"பச்சை சிக்னல்".. பெரிய திமிங்கலமே மாட்டுதே.. யாருப்பா அந்த 2 மாஜிக்கள்.. எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? ஆஹா
ஓபிஎஸ் டீமில் உள்ள 2 பேருக்கு எடப்பாடி பக்கம் வலை விரிக்கப்பட்டுள்ளதாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மவுசு கூடிக்கொண்டே வரும் நிலையில், ஓபிஎஸ் பக்கமுள்ள 2 சீனியர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாம்.. இதற்கு என்ன காரணம்?
எடப்பாடிக்கே கோர்ட் தீர்ப்பு சாதகமாகிவிட்ட நிலையில், ஒருவரும் ஓபிஎஸ் பக்கம் வரவில்லை.. பாஜகவும் கைவிட்டுவிட்டது.. டிடிவி, சசிகலா போன்றோரும் பகிரங்க ஆதரவை இதுவரை தரவில்லை..
இப்படிப்பட்ட சூழலில்தான், டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.. அப்போது சில விஷயங்களை மனம் விட்டும் பேசினாராம்..

டவுட் 1
"தேர்தல் வரப்போகிறது.. கட்சி ஒன்றாக வேண்டும்.. இப்படி இருப்பது கட்சிக்கு நல்லதல்ல.. வேண்டுமானால் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடியே தொடரட்டும்.. இணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கொள்கிறேன்.. கட்சி தான் முக்கியம்" என்றாராம்... இதைதவிர, சில தூது நடவடிக்கைகளும் ஓபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. ஆனால், ஓபிஎஸ் டீமில் உள்ள 2ம்கட்ட நிர்வாகிகளோ, இப்பவே கண்ணை கட்டுதே என்று முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.. நடப்பதெல்லாம் எடப்பாடிக்கு சாதகமாகவே சென்று கொண்டிருக்கும் நிலையில், நம் பக்கம் தொடர்ந்து பலவீனமாகி வரும் நிலையில், கட்சி மொத்தமாக எடப்பாடிக்கே சென்றுவிடுமா? என்ற கலங்கி கொண்டிருக்கிறார்களாம்..

டவுட் 2
அதிலும் ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட மா.செ.க்கள் மற்றும் புது நிர்வாகிகளின் புலம்பல்கள் அதிகரித்துவிட்டதாம். இதனிடையே, ஓபிஎஸ்ஸை தங்கள் கட்சியில் எடப்பாடி தரப்பு இணைத்து கொள்ளுமா? என்பதே மிகப்பெரிய சந்தேகமாக உள்ளதாம்.. கட்சிக்குள் இணைத்து கொண்டால், மறுபடியும் ஏதாவது பிரச்சனையை ஓபிஎஸ் கிளப்பினால் என்னாவது? அல்லது அதிமுகவில் இருந்து கொண்டு திமுகவுடன் நட்பு பாராட்டினால் என்ன செய்வது? அல்லது பாஜக மேலிடத்துக்கு சாதகமாகவே சாய்ந்து விட்டால் என்ன செய்வது? போன்ற சந்தேகங்கள் எடப்பாடி டீமை உலுக்கி வருகிறதாம்.

2 புள்ளி
அதேசமயம், ஓபிஎஸ் டீமில் உள்ள 2 சீனியர்கள் தங்கள் பக்கம் வந்தால் போதும் என்றும் கணக்கு போடுகிறதாம்.. அதில் ஒருவர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆவார்கள்.. இதில் வைத்திலிங்கத்துக்கு முக்கிய பதவி தந்தால் தங்கள் பக்கம் வரக்கூடும் என்றும் எடப்பாடி டீம் நம்புகிறதாம்.. ஜேசிடி பிரபாகர் தங்கள் பக்கம் வராத பட்சத்தில் மனோஜ் பாண்டியனுக்கு வலையை விரிக்கலாம் என்றும் ஒரு பேச்சு உள்ளதாம்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன..

வைத்திலிங்கம்
கொங்கு மற்றும் மத்திய வடமாவட்டங்களில் செல்வாக்கை பெற்றுள்ள எடப்பாடியால், தென்மண்டலத்தில் முழுமையான ஆதரவை பெற முடியவில்லை.. இத்தனைக்கும் உதயகுமார், செல்லூர் ராஜு போன்ற சீனியர்கள் இருந்தும், எடப்பாடி டீம் பக்கம் புதிதாக யாரையுமே தென்மண்டலத்தில் இருந்து நகர்த்தி கொண்டு வரமுடியவில்லை.. எனவே, வைத்திலிங்கம் போன்றோர் உடனிருக்கும் பட்சத்தில் தஞ்சை உள்ளிட்ட தெற்கை வளைக்கலாம் என்பதே எடப்பாடி தரப்பின் யோசனையாக உள்ளதாம்.. தொடர்ந்து தூது நடவடிக்கைகள் இரு தரப்பும் நடந்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், எந்த ஒரு உறுதியான விஷயமும் இதுவரை வெளியாகவில்லை.. பார்ப்போம்..!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications