தனிநபர் கடன் வாங்கி தங்க நகைகளை திருப்பலாமா? எந்த சூழ்நிலையில் என்ன முடிவு சரி?
சென்னை: தனிநபர் கடன் வாங்கி சிலர் தங்க நகைகள் வாங்குகிறார்கள். சிலர் தனிநபர் கடன் வாங்கி தங்க நகைக்கடைனை அடைக்கிறார்கள். இது இரண்டுமே சரியான முடிவா என்று பலருக்கும் யோசனை இருக்கும். ஆனால் இரண்டுமே சூழ்நிலைகளை பொறுத்தது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பெரும்பாலான சூழலில் அடகு வைத்த நகைகளை தனிநபர் கடன் வாங்கி திருப்புவதை விட மாதம் மாதம் கட்டித்திருப்புவதே நல்லது என்கிறார்கள்.
தனிநபர் கடனை பொறுத்தவரை, மிகவும் ரிஸ்க் அதிகம் உள்ள கடன் ஆகும்.வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். மாதம் மாதம் இஎம்ஐக்கு பணம் ஒதுக்க முடியும் என்கிற நிலை உள்ளவர்கள் மட்டுமே இந்த கடனை வாங்க முடியும். அதாவது மாத சம்பளம் வாங்குவோருக்கே தனிநபர் கடன் கிடைக்கும். ஆனால் மாத சம்பளம் வாங்கினாலும் சிபில் ஸ்கோர் சரியாக இருந்தால் தான், கடனை வங்கிகள் தைரியமாக கொடுக்க முன்வருவார்கள். உங்களால் திரும்ப செலுத்த முடியும். வழக்கமான வாழ்க்கையும் பாதிக்கப்படாது என்கிற பட்சத்தில் தான் தனிநபர் கடன் கிடைக்கும். வேலை நிரந்தரமாக இருக்கும் என்றால், தாரளமாக தனிநபர் கடன் வாங்கலாம்.

அதேநேரம் தனிநபர் கடனை வாங்கி சிலர் இடம் வாங்குவார்கள். சிலர் தங்கம் வாங்குவார்கள்.. சிலர் அடக நகையை திருப்புவார்கள். இந்த மூன்றுமே சரியா என்பது பற்றி பார்ப்போம். ஒருவர் தேனியில் புறநகர் பகுதியில் கொரோனாவிற்கு முன்பு இடம் வாங்கினார். அந்த இடம் வாங்க இரண்டு வருட தனிநபர் கடன் வாங்கினார். இடம் வாங்கிய போது, அதன் மதிப்பு ஒரு சென்ட் ஒன்றரை லட்சம் ஆக இருந்தது.
ஆனால் வெறும் 3 வருடத்தில் அது ஒரு சென்ட் 4 லட்சம் என்கிற அளவில் உயர்ந்துவிட்டது. அவர் 5.5 லட்சத்திற்கு வாங்கிய இடம் அடுத்த 4 வருடத்தில் 14லட்சத்திற்கு மேல் போய்விட்டது. அவர் தனிநபர் கடனுக்காக வட்டியாக இரண்டு வருடத்திற்கு மிக குறைவாக செலுத்தினார். கிட்டத்தட்ட அவருக்கு 7 லட்சம் வரை லாபம் கிடைத்தது. ஆனால் தனிநபர் கடன் வாங்கி வாங்கும் இடம் ஏறினால் பிரச்சனை இல்லை. ஒருவேளை நிலத்தின் மதிப்பு ஏறவில்லை என்றால் சிக்கல் தான்.
அடுத்ததாக தனிநபர் கடன் வாங்கி தங்க நகைகளை பலரும் வாங்குகிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்த 2024 ஜூலை மாதத்தில் தங்க நகையை 51 ஆயிரத்திற்கு ஒரு பவுன் வாங்கியிருந்தால் இன்று கிட்டத்தட்ட பவுனுக்கு 22 ஆயிரம் லாபம் கிடைத்திருக்கும். நண்பர் ஒருவர் ஐந்து பவுன் தங்கம், தனிநபர் கடன் வாங்கி, வாங்கினார். ஓராண்டு தனிநபர் கடனில் தான் வாங்கியிருந்தார். அவருக்கு ஒரு பவுனுக்கு 22 ஆயிரம் என்று ஐந்து பவுனுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் லாபம் கிடைத்தது. அவருக்கு பெரிய லாபம் கிடைத்தது. ஒருவேளை நகை விலை இந்த அளவிற்கு ஏராளமல் போயிருந்தால் லாபம் கிடைத்திருக்காது.
அடுத்ததாக நகையை திருப்ப தனிநபர் கடனை பயன்படுத்தலாமா.. இது நிச்சயம் தவறு என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதேநேரம் ஒருவர் 3 லட்சத்திற்கு நகையை அடகு வைத்துள்ளார். ஆண்டு இறுதியில் வட்டி மட்டுமே 3 வருடங்களாக கட்டி வந்துள்ளார். அவரால் திருப்பவே முடியவில்லை.. அவர் கையில் பணம் தங்குவதே இல்லை. 3லட்சத்திற்கு 3 வருடத்திற்கு 11 சதவீதத்தில் எடுத்திருந்தால் அவருக்கு 53 ஆயிரம் தான் வட்டி வந்திருக்கும்.
ஆனால் 3 வருடங்களாக அவர் வட்டி மட்டுமே கட்டி வந்ததால் 82000 அளவிற்கு வட்டி மட்டும் கட்டியிருக்கிறார். அவரால் தொடர்ந்து நகையை திருப்ப அவர் மாதம் மாதம் இஎம்ஐ பாணியில் தங்க நகைக்கடனை கட்டியிருந்தால் தனிநபர் கடனை விட வட்டி குறைவாகவே இருக்கும். அசலும் வட்டிவும் வேகமாக குறையும். அவர் அதனை முயற்சிக்கலாம். தவிர்க்க இயலாத சூழலில் தனிநபர் கடன் வாங்கியும் சிலர் அடைக்கிறார்கள். ஆனால் ரிஸ்க் மற்றும் வட்டி அதிகம்.. எனினும் பணத்தை சேமிக்க தெரியாதவர்கள் இந்த வழியினை அதிகம் தேர்வு செய்கிறார்கள்.
-
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Rate Today: வரலாறு காணாத அளவு சரிந்த தங்கம் விலை.. இன்று வந்த மெகா இன்ப செய்தி! நகை பிரியர்களே ரெடியா! -
SGB தங்கப் பத்திரம் வைத்திருப்பவரா நீங்க? லாபத்தில் கைவைக்கும் புதிய வரி விதிப்பு.. இதோ முழு விபரம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications