மூலப்பத்திரம் தொலைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்! தமிழக அரசு அதிரடி மாற்றம்.. உடனே இதைப் படியுங்கள்
சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனரும் தேசியத் தலைவருமான டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.. அதில், அசல் ஆவணங்கள் சம்பந்தமான பதிவு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 34C குறித்து பொதுமக்களின் நலன் கருதி தெளிவான சுற்றறிக்கையை விரைந்து வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்..
டாக்டர் ஹென்றி எழுதியிருக்கும் அந்த கடிதத்தில், "தமிழக அரசு பதிவுத்துறையில் போலி ஆவணப் பதிவுகளைத் தடுப்பதற்காகவும், பொதுமக்களின் சொத்து உரிமையைப் பாதுகாப்பதற்காகவும் பல்வேறு சட்டத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.. இதன் ஒரு பகுதியாக, 2022 செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட பதிவு விதி 55-A-ன் கீழ், சொத்துப் பதிவின் போது அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால், அசல் ஆவணங்களைத் தவறவிட்ட பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விற்கவோ வாங்கவோ முடியாமல் பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.. இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள், அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பதிவுத்துறையில் உள்ள பொது ஆவணங்களின் (Public Document) அடிப்படையில் ஆய்வு செய்து பதிவுகளை மேற்கொள்ளலாம் எனத் தெளிவுபடுத்தின..
இந்தச் சூழலில், கடந்த 2025 ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதிவுச் சட்ட மசோதா (Registration Tamil Nadu Amendment Act, 2025 - 34C), இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று கடந்த ஜனவரி 23, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின்படி கிரையம், தானம், அடமானம் போன்ற பதிவுகளுக்கு அசல் ஆவணம் கட்டாயம் என்றாலும், சில முக்கிய இனங்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக வங்கி ஆவணங்கள், உயில், நீதிமன்ற ஆணைகள், பாகப்பிரிவினை (Partition Deed) மற்றும் பொது அதிகாரம் (Power of Attorney) போன்றவற்றுக்கு அசல் ஆவணம் தேவையில்லை என்றும், சான்றளிக்கப்பட்ட நகல்களே போதுமானது என்றும் சட்டம் கூறுகிறது..
மேலும், அசல் ஆவணம் தொலைந்துபோன சந்தர்ப்பங்களில், உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து, காவல் நிலையத்திலிருந்து பெறப்படும் (Non Traceable Certificate) சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் சார்-பதிவாளர்கள் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ளலாம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.. இருப்பினும், இந்தச் சட்ட விதிகள் குறித்து சார்-பதிவாளர்களிடம் போதிய புரிதல் இல்லாத நிலை நீடிக்கிறது.. அசல் ஆவணம் இல்லாமல் பதிவுகளை மேற்கொண்டால் பிற்காலத்தில் துறை ரீதியான நடவடிக்கைகள் பாயுமோ என்ற அச்சத்தில், அவர்கள் பதிவுகளைச் செய்ய மறுப்பதாக டாக்டர் ஆ.ஹென்றி சுட்டிக்காட்டியுள்ளார்..
இதனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட சொத்துக்களை விற்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.. இந்தச் சட்ட இடைவெளியைச் சாதகமாக்கிக் கொண்டு சமூக விரோதிகள் அசல் ஆவணங்களைத் திருடிவிட்டு, அதைத் திருப்பித் தரப் பெரும் தொகையைப் பேரம் பேசும் அவலம் நிலவுகிறது.. குடும்பங்களுக்குள் வலிமையான வாரிசுகள் அசல் ஆவணங்களைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டு, மற்ற வாரிசுகளை மிரட்டுவதும், சொத்தைத் தங்களுக்கு மலிவாக விற்க வற்புறுத்துவதும் அன்றாடப் புகாராகிவிட்டது.. இது குடும்ப உறவுகளில் பெரிய விரிசல்களையும் வழக்குகளையும் உருவாக்கி வருகிறது..
தவிர, தனியார் நிதி நிறுவனங்கள் அசல் ஆவணங்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டு கடன் வழங்குவதால், அரசுக்கு வர வேண்டிய பதிவு வருவாய் பாதிக்கப்படுகிறது.. இது மறைமுகமாகப் பினாமி சட்டத்தை ஊக்குவிப்பது போல அமைந்துள்ளதாக பெயிரா கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
எனவே, அசல் ஆவணம் இல்லாதவர்கள் அல்லது தவறவிட்டவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய மாற்று ஆவணங்கள் குறித்தும், சார்-பதிவாளர்கள் அச்சமின்றிப் பதிவுகளை மேற்கொள்ளும் வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்ட அம்சங்கள் குறித்தும் தெளிவான சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் எனப் பதிவுத்துறைத் தலைவருக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார்..
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications