"மீனாகுதே கருவாடு".. பாஜகவில் கார்த்தி சிதம்பரமா? இதென்ன புதுசா கிளம்பிருச்சே.. "அது"தான் காரணமா?
சென்னை: கார்த்திக் சிதம்பரம் குறித்த சில சந்தேகங்கள் சோஷியல் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், அவரது எதிர்கால அரசியல் எப்படி இருக்க போகிறது? ராகுல் காந்தியின் அணுகுமுறை இந்த விஷயத்தில் எப்படி இருக்க போகிறது? என்ற எதிர்பார்ப்புகள் எகிற வருகின்றன.
ராகுலுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு காங்கிரஸார் கொதித்துக் கிடந்த அதே நாளில், எம்பி கார்த்தி சிதம்பரம் காட்டிய ரியாக்ஷன் தமிழகத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தன்னுடைய சிவகங்கை மக்களவை தொகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாகவும் அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தாராம் காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம்.

கருப்புச் சட்டை
அவரது கடிதம் தனக்குக் கிடைத்ததாக பதில் போட்டிருந்தாராம் மோடி. இதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தார் கார்த்தி... இப்படி நாய் விவகாரத்துக்கு நன்றி தெரிவித்து மோடிக்கு ட்விட் செய்த விவகாரம் காங்கிரஸார் மத்தியில் பெரும் விவாதப்பொருளாகி வருகிறது.. இன்று காலையில் நேற்று பாராளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தியை, அங்கிருந்த சிலர் பாராளுமன்ற வாசலில் அவருக்கு கைகொடுத்தார்கள். அங்கே கருப்புச் சட்டை சகிதம் நின்ற கார்த்தியும் ராகுலுக்கு கைகொடுக்க முயன்றார்... ஆனால், அவரது முகத்தைக்கூட திரும்பிப் பார்க்காமல் ராகுல் விறு விறுவென உள்ளே சென்றுவிட்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத கார்த்தி படியைவிட்டு கீழே இறங்கி, ராகுல் செல்வதையே பார்த்தபடி நின்றார்... இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

கார்த்தி சிதம்பரம்
இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் மீதான அரசியல் நிலைப்பாடு குறித்த சந்தேகத்தை சிலர் எழுப்பி வருகிறார்கள்.. இதற்கு சமீபகாலங்களில், கார்த்திக் சிதம்பரத்திடம் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதையொட்டி நடந்த சில சம்பவங்களையும் உதாரணமாக சொல்கிறார்கள்.. அதேசமயம், கடந்த 3 மாதங்களில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த 2 பேட்டிகளையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. 5 மாநில ரிசல்ட் வந்திருந்த சமயம், கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்பது, காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லை.. அதனால் கட்சியை சீரமைத்து மாற்றியமைக்க வேண்டும்.. சசிதரூர் கூறியதைப்போல் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

யதார்த்த உண்மை
நடந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் எதிர்பார்த்தபடி இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்கும் தனி அரசியல் இலக்கணப்படி முடிவுகள் வந்துள்ளன. பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியின் அமைப்பு, கட்டுமான வசதிகள் இல்லை. காங்கிரஸ் கட்சியை வலுவான அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவிற்கு அதிகம் செல்வாக்கு இருப்பதையே இந்த ரிசல்ட் காட்டுகிறது... காங்கிரஸை விட அவர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது, இது யதார்த்தமான உண்மை" என்றார். கார்த்தி சிதம்பரம் இப்படி கூறியிருந்தது, பாஜகவை உயர்த்திப்பிடித்து, சொந்த கட்சியை விமர்சிப்பது போல அப்போது பார்க்கப்பட்டது..

ஈவிஎம் மிஷின்
அதேபோல, காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த தன்னுடைய கருத்தை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.. "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து... ஆனால், கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம்.,. அது பற்றியெல்லாம் என்னால் பேச முடியாது.. நான் ஆரம்பத்தில் இருந்தே இதைதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோமே.. அதையும் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்..

இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரமானது எப்போதுமே நெட்வொர்க் தொடர்புகள் எதுவும் இல்லாமல் தனித்து இயங்கக்கூடியது... அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது" என்று கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியிருந்தார்... அதாவது, ஈவிஎம். இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து, காங்கிரஸ் கட்சியினர் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும்நிலையில், கார்த்தி சிதம்பரம், மின்னணு வாக்கு இயந்திரங்களை எந்த நெட்வொர்க் மூலமும் மோசடியாக இயக்க முடியாது என்று கூறியிருந்ததும், சொந்த கட்சியினரை உற்றுகவனிக்க வைத்தது..

நெளிந்த திமுக
அதுமட்டுமல்ல, திமுகவின் திராவிட மாடல் என்றால் என்ன? என்று கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் ஒருமுறை கேட்டிருந்தனர்.. அதற்கு கார்த்திக் சிதம்பரம், "திராவிட மாடல் என்ன என்பதற்கு அறிஞர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.. தமிழகத்தில் அவர்களுடைய அரசாங்கம் அவர்களுடைய செயல்பாட்டை வரவேற்கிறேன். ஆனால் இந்திய அளவிற்கு அவர்கள் ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். சொந்த கட்சி, மற்றும் கூட்டணியை இப்படி மட்டம் தட்டி பேசிவிட்டாரே என்று கார்த்திக் சிதம்பரத்தின் மீது அதிருப்திகள் சிலசமயம் வெடித்தாலும், எப்போதுமே யாருக்காகவும் பயந்தது கிடையாது, மனதில் உள்ளதை பட்டென துணிச்சலுடன் பேசிவிடக்கூடியவர் கார்த்தி சிதம்பரம் என்ற ஆதரவுக் கருத்துக்களும் எழுந்து வருவதை மறுக்க முடியாது..!!

தோல்வி
அந்தவகையில், அதெல்லாம் கார்த்திக் சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றே வைத்துக் கொண்டாலும், பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவிக்கொண்டிருந்த நேரத்தில், அதிலும் காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தத்திலும், வேதனையிலும் மூழ்கி கொண்டிருந்த நேரத்தில், நெட்பிளிக்சிஸ் எந்த படம் பார்க்கலாம் எனக்கு பரிந்துரைக்கவும் என்று ட்விட்டரில் கேட்டிருந்ததை, கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்.. நீட் ரத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், ஆன்லைன் சூதாட்டம் தடை விதிப்பதற்கும், என்றிருந்த நிலையில், ராகுல் பதவி பறிக்கப்பட்டபோது, கேண்டி கிரஸ் விளையாட்டின் போட்டோவை கார்த்திக் பதிவிட்டதை ஒருபோதும் தங்களால் ஏற்கவே முடியவில்லை என்கிறார்கள்.

மாணிக்கம் தாகூர்
ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில், உட்கட்சி பூசலும் தலையெடுத்து வருகிறது.. குறிப்பாக மேலிட காங்கிரசுடன் எம்பி மாணிக்கம் தாகூர் கொண்டுள்ள நெருக்கம் மற்றும், எம்பி சீட் வாங்கும்போது ஏற்படும் நெருக்கடிகள், இதெல்லாம்கூட, சிதம்பரம் குடும்பத்துக்கு சமீபகாலமாக எரிச்சலை தந்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், சில மாதங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வெளியானது.. ஏதேச்சையாக கோவை ஏர்போர்ட்டில் சந்திக்கவும், கேஷூவலாகவும் இரு தலைவர்களும் இப்படி செல்பி கொண்டதாகவே கருதப்பட்டாலும், இந்த போட்டோ பலவித உறுத்தல்களை சீனியர் கதர்கள் மத்தியில் எழுப்பி சென்றது..

வருத்தம்
இப்போது, கார்த்திக் மீதான அதிருப்திகள் கட்சிக்குள் கூடியுள்ளதாகவும் தெரிகிறது.. நேற்றைய தினம், ராகுல்காந்தி, கார்த்தி சிதம்பரத்துக்கு கை கொடுக்காமல் சென்றது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.. கார்த்திக்கின் செயல்பாடு, தொண்டர்களுக்கே கோபம் வந்துள்ளது என்றால், ராகுலுக்கும் நிச்சயம் அது வருத்தத்தையே தந்திருக்க செய்யும் என்கிறார்கள் ஒரு சாரார்.. ஆனால் மற்றொரு சாராரோ, ராகுல் யதேச்சையாக கார்த்திக்கை கடந்து சென்றிருக்கலாமே தவிர, திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கம் ராகுலுக்கெல்லாம் வராது என்கிறார்கள்..

சுழலும் அச்சாணி
அதுமட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி முடிவடைய உள்ள நிலையில், கார்த்திக்கை அந்த பதவியில் அமரவைக்க ப.சிதம்பரம் முயற்சித்து வருவதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. கடந்த காலங்களில் இதுவரை, தனது மகனை தலைவராக்குங்கள் என ப.சிதம்பரம் சிபாரிசு செய்ததே இல்லை. முதல்முறையாக சிபாரிசு செய்துள்ளார். ஆனால், இது குறித்து இன்னும் சோனியாவும் ராகுலும் முடிவெடுக்கவில்லை... இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், கார்த்தி சிதம்பரம் அரசியல் நிலைப்பாடு அடுத்து என்னவாக இருக்க போகிறது? என்று தெரியவில்லை.. அதைவிட முக்கியமாக, அமலாக்கத்துறை வழக்குகள், சிபிஐ பிரச்சனைகள் போன்றவைகளையும் முன்வைத்து, சோஷியல் மீடியாவில் இந்த விஷயத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் கதர்கள்.. என்ன நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்..!!
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு










Click it and Unblock the Notifications