ஏஏ.. மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்தாரா எடப்பாடி பழனிசாமி?.. இப்படி ஒன்னு இருக்காமே.. அப்ப போச்சா
எடப்பாடி பழனிசாமி தரப்பு 2 விதமான சிக்கல்கள் எழக்கூடும் என்று சொல்கிறார்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு 2 விதமான நெருக்கடிகள் ஏற்படலாம் என்ற ஒரு பேச்சு அரசியல் களத்தில் கசிந்து வருகிறது.
பெரும்பாலான சட்டசிக்கல்களில் இருந்து விடுபட்டு, "தற்சமயம்" நிர்வாகிகளின் செல்வாக்கை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சி விவகாரங்களில் முழு கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.
அந்தவகையில், அவரது மதுரை சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு காரணம், தென்மண்டலத்தில் தனக்கான ஆதரவை நிரூபிக்க எடப்பாடி மேற்கொள்ளும் அடுத்த யுக்தி என்றாலும், தேவர் சமுதாய மக்களை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எகிறும் சான்ஸ்
அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் தேவர் ஜெயந்தியை மையமாக வைத்து ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதும் இதற்காகத்தான் என்கிறார்கள்.. மேலும், இடைக்கால பொதுச் செயலாளராக ஆன பிறகு, முதல் முறையாக தென் மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருப்பதும், எடப்பாடி பழனிசாமி மீதான எதிர்பார்ப்பை கட்சிக்குள் எகிற செய்திருக்கிறது.

250000+
அதேசயம், மதுரையில் இருந்து மட்டும் 25 ஆயிரம் பேரை திரட்ட எடப்பாடி டீம் மும்முரமாகி வருகிறதாம்.. இதற்காக நிறைய "வைட்டமின்கள்" இறக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.. ஏற்பாடுகளும் பலமாகி வருகிறது.. இவர்களை கூட்டத்துக்கு அழைத்து வருவதற்காகவே, தனியார் பஸ் வசதிகளும் மதுரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. அந்த பஸ்களில் பச்சைக்கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதுடன், "கழக பொதுச்செயலாளரே வருக" என்று எடப்பாடி போட்டோவுடன் வாசகங்கள் இடம்பற்றுள்ளதாம்.

பஸ் கேப்ஷன்
இன்னும் பொதுக்குழுவே கூட்டப்படாத நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்படாத நிலையில், தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கும் ஒருவரை எப்படி கழக பொதுச்செயலாளர் என்று குறிப்பிடலாம் என மாற்று தரப்பில் கேள்வியை எழுப்புகிறார்கள்.. இந்த பஸ் + வாசகத்தையும் ஆதாரமாக வைத்து கொண்டு, தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாமா என்று எதிர்தரப்பு யோசித்து வருகிறதாம்.

2 முடிச்சுகள்
ஆனால், இதே தேர்தல் ஆணையத்தில் இன்னொரு சிக்கலை எடப்பாடிக்கு எழலாம் என்கிறார்கள்.. அதாவது சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் டெல்லி சென்றபோது, பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட லிஸ்ட்டை தேர்தல் சமர்ப்பித்ததாம்.. ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையாம்.. காரணம், இதுவரை அதிமுக வரலாற்றில், பொதுக்குழு குறித்த விதிமுறைகள் எல்லாம் புத்தகமாக அச்சிடப்பட்டு, ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் உள்ளதாம்.. அத்துடன் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இணைக்கப்படுவதும் நடைமுறையில் இருந்து வந்துள்ளது... ஆனால், இந்த நடைமுறையை எடப்பாடி தரப்பு பின்பற்றவில்லையாம்..

பாயிண்ட் பாயிண்ட்
அதனால்லேயே அந்த லிஸ்ட்டை தேர்தல் ஆணையம் பெற்றுக் கொள்ளவில்லை என்கிறார்கள்.. ஏற்கனவே, சட்டவிதிகளை பின்பற்றவில்லை என்றுதான் தனிநீதிபதி ஜெயச்சந்திரன், பாயிண்ட் பாயிண்ட்டாக கேள்வி எழுப்பினார்.. அந்த கேள்விகளுக்கு இதுவரை எடப்பாடி தரப்பு பதில் தரவில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.. இப்போது, தேர்தல் ஆணையத்திலும் இதுபோல சிக்கல் எழலாம் என்கிறார்கள்.. அதையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம்போல் சமாளித்துவிடுவாரா? என்று தெரியவில்லை.. ஆனால், ஏதாவது ஒன்று கடைசி நேரத்தில் தங்களுக்கு ஆதரவாக நடந்துவிடாதா? என்று எதிர்பார்ப்புடன் டெல்லியையே உற்று நோக்கி கொண்டிருக்கிறதாம் ஓபிஎஸ் டீம்..!












Click it and Unblock the Notifications