கமல்ஹாசன் தலைமையில் கூட்டணியா? சென்னை ஆழ்வார்பேட்டையில் அவசர மீட்டிங்காமே.. அப்ப திமுக? கவனித்த பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டம் இன்றே நடப்பதாக தெரிகிறது. அநேகமாக கூட்டணி குறித்தும் இன்றைய தினமே முடிவெடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்பி தேர்தல் விரைவில் வரப்போகிறது.. இதனால் அரசியல் கட்சிகள் மும்முரமாகி வருகின்றன.. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

Can Kamal haasan joining hands with DMK and emergency meeting of mnm party today in Chennai Alwarpet

மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23ந்தேதி காலை 11.30 மணியளவில் நடைபெறும். அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

ஆலோசனை: இந்நிலையில், இன்றைய தினமே ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும், இன்றும் நாளையும் ஆலோசனை முடிந்ததுமே, கூட்டணி குறித்து முடிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மநீம செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ் சொல்லும்போது, "234 தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஒரு சில மண்டலத்துக்கு மட்டுமே மாவட்ட செயலாளர்கள் நியமிக்கும் பணி நிலுவையில் இருக்கிறது. தேர்தலும் நெருங்கி வருவதால், அவசர செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணிகள்: அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் இன்று ஜனவரி 22 மாலை 4 மணிக்கு புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டமும், நாளை ஜனவரி 23 காலை 11.30 மணிக்கு தமிழக நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவுள்ளது. கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியிட தலைமை திட்டமிட்டிருக்கிறது.

அதில் குறிப்பாக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கிறோம். மக்களவைத் தேர்தலையொட்டிய முக்கிய கலந்தாய்வு கூட்டமாக இந்த 2 நாள் செயற்குழு கூட்டம் இருக்கும் என்றார். இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து, இதுவரை 2 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. கடந்த 2019ல், 37 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 0.4 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது.. பிறகு, 2021ல் சட்டமன்ற தேர்தலில், 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது.

விமர்சனம்: இதுநாள்வரை கடுமையாக விமர்சித்து வந்த திமுகவுடன், இந்த முறை கூட்டணி சேரும் முயற்சியில் மநீம உள்ளதாக தெரிகிறது.. அதற்கேற்றபடி, கடந்த சில மாதங்களாகவே, திமுகவிடம் கமல்ஹாசன் நட்பு பாராட்டி வருகிறார்.. குறிப்பாக, சென்னை வெள்ளத்தின்போது, எதிர்க்கட்சிகள் எல்லாருமே திமுகவை கடுமையாக விமர்சித்தபோது, கமல் மட்டும் தமிழக அரசுக்கு ஆதரவான கருத்தை சொல்லியிருந்ததும் பலராலும் கவனிக்கப்பட்டது.

எனவே, வரும் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது.. அந்தவகையில், கமலுக்கு 1 சீட் வழங்கவும் திமுக தரப்பில் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், மநீம பொறுத்தவரை, 3 சீட் கேட்கும் முடிவில் இருக்கிறார்களாம். இதற்கு திமுக ஒப்புக்கொள்ளுமா? என்று தெரியவில்லை.

ஆதரவு கிடைக்குமா: இப்படிப்பட்ட சூழலில்தான், அவசரக் கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதில் தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தனித்து போட்டியிடலாமா அல்லது பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா? கூட்டணி அமைத்தால், மக்களின் ஆதரவு கிடைக்குமா? என்பது பற்றியெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல்கள் சொல்கின்றன. எதுவானாலும், நாளைக்குள் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+