Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி இழுழுக்குறாரே.. அசையுது அஸ்திவாரம்..திணறுது பாஜக.. பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி இருக்கிறதா? இல்லையா? இவர்கள் சண்டை போட்டுள்ளார்களா? சமாதானம் ஆகிவிட்டார்களா? என எதுவுமே புரியாமல் குழம்பி கிடக்கிறார்கள் இரு கட்சி தொண்டர்களும்..!!
பாஜகவுடன் கூட்டணி முறிவு என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதுமே, இதை அதிமுகவில் மற்ற தலைவர்கள் யாருமே மறுக்கவில்லை.. வழக்கமாக யாராவது தலைவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டால், "அது அவரது தனிப்பட்ட கருத்து" என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், ஜெயக்குமார் கூட்டணி முறிவு அறிவித்தபோதே, இது கட்சியின் முடிவு என்றுதான் கூறினார்..

அதற்கேற்றவாறு, மறுநாளே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து, அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.. அதில், மத்திய அரசு என்ற வார்த்தையையோ, பாஜகவின் பெயரையோ, பிரதமர் மோடியின் பெயரையோ எங்குமே குறிப்பிடவில்லை.

Can Edapadi Palaniswami form alliance without BJP and What are the TN BJP Annamalais next Plan

ஓபிஎஸ்: மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை, மறைமுகமாக இதன்மூலம் உணர்த்தியதாகவே கருதப்பட்டது.. ஆனால், நேற்று திடீரென அதிமுகவின் மூத்த தலைவர் செல்லூர் ராஜு 'பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. மோடி மீண்டும் பாரத பிரதமராக வருவார். தமிழகத்திலும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும்" என்றார்.

பிறகு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, "எனக்கு தன்மானம்தான், மிகவும் முக்கியம். நான் அரசியலில் தெளிவாகவே இருக்கிறேன். அதிமுக - பாஜக இடையே பிரச்சனை எதுவுமில்லை.. எனக்கு யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை.. எனக்கும் அதிமுக தலைவர்களுக்கும் தனிப்ப்பட்ட எந்த பிரச்சனையும் இல்லை. நாளை அதிமுக தலைவர்களை பார்க்கும்போது மரியாதையோடு பழகுவேன்" என்றார்.

அண்ணாமலை: ஆனால், 4 நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை சரமாரியாக அண்ணாமலை விமர்சித்துவிட்டு, நேற்றைய தினம், யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லியிருந்தது குழப்பத்தையே தந்திருந்தது. செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதிலே சொல்ல மாட்டேன் என்று ஒருமுறை கூறியிருந்தார்... இப்படி இரு தரப்பிலுமே மேலிட பாஜகவை ஏற்கிறார்கள் என்றாலும், இரு மாநில தலைமைகளும் ஏன் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்ற சந்தேகமும் வலுக்கிறது.

2 மாதங்களுக்கு முன்பு இதே போல ஒரு பிரச்சனை அதிமுக - பாஜகவில் எதிரொலித்தது.. எடப்பாடியின் கொடும்பாவியை எரிக்கும் அளவுக்கு பாஜகவினர் நடந்துகொண்டனர். இதற்கு பிறகு, டெல்லி தலைமை இரு தரப்பையுமே அழைத்து பேசி சமாதானம் செய்தது.. இனிமேல் இணக்கமாக இருப்போம் என்று இரு தரப்புமே, அமித்ஷாவிடம் உறுதிமொழி தந்ததாகவும் தெரிகிறது..

மாறி மாறி விமர்சனம்: ஆனால், அண்ணாமலை அங்கிருந்தாலும்கூட, எடப்பாடியிடமோ, மற்ற தலைவர்களிடமோ முகம் கொடுத்துகூட பேசவில்லையாம். அதற்கு பிறகும்கூட, இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்தவாறே இருந்தனர்.

கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது, கூட்டணி தொடர்பாக அமித்ஷாவிடம் பேசியதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் மாநில தலைவர் என்ற முறையில் தன்னை அழைக்கவில்லை, தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்ற அதிருப்தி அண்ணாமலைக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.. அதனாலேயே இந்த மோதல், இந்த ஒரு வார காலமாகவே அதிகரித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

கூட்டணி நீடிக்குமா: பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால், அதை முதலில் சொல்ல வேண்டிய அண்ணாமலையிடம் தெளிவாக சொல்லாமல் அமைதி காக்கிறது.. இதனால், தமிழக பாஜகவின் மற்ற தலைவர்களும், என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறுகிறார்களாம்.. அதனால்தான், அமித்ஷா, நட்டாவை சில தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். அவர்களிடம், "கூட்டணி தொடர்கிறது, அதற்கேற்ப பேசுங்கள்" என்று டெல்லியிலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

எனினும், இங்குள்ள அண்ணாமலை சொல்வது போல செயல்படுவதா? அல்லது பாஜக தலைவர்கள் சொல்வது போல செயல்படுவதா? என்ற குழப்பத்தில் உள்ளார்களாம். இதே குழப்பம் அதிமுகவிலும் உள்ளது.

பாஜக தலைவர்கள்: "அண்ணாமலையை மட்டும் விமர்சியுங்கள், பாஜகவையோ, பாஜக தலைவர்களையோ விமர்சிக்க வேண்டாம்" என்ற எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படிதான், ஜெயக்குமாரும், சிவி சண்முகமும் காட்டமான பேட்டிகளை தந்திருந்தனர்.. அமித்ஷாவை சந்திக்க சென்றுவிட்டு, இன்னொருபக்கம் அண்ணாமலையை விமர்சிக்க வைத்தது, அதிமுகவுக்குள் குழப்பத்தையே தந்துள்ளதாம்.

கடந்த வாரம், அமித்ஷாவை சந்தித்தபோதே, அண்ணாமலை குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கலாமே? அல்லது கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்த பிறகு, செல்லூர் ராஜூ ஏன் இப்போது மாற்றி பேசுகிறார்? அப்படியானால் பாஜகவுடன் உறவில் இருக்கிறோமோ? இல்லையா? என்ற குழப்பம் அதிமுகவுக்குள் கவ்விக் கொண்டுள்ளதாம்.

மவுனம் கலையுமா: இத்தனை நாள் வாய் திறக்காமல் இருந்த அண்ணாமலைகூட, இந்த விஷயம் குறித்து நேற்று பேசிவிட்டார்.. ஆனால், இதுவரை அமைதி காத்து வருவது எடப்பாடி பழனிசாமிதான்.. எல்லா குழப்பத்துக்கும் ஒரு முடிவு கிடைக்க வேண்டுமானால், எடப்பாடி வாய் திறக்க வேண்டும் என்கிறார்கள்..

இரு தரப்பிலுமே இணக்கமான போக்கு ஏற்படவேண்டுமானால், பலம்பொருந்திய திமுகவை சமாளிக்க வேண்டுமானால், தமிழக பாஜக தலைமையானது, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும்.. எனினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் மவுனம் கலைப்பாரா?? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+