டு சாப்பிடுவதாலோ உயிரிழப்பு வரை ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த இரண்டும் இருவேறு உணவுகள், இரண்டுமே செரிமானம் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வேறு வேறு ஆகும். எனினும், இந்த உணவுகளை ஒன்றாக சாப்பிட்டதால் மரணம் ஏற்படுவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். மும்பை சம்பவத்தை பொறுத்தவரை புட் பாய்சன் ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
உணவு அல்லது தர்பூசணி நீண்ட நேரம் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது கெட்டுப்போனாலோ, அவற்றில் அபாயகரமான பாக்டீரியாக்கள் உருவாகியிருக்கலாம். ஸ்டேஃபிளோகாக்கஸ், சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலி போன்ற பாக்டீரியாக்கள் உணவு வழியாக உடலுக்குள் நுழைந்து வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில், இந்த நிலை செப்சிஸ் எனப்படும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கூட வழிவகுக்கும்
ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் உடனடி மரணம் வருமா?
புட் பாய்சன் ஏற்பட்ட பிறகு அறிகுறிகள் வெளிப்படவும், அது தீவிரம் ஆகவும் வழக்காக கொஞ்சம் டைம் எடுக்கும். ஒருவர் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருப்பவராக இருந்தால், தொற்றை எதிர்த்து உடல் போராட முயற்சிக்கும். எனினும், தொடர்ச்சியாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீர்சத்து குறைந்து எலக்ட்ரோலைட்ஸ் குறையும். இதனால் ரத்த அழுத்தம் வேகமாக குறைந்து அதிர்ச்சி நிலை ஏற்படும்.
இந்த சூழ்நிலை சில நேரங்களில் ஆபத்தானது. அசைவ உணவு செரிமானம் ஆவதற்கும் நீர்சத்து நிறைந்த பழங்கள் செரிமானம் ஆவதற்கும் எடுத்துக்கொள்ளும் நேரம் வெவ்வேறானவை. தர்ப்பூசணி உடனடியாக செரிமானம் ஆகிவிடும். ஆனால் இறைச்சி உணவுகள் செரிமானம் ஆவதற்கு நேரம் பிடிக்கும். இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால், உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக அமையாது" என்று கூறினர்.
மும்பையில் என்ன நடந்தது?
தெற்கு மும்பை பைதோனி பகுதியில் வசித்து வந்தவர் அப்துல்லா (வயது40). இவரது மனைவி நஸ் ரீன் (35). இவர்களுக்கு ஆயிஷத (16), ஷைனப் (13) என்ற மகள்கள் இருந்தனர். கடந்த சனிக்கிழமை அப்துல்லா வீட்டுக்கு உறவினர்கள் வந்து இருந்தனர். எனவே இரவு 10.30 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினர் உறவினர்களுடன் அசைவ விருந்து சாப்பிட்டனர். உறவினர்கள் சென்றபிறகு அப்துல்லா குடும்பத்தினர் நள்ளிரவு 1 மணி அளவில் தர்பூசணி பழம் சாப்பிட்டனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் அனைவருக்கும் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. தொடர்ந்து உடல் நிலை மோசமானதால், ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 4 பேரும் பலியாகினர்.
தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். சம்பவம் குறித்து ஜே.ஜே. மார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications