Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிசாமி "வாய்" விட்டுட்டாரே.. திமுகவுடன் மெல்ல நெருங்கிய பாஜக? அஸ்திரம் எடுத்த அதிமுக.. அட

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி தேர்தல் நெருங்கிவிட்டது.. ஆனால், அதிமுகவில் இதுவரை கூட்டணி முடிவாகவில்லை.. இதனால், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுக பக்கம் கொண்டு வரும் முனைப்புடன், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டது.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு அதிமுகவுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

Can Edappadi palanisamy join with Asaduddin Owaisi and what are the AIADMKs Major Strategies

எடப்பாடி பழனிசாமி: அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை விலக்கினால் திமுக கூட்டணி உடையும், அந்த கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்றெல்லாம் கணக்கு போட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையிலும், திமுகவில் இருந்து யாருமே கூட்டணிக்கு வரவில்லை.

மாநாடுகள்: எனினும், இஸ்லாமிய ஓட்டுக்களை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினார் எடப்பாடி.. இதற்காகவே, கடந்த மாதம் கோவை கருமத்தம்பட்டியில் கிறிஸ்தவர்கள் உரிமை மீட்டெடுப்பு மாநாட்டிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதேபோல, அதேபோல, இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்தப்போகும் பிரமாண்டமான மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இதுபோக, சிறுபான்மையினா் பிரச்சனைகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறுபான்மையினா் பங்களிப்பையும் கட்சியில் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் தந்திருந்தார் எடப்பாடி.

சிறுபான்மை ஓட்டுக்கள்: அதுமட்டுமல்ல, 6 வருடங்களுக்கு முன்பு இழந்துவிட்ட சிறுபான்மையினர் வாக்குகளை, மறுபடியும் பெற்றாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இவ்வளவு முயற்சிகளும் எடுத்த பிறகு, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ போன்றவை ஆதரவு தந்துள்ளதே தவிர, பெரிய அளவு ஆதரவு இதுவரை அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகள் அதிமுக பக்கம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, அத்தகைய அறிகுறிகள் உறுதியாக தென்படாததால் அப்-செட்டில் இருப்பதாக தெரிகிறது.

கடுகடு எடப்பாடி: இருந்தாலும், தன்னை சந்திக்கும் மாவட்ட செயலாளர்களிடம் "அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும், பொறுமையாக இருங்கள், என்னிடம் யார் யார் பேசிக்கிட்டு இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று கடுகடுக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. =இந்த நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கின்றன.

அதாவது, முஸ்லீம் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளார் எடப்பாடி. அதேசமயம், ஹைதராபாத் எம்பியும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான ஓவைசியை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வரலாமா? என கட்சியின் சீனியர்களிடம் கேட்டிருக்கிறார்.

எஸ்டிபிஐ கட்சி: சீனியர்களோ, "முஸ்லீம்களிடம் அவர் பரிச்சயமானவர்தான். அவரை பத்தி நல்லவிதமாகத்தான் முஸ்லீம் லீடர்களும் சொல்கிறார்கள். ஆனா, ஏற்கனவே எஸ்டிபிஐ கட்சியை கூட்டணிக்குள் சேர்க்க முடிவு செய்திருக்கோம். தமிழகத்திலுள்ள முக்கிய கட்சிகள் எதுவும் நம்மிடம் வராத சூழலில் இன்னொரு முஸ்லீம் கட்சியையும் நாம் சேர்த்துக்கொண்டால் அதிமுகவை ஒரு முஸ்லீம் கட்சின்னு மற்ற சமூகத்தினர் நினைக்க மாட்டார்களா?

அந்த விமர்சனம் பொதுவெளியில் வந்து விட்டால், மற்ற சமூகத்தினரின் ஆதரவு நமக்கு எப்படி கிடைக்கும்?" என்று சொல்லியிருக் கிறார்கள் மூத்த தலைவர்கள். இதனால், ஓவைசி பற்றிய யோசனையை தள்ளி வைத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

மறைமுக கூட்டணி: இதற்கிடையே, பாஜகவுடன் கூட்டணி இல்லைன்னு உறுதியாக நாம் சொல்லிவிட்ட பிறகும், கூட்டணி இருப்பதாக திமுக சொல்லிக்கொண்டே இருப்பதை உடைக்க, பாஜகவுடன் திமுக நெருங்குகிறது.. மறைமுகமாக கூட்டணி உறவை வைத்திருக்கிறார்கள்..

மாநிலத்தின் நிதி நிலைமையை சொல்லியும் நிதி தராத மோடியை உருகி உருகி எதற்கு தமிழகத்துக்கு அழைக்க வேண்டும் என்றெல்லாம் பந்தை திமுக பக்கம் எட்டித்தள்ள வேண்டும். திமுகவுக்கும் பாஜகவுக்கும் கள்ள உறவு இருப்பதாக நாமும் அரசியல் செய்ய வேண்டும்.. அப்போது ஆட்டோமேட்டிக் காக சிறுபான்மையினர் திமுகவுக்கு எதிராக யோசிப்பார்கள்" என்று சீனியர்கள் பலரும் எடப்பாடியிடம் விவாதித்திருக்கிறார்கள்.

பாஜக: இது சரியான யோசனைதான், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதனை பயன்படுத்தலாம் என அவர்களிடம் சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஆக, பாஜகவை வைத்து, அதிமுக - திமுக இரு கட்சிகளுமே மாறி மாறி அரசியல் செய்ய ஜரூராகி வருகின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+