புஸ்ஸாயிருமோ மொத்தமா.. ஆசைப்படலாம், ஆனாலும் இப்படியா? திமுகவின் அடிமடியிலேயே "கை".. கவனித்த மேலிடம்
சென்னை: வருகிற பாராளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் இடங்கள் கேட்போம் என்று இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்ததுமே, டக்கென திரும்பி பார்த்துள்ளது திமுக.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த முறையைவிட இந்த முறை திமுகவிடம் அதிக சீட் கேட்போம், காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றார்.
எடப்பாடி பழனிசாமி: தேர்தல் நெருங்கிவிட்டதால், கூட்டணி ரேட்டை உயர்த்தவே அழகிரி இவ்வாறு பேசியதாக கருதப்பட்டது.. ஆனால், காங்கிரசுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்கப்போவதாக அரசல் புரசலாக செய்திகள் வட்டமடித்தன. ஒருபடி மேலேபோய், ராகுலுக்கு போனை போட்டு, எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும் சொன்னார்கள்..

இதெல்லாம்கூட கூட்டணி ரேட்டை உயர்த்தவே பேசப்படுவதாக கருதப்பட்டது. மேலும், திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க, அதிமுகவின் ஐடி விங் இப்படியான செய்திகளை கிளப்பி விட்டதாகவும் முணுமுணுக்கப்பட்டது.
கூட்டணி புகைச்சல்: ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ் ஒருமுறை பேசும்போது, "எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், அரசியல் ஆலோசகர் சுனிலுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார். விரைவில் காங்கிரசுடன் எடப்பாடி பழனிசாமி சேர போகிறார்" என்று கொளுத்தி போடவும், திமுக அதிர்ந்தே போனது.
திமுககூட்டணியுடன் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்று அழகிரி விளக்கம் தந்துவிட்டு போனாலும், கூட்டணி புகைச்சல் என்பது தொடர்ந்து கொண்டேயிருப்பதாக சொல்கிறார்கள். தங்களுக்கு 15 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் டிமாண்டு செய்ய முடிவெடுத்துள்ளதாம்..
புது கோரிக்கை: 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திலும் இதே கோரிக்கைதான் வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுகவிடம் இந்த முறை 15 சீட் வாங்க வேண்டும், சிட்டிங் தொகுதிகளில் மாற்றம் இருக்கக்கூடாது, கூடுதலாக 5 சீட்டுகள் ஒதுக்க வேண்டும். ஆக மொத்தம் 15 சீட்டுகள் திமுகவிடம் வாங்க வேண்டும்" என்று டெல்லி மேலிடம் உத்தரவிட்டிருக்கிறதாம்.
இன்று செய்தியாளர்களிடம் பேசும்போதும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் இடங்கள் கேட்போம் என அழகிரி தெரிவித்துள்ளதை திமுகவும் கவனிக்காமல் இல்லை.
சிறுபான்மையினர்: கடந்த தேர்தலில், காங்கிரசுக்கு எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டுக்களை அள்ளி கொடுத்தது திமுக.. இதனால், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு, போதுமான சீட் வழங்க முடியாமல், உதயசூரியன் சின்னத்தில், அவர்களை நிற்க வைக்க வேண்டிய நிலைமையும் திமுகவுக்கு ஏற்பட்டது. அதனால்தான், இந்த முறை காங்கிரசுக்கு அதிக சீட்களை தரும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்கிறார்கள். எனவே, ஏற்கனவே வழங்கியதைவிட, குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே சீட் ஒதுக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.
இதனை காங்கிரஸ் எப்படி அணுக போகிறது என்று தெரியவில்லை. சிறுபான்மையினர் ஓட்டுக்களை அள்ள வேண்டுமானால், காங்கிரஸை அவ்வளவு எளிதாக திமுகவால் தவிர்த்து விட முடியாது.. அதுவும், இந்த முறை சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறி வைத்து, எடப்பாடி பழனிசாமி தீவிரமாகி உள்ளதால், காங்கிரஸ் விஷயத்தில் திமுக எடுக்க போகும் முடிவு, பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.
உட்கட்சி பூசல்: கூட்டணி, சீட் விவகாரங்கள் ஒருபுறம் இப்படி நடந்து கொண்டிருந்தாலும், லோக்கல் பாலிடிக்ஸ் பிரச்சனையில் காங்கிரஸ் உழன்றபடியே உள்ளது.. தலைமை பதவிக்கு போட்டா போட்டிகள் தொடர்கின்றன..
சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லும்போது, "எனக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நேற்று வந்த சினிமா நடிகர்கள் எல்லாம் ஆசைப்படும்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் நான் ஆசைப்படுவதில் தப்பில்லையே" என்றார். அதுமட்டுமல்ல, அவரது பிறந்தநாளில் அவரது ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் "நாளைய முதல்வரே" என்று போஸ்டரை ஒட்டி அமர்க்களப்படுத்தி விட்டார்கள்.
நாளைய முதல்வர்: ஒருபக்கம் முதல்வர் ஆசை, இன்னொருபக்கம் 15 சீட் என காங்கிரஸ் தெறிக்க விட்டுக் கொண்டிருப்பதை, திமுக அமைதியாக கவனித்து வருகிறது. இதுகுறித்து சோஷியல்மீடியாவிலும் கருத்துக்களும், விவாதங்களும் கிளம்பி உள்ளன.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications