"டேஞ்சர் மணி".. எடப்பாடி பழனிசாமிக்கு "சிக்னல்" தந்த பாஜக மேலிடம்.. அடுத்து என்னாகும்.. இதான் வழியா?
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு புது நெருக்கடி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது
சென்னை: இன்றைய சட்டமன்றம் கூட்டத்தில், அடுத்த சறுக்கல் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நெருக்கடி ஒன்றை விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஆனால், அதையும் முறியடித்துக்காட்ட, பக்காவாக ஒரு பிளானை எடப்பாடி கையில் எடுத்துள்ளதாக இன்னொரு தகவல் பரபரத்து வருகிறது.
திமுகவையும், ஓபிஎஸ்ஸையும் விடாமல் குற்றஞ்சாட்டி வரும்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு புதுநெருக்கடி ஒன்று நெருங்கி வருவதாக சொல்கிறார்கள்..
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை இன்னமும் ஓயவில்லை.. ஓபிஎஸ் + சசிகலா + தினகரனை இணைத்துக் கொள்ள சிறிதும் விருப்பமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவருகிறார்..

விஸ்வரூபங்கள்
ஆனால், ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்புவதால், அதற்கான அறிவுரைகளை எடப்பாடிக்கு சொன்னதாகவும், ஆனால், அப்போதுகூட எடப்பாடி அந்த பேச்சை காதில் வாங்கி கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.. இதைதவிர, கொடநாடு விவகாரம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டு வருகிறது. மேலும், நெடுஞ்சாலை துறை ஊழல்கள், சம்பந்தி தொடர்பான ஊழல்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன..

மாறும் கேம்
அதனால்தான், தன்னை காப்பாற்றும்படி, டெல்லி பாஜக தலைவர்களின் உதவியை நாடி எடப்பாடி பழனிசாமி சென்றதாகவும், ஓபிஎஸ் தரப்பில் விமர்சித்து வருகிறார்கள்... உதவி கேட்டும் பாஜக மறுத்துவிட்ட நிலையில், எடப்பாடிக்கு நெருக்கடிகளை தருவதற்கு மேலிடம் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், புதுக்கோட்டை பாண்டித்துரை தொடர்புடைய இடங்களில், கடந்த வாரம், 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இந்த சோதனையில் எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது..

பாண்டித்துரை
முதல்வராகவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி காலத்தில், நெடுஞ்சாலைகளில் ஒளிரும் போர்டுகள் தமிழகம் முழுவதும் அமைக்கும் பணிக்கான டெண்டர் பாண்டித்துரையின் நிறுவனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, போக்குவரத்து துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான டெண்டரும், இதே பாண்டித்துரைக்கே ஒதுக்கப்பட்டு, இதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் பார்த்த நிறுவனம் ஒன்று, பெரிய தொகையை மேலிடத்துக்கு தந்ததாகவும் தகவல் ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.

அபாய மணி
வருமான வரித்துறை சோதனையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வலம் வருவது, பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஆனால், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறைதான், பாண்டித்துரையிடம் ரெய்டு நடத்தியிருக்க வேண்டாம்.. ஆனால், அங்கேயும் சிலரை சரிக்கட்டி பாண்டித்துரை வைத்திருப்பதாகவும், அதனால்தான், அவரை கண்காணித்து வந்த வருமான வரித்துறை களத்தில் அதிரடியாக இறங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. அதிமுக இணைப்பை வேண்டி, தொடர்ந்து எடப்பாடியை நெருக்கிக் கொண்டிருக்கிறது பாஜக..

ரெய்டுகள்
ஆனால், இன்னமும் பிடிகொடுக்காமல் இழுத்தடிக்கப்படும் நிலையில், அவர் சம்பந்தப்பட்டவர்களுக்குதான் செக் வைத்து ஆட்டத்தை தொடங்கி உள்ளதாம் பாஜக.. பாண்டித்துரை மீதான ரெய்டு, எடப்பாடிக்கு தரப்பட்ட அபாயமணி என்கிறார்கள்.. தன்னுடய ஆதாயத்துக்காகவே பாஜக இதுபோன்ற அதிரடிகளை செய்வதாக எடுத்துக் கொண்டாலும்கூட, இதற்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமி சமாதானம் ஆவாரா? ஓபிஎஸ்ஸை சேர்த்து கொள்வாரா? தொண்டர்களின் மனநிலைமையை புரிந்து கொள்வாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

பாஜக செக்
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்பி உதயகுமாரை சபாநாயகர் அங்கீகரிக்காதபட்சத்தில், ஓபிஎஸ்ஸுக்கு சப்போர்ட் கிடைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இது சறுக்கலாக பார்க்கப்படுகிறது.. இதனிடையே, 2024 எம்பி தேர்தலில், 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், கட்சியின் பூத் கமிட்டிகள் தான், தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாராம்.. ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இருப்பதால், அவர்களை எல்லாம் மாற்றி விட்டு தன்னுடைய ஆதரவாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், அவர்களை உற்சாகப்படுத்த கவனிக்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட்டுள்ளதாக புது தகவல் ஒன்று வட்டமடிக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications