Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமலாலயம் வாசலில் விழுந்த "டபுள் ஷாக்".. யாரு செங்கோட்டையனா.. மறுபடியும் மொதல்ல இருந்தா.. பலே அரசியல்

சிறுபான்மையினர் நலன் குறித்து செங்கோட்டையன் தந்துள்ள பேட்டி பாஜகவை கவனிக்க வைத்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுபான்மையினர் நலன் குறித்து செங்கோட்டையன் தந்துள்ள பேட்டி பாஜகவை கவனிக்க வைத்து வருகிறது.. அத்துடன் கூட்டணி குறித்த கலக்கமும் பாஜகவை சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிமுக தரப்பில் அதிருப்திகள் வெடித்து வருவதாக தெரிகிறது.. வெறும் 40 ஆயிரம் ஓட்டுக்கள் மட்டுமே என்பதை ஏற்கவும் முடியவில்லையாம்.

வெறும் 24 சதவீதம் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பெற்றிருப்பது அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. அதனால்தான், தமிழக பாஜகவில் சில சீனியர்கள், மீண்டும் டெல்லி மேலிடத்துக்கு புகாரை கொண்டு சென்றிருக்கிறார்களாம்.

 கரு நாகராஜன்

கரு நாகராஜன்

"எடப்பாடி பழனிசாமி தரப்பை மட்டுமே நாம் நம்பி கொண்டிருந்தால், எம்பி தேர்தலில் நமக்கு பலன்தராது.. ஒருங்கிணைந்த அதிமுக தேவையாக இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும், பாஜகவை எடப்பாடி டீம் தவிர்த்துவிட்டது, எடப்பாடி டீமுக்குள்ளும் பாஜகவுக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கின்றன" என்றெல்லாம் புகார்களை தமிழக பாஜகவில் உள்ள சீனியர்கள் பாஜக மேலிடத்துக்கு கொண்டு சென்றுள்ளார்களாம். ஏற்கனவே, பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, கரு நாகராஜன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி அனைவருமே அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும்நிலையில், மாநில தலைமை இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாகவும் சீனியர்கள் பாஜக மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.

 அசால்ட் பாஜக

அசால்ட் பாஜக

இவ்வளவு புகார்கள் டெல்லிக்கு பறந்துள்ள நிலையில்தான், தற்போது, பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நேற்று இணைந்துள்ளார்.. அத்துடன், '420 மலை' என்றும் கடுமையாக விமர்சித்துவிட்டு போயுள்ளார்.. இதனால், பாஜக சீனியர்கள் மேலும் கடுமையான அதிர்ச்சியில் உள்ளார்களாம்.. வழக்கமாக மாற்று கட்சியில் உள்ளவர்களை, தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை பாஜக அசால்ட்டாக செய்துமுடித்துவிடும்.. ஆனால், சொந்த கூட்டணி கட்சி என்றும் பாராமல், பாஜகவுக்கே செக் வைத்து கிலியை கிளப்பி விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி..

 பழைய பன்னீர்

பழைய பன்னீர்

இதுஒருபக்கம் இருந்தாலும், எடப்பாடி டீம் தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வை துவக்கி உள்ளது.. இப்போது அதிமுகவினரிடம் பழைய உறுப்பினர் கார்டு மட்டுமே உள்ளதால், இடைக்கால பொதுச்செயலாளர் கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் கார்டு இன்னும் வழங்கவில்லை.. எனவே, புதிய உறுப்பினர் கார்டும் தயாராகி கொண்டிருக்கிறது. அந்த கார்டுகள், அனைத்து உறுப்பினர்களுக்கும் சென்றடையும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.. மேலும், 3 மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்து கட்சி தேர்தல் நடத்தவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன..

 தில் செங்கோட்டையன்

தில் செங்கோட்டையன்

"ஒருங்கிணைந்த அதிமுக" என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, பாஜகவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில்தான் மூத்த தலைவர் செங்கோட்டையனின் பேட்டி ஒன்று பாஜகவுக்கு மேலும் கலக்கத்தை தந்து வருகிறதாம்.. செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "இடைத்தேர்தலை பொறுத்தவரையில் அதிமுகவிற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது... ஏனென்றால் தேர்தல் களத்தில் இருக்கும்போது இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.. தேர்தல் நடைபெறும்போது உச்சநீதிமன்றம், கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றது.

 ஓட்டைகள் ஓட்டைகள்

ஓட்டைகள் ஓட்டைகள்

பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்த தீர்மானம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை மாபெரும் வெற்றியாக கருதுகிறோம். கூட்டணியை பொறுத்தவரையில் தேர்தல் சமயத்தில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. தேர்தல் களத்தில் ஒவ்வொருவர் மனநிலையை பொருத்து அமையும்... அதிமுகவை பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் இயக்கமாக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் தலைவராக இருந்து வருகிறார்" என்று கூறியிருக்கிறார் செங்கோட்டையன்.

 சாயும் கூடாரம்

சாயும் கூடாரம்

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜகவை தவிர்த்ததுடன், சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக பெற்றுவிட வேண்டும் என்றே தீவிரமாக களப்பணியாற்றியது எடப்பாடி டீம்.. மேலும், அதிமுகவின் நிலைப்பாட்டையும் பகிரங்கமாகவே தன்னுடைய பிரச்சாரத்தில் வெளிப்படுத்தியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. "எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள்.. கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நினைக்காதீங்க. அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டோம் என்றும் அர்த்தம் கிடையாது. யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது" என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

 டபுள் ஷாக்கிங்

டபுள் ஷாக்கிங்

இதற்கு பிறகு, நெல்லையில் ஒரு திருமண நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வரப்போகும் எம்பி தேர்தலிலும் பாஜக - திமுக கூட்டணி என்றும் இருகட்சிகளுக்கு இடையே எந்த நெருடலும் இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.. ஆனால், இப்போது செங்கோட்டையன் தேர்தல் சமயத்தில்தான் கூட்டணி முடிவு செய்வோம் என்று கூறியிருப்பதுடன், சிறுபான்மையினரை பாதுகாக்கும் இயக்கமாக அதிமுக உள்ளதாக கூறி டபுள் ஷாக்கை பாஜகவுக்கு தந்துள்ளார் செங்கோட்டையன்..!!

கண்ணா கண்ணன்

கண்ணா கண்ணன்

செங்கோட்டையனின் இந்த பேட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.. காரணம், நேற்றும் - இன்றும் தமிழக பாஜகவுக்குள் சலசலப்புகள் கூடிக்கொண்டிருக்கின்றன.. பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நேற்று இணைந்துள்ளார்.. இந்த அதிர்ச்சி முடிவதற்குள்ளேயே அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜக மாநில செயலாளர் திலீப் கண்ணனும் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.. இந்த விவகாரத்தல், நிர்மல்குமாரை அதிமுகவுக்குள் சேர்த்து கொண்டதற்கு, பாஜக எதிர்வினையாற்றி வருகிறது. அத்துடன் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

ஆபரேஷன் கமலம்

ஆபரேஷன் கமலம்

குறிப்பாக, "4 ஆண்டுகாலம் ஏமாற்று பேர்வழிகளாக வலம் வந்தவர்களின் கதைகள் எல்லாம் ஊரறிந்த கதை" என்று எடப்பாடி பழனிசாமி குறித்து அமர்பிரசாத் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார்.. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர்பிரசாத், எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்திருப்பதால் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது... இந்த முறை எப்படியும் 20 சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்றும் அதில் 10 தாமரைகளையாவது மலர வைத்துவிட வேண்டும் என்றும் பாஜக தரப்பு உறுதியாக இருந்து வரும்நிலையில், கடந்த 2 நாட்களாகவே பாஜகவில் கட்சி தாவல்கள் நடந்து வருகின்றன.. ஒருபக்கம், எடப்பாடி மீது அமர்பிரசாத் ரெட்டி வைத்துவரும் விமர்சனமும், மற்றொருபுறம் கூட்டணி குறித்து செங்கோட்டையனின் பேட்டியும், அனலை கிளப்பி விட்டுள்ளதாம்.. இதனால், அதிமுக - பாஜக கூட்டணி உறவில் விரிசல் அதிகமாகி உள்ளதோ? என்ற ஐயமும் எழுந்துள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+